Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ரூ.6.73 லட்சத்திற்கு வீடு.. தமிழக அரசு வழங்கும் சூப்பர் வசதி.. எப்படி பெறுவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் 22,049 குடியிருப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.6.73 லட்சத்திற்கு வீடு வழங்குகிறது. சென்னையில் அடுக்குமாடி வீட்டினை இந்த விலைக்கு வெளியில் வாங்கவே முடியாது.. இந்த வீட்டினை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் கடந்த 1970-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர் பகுதி குடிசைகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களுக்கு வீட்டு வசதியினை அளிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் ஏழை மற்றும் குடிசை வாழ் மக்களுக்கு மிக குறைந்த விலையில் வீடுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட ஆண்டகளுக்கு ஒருமுறை புதிய வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் ரூ.17 ஆயிரத்து 133 கோடி செலவில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 696 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

tn govt notification chennai house

கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 57 ஆயிரத்து 107 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் என்ற பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றினார். அத்துடன் அடுக்குமாடி குடியிருப்புகளில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், பணியினை துரிதப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் 29 ஆயிரத்து 439 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படடுள்ளது. அடுத்த ஜூன் மாதத்திற்குள் 79 ஆயிரத்து 94 குடியிருப்புகள் கட்டி முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் 22,049 குடியிருப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் அசத்தல் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதன்படி குடியிருப்புகளை பெறுவதற்கு மக்கள் இனி அலைய வேண்டியதில்லை.... , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் விவரம் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் நமக்கு தேவையான குடியிருப்புக்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும்.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் விலையில் இருந்து கணிசமான மானியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் மத்திய அரசு ரூ.1.50 லட்சமும், மாநில அரசு ரூ.7.50 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையும் மானியம் வழங்குகிறது. மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். இந்த வீடுகளை வாங்க ரூ.85 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10.37 லட்சம் வரை பயனாளிகள் முதற்கட்டமாக செலுத்த வேண்டும்.

இந்த வீடுகள் நகர்ப்பகுதிகளில் அமைந்துள்ள குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள், ஆட்சேபனை உள்ள அரசு புறம்போக்கு நிலங்களான நீர்நிலை, காப்பு காடுகள், அபாயகரமான பகுதிகளான வெள்ள சேத பகுதிகள், கடலோர பகுதிகள் மற்றும் பேரிடர் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் சாலையோரத்தில் வசிப்பவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் ஆகியோருக்கு இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்படுகிறது. இந்த குடியிருப்புகள் பெற ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எப்படி விண்ணப்பிப்பது: இந்த அடுக்குமாடி குடியிருப்பு பெற விரும்பும் தகுதியான மக்கள் https://tnuhdb.org.in/tnuhdb-hfa-app/ahp-vacancy. Aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் வீடு பெற எவ்வளவு தொகை செலுத்த வேண்டும், எவ்வளவு குடியிருப்புகள் உள்ளன என்ற விவரம் இருக்கும். அதில் அப்ளை என்பதனை கிளிக் செய்து மிக எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்: ஆதார் எண், ரூ.3 லட்சத்திற்கு உட்பட்ட குடும்ப வருமான சான்று, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்கள், குடும்ப தலைவன் மற்றும் குடும்ப தலைவியின் புகைப்படங்கள், எங்கும் எங்களுக்கு வீடு இல்லை என்பதற்காக உறுதிமொழி பத்திரம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அதில் விண்ணப்பம் செய்தவுடன், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அது பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. வீடு ஒதுக்கீடு கிடைத்த 90 நாட்கள் பணம் செலுத்தலாம். பணம் செலுத்தியவுடன் குடியிருப்பு ஒதுக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு குடியிருப்புக்கான பத்திரத்தை அரசு அவர்கள் பெயரில் தரும்.

சென்னையில் ரூ.6.73 லட்சத்திற்கு வீடு: சென்னையில் 400 சதுர அடி வீடுகள் உள்ள ஒரு குடியிருப்பு வாங்க வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ஒரு ஹால், படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதியுடைய இந்த குடியிருப்பினை வெறும் ரூ.6.73 லட்சத்திற்கு கிடைக்கிறது.

சென்னையில் 2 திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகள் விற்பனையாகிறது. சென்னை மணலி புதுநகர் திட்டம்-2ல் உள்ள 6 வீடுகள் தலா ரூ.10 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலும், மணலி புது நகர் திட்டம்-7ல் உள்ள 200 குடியிருப்புகள் தலா ரூ.6.73 லட்சம் மதிப்பிலும் அரசு விற்பனை செய்கிறது. செங்கல்பட்டில் 282 வீடுகள் ரூ.6.16 லட்சம் மதிப்பிலும், திருவள்ளூவர் மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 532 வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் உடனே https://tnuhdb.org.in/tnuhdb-hfa-app/ahp-vacancy. Aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+