இந்த போட்டோவ பாருங்க.. 6 வகை புருவங்கள்.. உங்களது குணங்களை நீங்களே அறிய நல்ல வாய்ப்பு!
சென்னை: ஒருவரின் புருவங்களை அவரது குணாதிசயங்களை வெளிப்படுத்துமாம். உங்களின் புருவங்கள் எப்படி உள்ளது? உங்களின் குணாதிசயங்கள் என்ன? என்பதை அறிந்து கொள்ள இந்த செய்தியை படியுங்கள்.
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தினமும் ஏராளமானவர்களை சந்தித்து வருகிறோம். இந்த வேளையில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் குணாதிசயங்களை அறிந்தே பழகுகிறோம் அல்லது பழக முயற்சிக்கிறோம்.
இதுஒருபுறம் இருக்க பலருக்கும் இன்னும் கூட தங்களை பற்றி முழுமையாக தெரியாத நிலை உள்ளது. இதனால் தான் பல சந்தர்ப்பங்களில் நாம் அனைவரும் நம்மை பற்றி இன்னொருவர் கூறுவதை ஆர்வமாக கேட்கிறோம்.

புருவங்களை பார்த்து குணாதிசயங்கள்
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அதாவது ஒருவரின் புருவங்களே அவர்களின் குணாதிசயங்களை காட்டிவிடுமாம். அதெப்படி புருவங்கள் ஒருவரின் குணாதிசங்களை காட்டிவிடும் என கேள்வி எழுப்புகிறீர்களா?. வாங்க.. உங்களை பற்றி உங்களின் புருவங்கள் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

6 வகையான புருவங்கள்
அதன்படி செய்தியில் உள்ள படத்தை பாருங்கள். இதில் மொத்தம் 6 வகையான புருவங்களின் படங்கள் உள்ளன. இதில் உங்களின் புருவங்கள் எதனுடன் பொருந்துகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு அதுபற்றிய கீழ்கண்ட விஷயங்களை படித்து அது உண்மையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முதல் படம்
முதல் படத்தில் அடர்த்தியான புருவங்கள் உள்ளன. இந்த புருவங்கள் இருந்தால் நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள். நீங்கள் ரசனை மிகுந்தவர்கள். ஒருவர் எப்படி இருந்தாலும் அவரை மாற்ற முயலாமல் அவரின் நேர்மறையான செயல்பாடுகளை விரும்பும் நபராக இருப்பீர்கள். மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி நீங்கள் கவலைப்படமாட்டீர்கள். நீங்கள் அதிக நம்பிக்கை கொண்டவர். நீங்கள் லாஜிக்காக யோசித்து செயல்படும் திறன் பெற்று இருப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுக்கமாட்டீர்கள். இருப்பினும் நினைக்கும் செயல் நடக்காவிட்டால் விரக்தியடைவீர்கள்.

2வது படம்
2வது படத்தில் நீங்கள் காண்பது என்பது மெல்லிய புருவங்கள். இந்த புருவங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிகமாக சிந்திக்கும் நபராக இருப்பீர்கள். நீங்கள் கொஞ்சம் தன்னம்பிக்கை இல்லாதவராக இருப்பீர்கள். இருப்பினும் வளரவளர தன்னம்பிக்கையுடன் இருப்பதாக காட்டி கொள்ள முயற்சிப்பீர்கள். நீங்கள் முடிவெடுப்பதில் சற்று சிரமம் அடைபவராக இருக்கலாம். இந்த விஷயத்தில் பிறரின் உதவி உங்களுக்கு தேவைப்படலாம். மேலும் குறிப்பிட்ட செயலை செய்தால் அது சரியா? என்பது பற்றி இன்னொருவரிடம் கேட்கும் நபராக இருக்கலாம்.

3வது படம்
நீங்கள் 3வது படத்தில் பார்ப்பது என்பது வளைந்த புருவமாகும். இத்தகைய புருவங்களை கொண்டிருப்பவர் லட்சியம், பொறுமையுடன் திறமையை கொண்ட தலைமை பண்புகளை கொண்டவராக இருப்பர். அனைவரும் உங்களை கவனிக்க வேண்டும் என்பதை நீங்கள் விரும்பும் நபராக இருக்கலாம். அதன்படி அனைவரின் கவனத்தை ஈர்க்கும் நபராக இருப்பீர்கள். ஆனாலும் உங்களை ஒருவரால் எளிதாக அணுக முடியாது. நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர். மேலும் உங்களை ஒருவரால் எளிதாக கவர முடியாது. இதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வைப்பீர்கள்.

4வது படம்
4வது படம் என்பது நேரான புருவமாகும். உங்களுக்கு இத்தகைய புருவங்கள் இருந்தால் நீங்கள் லாஜிக்காக யோசிப்பீர்கள். ஆளுமைப்பண்புகள் இருக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் கவனம் செலுத்துவீர்கள். அதிகமாக சிந்தீப்பீர்கள். நீங்கள் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் முறையை ஒன்றொடு ஒன்றாக இணைத்து குழப்பி கொள்வது இல்லை. அதாவது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும், தொழில் முறை சார்ந்த வாழ்க்கையை தனித்தனியாக பிரித்து வாழ்வீர்கள். உறவு முறைகளை உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவது என்பது அரிதாகவே உங்களுக்கு இருக்கும். நீங்கள் பிடிவாதம் கொண்டவராகவும், அதேநேரம் நேர்மையானவராகவும் இருக்கலாம். எந்த இடமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் உண்மையை மட்டுமே சொல்லும் குணம் கொண்டவராக இருப்பீர்கள்.

5வது படம்
5வது படத்தில் உள்ள 2 புருவங்கள் ஒன்றொடு ஒன்று சேர்ந்து உள்ளன. இதனை ஜாயின்ட் புருவங்கள் என்பார்கள். இந்த புருவங்களை நீங்கள் பெற்றிருந்தால் உலகம் உங்களை எப்படி பார்க்கிறது என்பது பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை. இதனால் நீங்கள் நீங்களாகவே உங்களின் தனித்துவ குணாதிசயத்தை வெளிப்படுத்தி வாழ்வீர்கள். உங்களுக்கு ‛கிரியேட்டிவிட்டி' திறன் இருக்கும். நீங்கள் கலைத்துறையில் இல்லாமல் இருந்தாலும் கூட உங்களுக்கு பிடித்த கலையை பின்பற்றி வருவீர்கள். கனிவான குணம் கொண்ட நீங்கள் சில சமயங்களில் பிறரை மன்னிக்கவே மாட்டீர்கள். அதாவது உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதனை மேற்கொள்ளும் நபர்கள் மீது கடுமையாக கோபமடையும் குணம் படைத்தவராக நீங்கள் இருக்கலாம்.

6வது படம்
நீங்கள் 6வது படத்தில் பார்ப்பது என்பது இரு புருவங்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளதை காட்டுகிறது. இத்தகைய புருவங்களை நீங்கள் கொண்டிருந்தால் இது உங்களுக்கு தான். நீங்கள் மிகவும் அன்பான நபராக இருப்பீர்கள். ஒருவரின் பேச்சு, நடத்தையை நன்றாக கவனிப்பீர்கள். எதையும் நேரடியாக பேசும் திறன் கொண்டவராக இருப்பீர்கள். இதனால் வெளியாட்களால் நீங்கள் எளிதில் பாதிக்கப்படலாம். நீங்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டு அல்லது அதிக பயத்தில் முடிவுகள் எடுக்கலாம். மேலும் சில சந்தர்ப்பங்களில் எத்தகைய திட்டமும் இன்றி நுஈங்கள் செயல்படலாம். சொல்லப்போனால் எதிர்கால திட்டங்கள் இன்றி கூட நீங்கள் வாழ்க்கையை முன்னெடுக்கலாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications