என்னது.. மோடி அரசு மீது தமிழக மக்களுக்கு இவ்வளவு அதிருப்தியா? சூட்டை கிளப்பும் டைம்ஸ் நவ் சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக- காங். அணி 158 இடங்களில் வெல்லும் என்று டைம்ஸ் நவ்- சிவோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. அதிமுக- பாஜக அணி 65 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 140 இடங்களில் இடது முன்னணி 82-ல் வெல்லுமாம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக 38.4% பேர் ஆதரவு என்றும் டைம்ஸ் நவ் சர்வே கூறியுள்ளது.

திருப்தி

திருப்தி

இந்த கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்த அளவுக்கு திருப்தி அடைந்துள்ளனர்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதில் மக்கள் கூறியிருப்பதை பாருங்கள்: மிகவும் திருப்தி - 12.07%, ஓரளவிற்கு திருப்தி - 22.28% இவ்வாறு மக்கள் கூறியுள்ளனர்.

அதிருப்தி

அதிருப்தி

திருப்தி இல்லை - 53.26%, தெரியாது / சொல்ல முடியாது - 12.39% இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரளவுக்கு திருப்தி மற்றும் மிகவும் திருப்தி ஆகிய இரண்டையும் கூட்டினால் சுமார் 35 சதவீதம் பேர் மத்திய அரசு மீது திருப்தியாக இருப்பதை போல இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

திருப்தியில்லை

திருப்தியில்லை

அதே நேரம் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மோடி அரசின் செயல்பாடுகளில் திருப்தியில்லை எனக் கூறியுள்ளனர். கேஸ் சிலிண்டர் விலையேற்றம், பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதம்

தமிழகத்தில், அதிமுக- பாஜக அணிக்கு 32.1% வாக்குகள் கிடைக்கும் என்கிறது டைம்ஸ்நவ் சர்வே. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 43.7% வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+