Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை ரேஷன் அட்டை.. நீங்க புதுசா கல்யாணம் ஆன ஜோடியா? ரேஷன் கார்டு வேணுமா? அப்ப இதை உடனே முடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டையில் திருத்தம் செய்து கொள்வது போலவே, புதிய உறுப்பினரை எப்படி இணைக்க வேண்டும் தெரியுமா? புதிதாக திருமணமான தம்பதிகள், புதிய ரேஷன் கார்டு பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இன்றைய சூழலில், ரேஷன் அட்டைகள் நமக்கு தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. இந்த அட்டைகள் இருந்தால் மட்டுமே, அரசு வழங்கும் சலுகைகளை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.. 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதன் மூலம் பல நன்மைகளை மக்கள் பெற்று வருகிறார்கள்.

How to Add New Member in you Ration Card online and Major rules to get new ration card for newly married couple

இந்த ரேஷன் கார்டுகள் மிக முக்கியமான ஆவணம் என்பதால், ஆன்லைனிலும் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.. ரேஷன் கார்டுகளில் உங்களது பெயர் சேர்க்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்றால், ஆன்லைனிலேயே வசதி உள்ளது..

அதேபோல உங்களது ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால், அதற்கும் ஆன்லைனிலேயே வசதி உள்ளது. உங்களது ஊர் மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமானாலும், அதற்கும் ஆன்லைனிலேயே வசதி உள்ளது.

புதிதாக உறுப்பினரை ரேஷன் அட்டையில் சேர்க்க:

- உதாரணத்துக்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயரை நீக்க வேண்டுமானால் அல்லது சேர்க்க வேண்டுமானால், https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டில் இதற்கான நடைமுறையை மேற்கொள்ளலாம்.

- மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதை கிளிக் செய்து, அதில் உறுப்பினர் பெயர் சேர்க்க அல்லது நீக்க என சேவைகளுக்கான ஆப்ஷன்களையும் கிளிக் செய்ய வேண்டும்.

- "உறுப்பினரை சேர்க்க" என்பதை கிளிக் செய்து, பிறகு, உங்களது ரேஷன் கார்டில் தரப்பட்டிருக்கும் மொபைல் நம்பர், கேப்ட்சா குறியீடு தந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

- பதிவு செய்ததுமே உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதை டைப் செய்தால், இன்னொரு பக்கத்திற்கு செல்லும். அதில் ஏற்கெனவே உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

- அந்த விவரங்களுக்கு கீழ் "குடும்ப உறுப்பினர் சேர்க்கை" என்பதை கிளிக் செய்து அதில் பெயர், பாலினம், பிறந்த தேதி, உறவு முறை போன்றவைகளையும் பதிவிட்டு உறுதிப்படுத்துதல் வேண்டும்.

ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர் பெயர் மாற்றம்:

- https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும். அதில் குடும்ப தலைவர் என்ற Option-யை கிளிக் செய்ய வேண்டும்.

- பிறகு உங்களது ரேஷன் அட்டையில் வழங்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பிறகு கேப்ட்சா குறியீடு பதிவு செய்ய வேண்டும்.

- இப்போது உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதன்பிறகு உங்களது பக்கம் login ஆகிவிடும்.. பிறகு குடும்பத்தலைவர் மாற்றம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

புதியதாக திருமணம் ஆனவர்கள் பெயர் சேர்க்க:

திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் அட்டையில் கட்டாயம் சேர்க்க வேண்டும். அல்லது தனி அட்டையாக கணவன், மனைவி இருவரும் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தனி அட்டை: தனி கார்டு அட்டை என நினைத்தால் முதலில் ஏற்கெனவே உள்ள வீட்டு ரேஷன் கார்ட்டில் இருந்து உங்களின் பெயரை நீக்க வேண்டும். அப்படி பெயரை நீக்கிய பிறகே, புதிய கார்டில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். இந்த பெயர் நீக்கத்தையும் ஆன்லைனிலேயே செய்து முடிக்கலாம்.

https://tnpds.gov.in/ இந்த லிங்கில் சென்றால் ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து சேவைகளும் இடம் பெற்று இருக்கும். இதிலேயே புதிதாக திருமணம் ஆனவர் பெயர்களை சேர்க்கலாம்.

ஆவணங்கள்: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தம்பதி இருவருடைய ஆதார் கார்டும் தேவை. அதோடு, தனியாக வசிப்பதற்கு ஆதாரமாக கேஸ் சிலிண்டர் பில்லை வழங்க வேண்டும். முகவரி சான்றுக்கு இந்த ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படும். இதைத்தவிர வீட்டு வாடகை பத்திரம் போன்ற இருப்பிட ஆவணங்களையும் வழங்க வேண்டியிருக்கும். இந்த ஆவணங்களுடன் சேர்த்து விண்ணப்பிக்கும்போது புதிய ரேஷன் கார்டு வாங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+