திருச்செந்தூர்-பெங்களூர் ஆரஞ்ச் டிராவல்ஸ் பஸ்சில் அட்ராசிட்டி.. பெண் பயணியின் திடுக் அனுபவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி வழியாக பெங்களூர் செல்லும், ஆரஞ்ச் டிராவல்ஸ் (Orange travels) எனும் ஆம்னி பேருந்தில் பெண் பயணி ஒருவர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பயணிகளை ஒரு சில பேருந்து நிறுவனங்கள் எப்படி நடத்துகின்றன என்பதை தெரிவிப்பதாக உள்ளது இந்த சம்பவம்.

 A passenger shared disaster experience about travelling in Orange travels

இதுகுறித்து சுரேகா என்ற பெண் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஆரஞ்ச் டிராவல்ஸின் படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்தில், திருச்செந்தூர் டூ பெங்களூருக்கு (Tiruchendur to Bangalore Orange Bus) பயணம் செய்தேன்.

சுத்தம் இல்லை: பஸ்சின் உள்ளே ஏறி படுத்ததுமே ஷாக் ஆனேன். ஏனெனில் பிற பஸ்களுடன் ஒப்பிட்டால் இது அழுக்கடைந்து போயிருந்தது. கழுவவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. ஏசி கூலிங்கே போதவில்லை. ஏசியை கூட்டி வையுங்கள் என்று டிரைவரிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் அதைக்கூட செய்யவில்லை. இரவு சாப்பிட பஸ்சை நிறுத்திய டிரைவர் ஏசியை ஆப் செய்துவிட்டார். வேறு எந்த டிராவல்சிலும் இப்படிச் செய்ய மாட்டார்கள். (ஏனெனில் ஏசி பஸ்சில் ஏசியை நிறுத்தினால் உள்ளே மூச்சுவிட சிரமமாகிவிடும்.)

 A passenger shared disaster experience about travelling in Orange travels

தூக்கம் போச்சு: இப்படியே சமாளித்து போனபோது, திடீரென அதிகாலை 3 மணிக்கு பஸ்ஸை டிரைவர் நிறுத்தினார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த எங்களை வேறு பஸ்ஸிற்கு செல்லுமாறு நிர்பந்தித்தார். அதே ஆரஞ்ச் டிராவல்சின் மற்றொரு பேருந்துக்கு நாங்கள் நள்ளிரவில் நடுக்காட்டில் மாற்றப்பட்டோம். நாங்கள் நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததால் களைப்பாக இருந்தது, தூக்கம் அவசியமானதாக இருந்தது. ஆனால் அதை கெடுத்துவிட்டார்கள்.

பயன்படுத்திய பெட்ஷீட்டுகள்: அந்த மாற்று பேருந்தில் ஏற்கெனவே பயணிகள் இருந்தனர். அவர்கள் எங்கள் பஸ்சுக்கு மாற்றப்பட்டு பந்தாடப்பட்டனர். இதனிடையே அந்த பயணிகள் பயன்படுத்திய தலையணைகளையும் பெட்ஷீட்டுகளையும்தான் நான் பயன்படுத்த வேண்டியதாயிற்று. (வேறு ஒரு ஆண் அந்த பெட்ஷீட்டை அவ்வளவு நேரம் பயன்படுத்தியிருக்க கூடும். அதை ஒரு பெண் பயணி பயன்படுத்த வேண்டியிருந்தால் ஏற்படும் அசவுகரியம், குமட்டல் போன்றவற்றை நினைத்து பார்க்க வேண்டியுள்ளது). பொதுவாக ஒருமுறை பயணி பயன்படுத்திய பிறகு துவைத்துதான் அடுத்த பயணத்திற்கு தருவது பிற டிராவல்ஸ்களின் வழக்கம். தூக்க கலக்கத்தில் அவசர அவசரமாக பேருந்து மாற்றியதால் பெட்டில் வைத்திருந்த சார்ஜர்கள், ஹெட்போன்களை சிலர் மறந்து விட்டுவிட்டனர். குடிக்க வைத்திருந்த தண்ணீர் பாட்டில்களை எல்லாம் விட்டுவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தனர். அதிகாலையில் அந்த இடமே போர்க்களம் போல இருந்தது.

தேவையில்லாத குழப்பம்: இப்படி அநாவசியமாக பயணிகளின் தூக்கத்தை கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இது முழுக்க முழுக்க ஆரஞ்ச் டிராவல்ஸின் தவறுதான்.

 A passenger shared disaster experience about travelling in Orange travels

இனி ஆரஞ்ச் பஸ் வேண்டாம்: எந்த சூழலிலும் ஆரஞ்ச் டிராவல்ஸில் பயணிக்க வேண்டாம். இது ஒரு மோசமான அனுபவம். நான் இனி யாருக்கும் இந்த பேருந்தில் பயணிக்க சொல்ல மாட்டேன். எனவே நீங்கள் அந்த நிறுவனத்தின் பேருந்தில் பயணிக்காதீர்கள். உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள். இவ்வாறு அந்த பயணி தனது பதிவில் கூறியுள்ளளார்.

ஸ்லீப்பர் கோச்சுக்கு கூடுதல் பணம் கொடுத்து பயணிப்பதே இரவு நேரத்தில் தூக்கம் கெடக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால் இந்த நிறுவனத்தினர் அதிகாலை 3 மணிக்கு போய் இவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். வீடுகளில் கூட அடுத்தவர் பயன்படுத்திய பெட்ஷீட்டை பயன்படுத்த மாட்டோம். ஆனால் இந்த பேருந்தில் அடுத்தவர் பயன்படுத்தியதை ஒரு பெண் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து மாறியபோது அந்த பெண் எடுத்த புகைப்படத்தையும் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+