அச்சச்சோ.. ஓட்டுநர் உரிமத்தை தொலைச்சுட்டீங்களா? ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி?
சென்னை: ஓட்டுநர் உரிமத்தை தொலைத்தவர்கள் அதை திரும்ப பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலிருந்தபடியே அதை ஆன்லைன் மூலம் எளிதில் பெறலாம். எப்படி என்பதை பார்ப்போம்.
18 வயதுக்கு மேற்பட்டோர் வாகனங்களை ஒட்டுவதற்கு அனுமதி அளித்து இருக்கும் இந்திய சட்டம், அவர்கள் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தேவைகளுக்கான அடையாள அட்டையாகவும் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட முக்கியமான ஆவணத்தை தொலைத்துவிட்டு எப்படி பெறுவது என்று தெரியாமல் பலர் தவிக்கின்றனர். அதை வீட்டில் இருந்தே பெற முடியும்.

ஆன்லைனில் ஓட்டுநர் உரிம நகலை பெறுவதற்கு படிவம்-2 (Form-2) LLD, ஓட்டுநர் உரிமத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வயதுச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றை வைத்து இருக்க வேண்டும். டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க, முதலில் https://parivahan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு, 'ONLINE SERVICES' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் 'DRIVING LICENCE RELATED SERVICES' என்பதைத் கிளிக் செய்யவும்.
அடுத்து 'தமிழ்நாடு' மாநிலத்தைத் தேர்வு செய்யவும். அதன் பின்னர், புதிதாக திறக்கும் பக்கத்தில் 'DRIVING LICENCE' என்ற பக்கத்திற்குச் சென்று, 'SERVICES ON DL (புதுப்பித்தல்/ நகல்/ AEDL/ IDB/மற்றவை)' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் CONTINUE என்ற பட்டனை அழுத்தி, உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணையும் உங்கள் பிறந்தநாளையும் பதிவிட வேண்டும். அதன் தொடர்ச்சியாக, பெறப்பட்ட டி.எல் விபரங்களில் இருந்து உங்கள் ஓட்டுநர் உரிமத்தைத் தேர்ந்தெடுத்து Continue என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு, உங்களின் மாநிலத்தின் பெயர் மற்றும் ஆர்.டி.ஓவை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தின் விவரங்களை உறுதிசெய்துவிட்டு, பின்னர் 'ISSUE OF DUPLICATE DL' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஏன் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை அங்கு நீங்கள் சொல்ல வேண்டும். இதனை அடுத்து நீங்கள் முன்பு பூர்த்தி செய்து வைத்து இருந்த விண்ணப்பப் படிவத்திற்கான பணத்தை செலுத்தி, அந்த விண்ணப்பத்தையும், ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications