சென்னை தி நகரில் தனியாக வசித்த 80 வயது கோடீஸ்வர மூதாட்டி.. நடுங்க வைத்த வேலைக்கார பெண்ணின் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தியாகராயநகர், பாண்டிபஜார் குப்புசாமி தெருவில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வீட்டில் பிரபல புவியியல் ஆராய்ச்சி நிபுணர் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி ராதா (80 வயது) உடன் வசித்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி காலமான நிலையில், ராதா தனியாக வசித்து வந்தார். அண்மையில் அவர் அணிந்திருந்த தங்க-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அத்துடன் அவர் வீட்டில் இருந்த கோலம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வீட்டு வேலைக்காரப் பெண் சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.

உண்மையில் யாருமில்லாமல் தனியாக வசிப்பது என்பது முதுமையில் கொடுமையானது. முதியோர் இல்லத்திற்கு கூட போய்விடலாம்.. ஏனெனில் அங்கு கூட அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். ஆனால் தனிமையில் வாழ்வது கொடுமையிலும் கொடுமை.. வேலைக்கு ஆட்களை வைத்து கொண்டு சென்னையில் தனியாக வசித்த மூதாட்டி அல்லது முதியவர்களை ஒரு சம்பவம் நடுங்க வைத்துள்ளது. நம்பிக்கையானவர்களே பணத்திற்காக நயவஞ்சகமாக மாறுவது அடிக்கடி பார்ப்பீர்கள். பச்சோந்திகளை போன்றவர்களை முதுமையில் உள்ளவர்கள் அடிக்கடி சந்திக்க நேரிடலாம் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாகும்.

How the domestic worker was caught in the gold jewelry theft case in Chennai s T Nagar

சென்னை தியாகராயநகர் பாண்டிபஜார் குப்புசாமி தெருவில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் 80 வயதாகும் ராதா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார். இவர் பிரபல புவியியல் ஆராய்ச்சி நிபுணர். இவருக்கு பாலாஜி, ராம்ஜி என்ற 2 மகன்களும், சுஜாதா எனும் மகளும் உள்ளனர். பாலாஜி அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்கிறார். அங்கே குடும்பத்துடன் வசிக்கிறார். 2-வது மகன் ராம்ஜி, தனியார் விமான நிறுவனத்தில் பைலட்டாக வேலை செய்கிறார். சென்னையில் அவரும் குடும்பத்தோடு தனியாக வாழ்ந்து வருகிறார்

மகள் சுஜாதா டெல்லியில் வக்கீல் தொழில் செய்கிறார். அவரது குடும்பமும் டெல்லியில் இருக்கிறது. வசதியான மூதாட்டியான ராதா தனக்கு உதவியாக வேலைகளை செய்வதற்காக சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த அம்மு (31) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார். அவருக்கு மாத சம்பளமாக ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளார். அம்மு தினமும் காலை 7 மணிக்கு வேலைக்கு வந்து விடுவார். ராதாவுக்கு சமையல் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார்.

நேற்று காலையில் ராதா வழக்கம்போல வேலைக்கு வந்தார். வீட்டில் அவர் கண்ட காட்சியை பார்த்து கூச்சல் போட்டார். ராதா வீட்டு சோபா கட்டிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அம்முவின் கூச்சலை கேட்டு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்தார். ராதா கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மூக்கில் இருந்து அதிக அளவில் ரத்தம் வந்திருந்தது. ராதா கொலை செய்யப்பட்டது குறித்து அவரது மகன்களுக்கும், மகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்த உடன் பாண்டிபஜார் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ஜூமாலும் போலீஸ் படையுடன் வந்து விசாரித்தார். ராதா அணிந்திருந்த 15 பவுன் தங்க-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளைபோன நகைகளில் 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் வைர கம்மல், வளையல்கள் இருந்தன.

கொலை செய்யப்பட்ட ராதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்த போலீசார், வேலைக்கார பெண்ணிடம் இருந்து விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணையில் வேலைக்கார பெண் அம்மு மீது சந்தேகம் ஏற்பட காரணம்.. முன்தினம் வேலைக்கு வரவில்லை. நேற்றுதான் வேலைக்கு வந்து ராதா கொலை செய்யப்பட்ட தகவலை தெரிவித்திருந்தார். ராதா நேற்று முன்தினமே கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை சுற்றி ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டிருந்தது. ஒருநாள் தள்ளி வேலைக்கு வந்தது ஏன் என போலீஸ் விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து தீவிர விசாரணைக்கு பிறகு அவர்தான் ராதாவை கொலை செய்து, தங்க-வைர நகைகளை கொள்ளை அடித்தது தெரியவந்தது. அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டிருக்கிறது.. மீதமுள்ள தங்க-வைர நகைகளை மீட்கும் பணி நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். கொலை-கொள்ளைக்கு உடந்தையாக மேலும் இருவர் செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் அவர்களையும் தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடந்து என்பது என்று மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+