தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது! ரூ 1 லட்சம் பரிசு! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு தமிழ்மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இளம் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண். 110-இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.04.2025 அன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அவ்வறிப்பிற்கிணங்க தமிழ் மொழிக்கு பாவேந்தர், திராவிட இயக்ககத்தின் புரட்சிக் கவிஞர், தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் அவர்களைப் போற்றும் வகையில் "தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இளம் எழுத்தாளர் / கவிஞர் என இருவர் தெரிவு செய்யப்பட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது" வழங்கி விருதுத் தொகை தலா ரூ. 1.00 இலட்சம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.

ஆண் மற்றும் பெண் இளம் எழுத்தாளர் / கவிஞர் பெருமக்கள் www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in என்ற இணையதளங்களின் வழியாகவோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழுமூர், சென்னை 600 008. என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ, நேரிலோ 23.05.2025 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது.
கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044-28190412. 044-28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (16.05.2025) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என எழுத்தாளர்கள் / கவிஞர்களுக்கு நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications