Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'SIR'-ஐ கண்டு பயம் வேண்டாம்.. வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிப்பது எப்படி? ஈசியான வழி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 68,000க்கும் மேற்பட்ட பிஎல்ஒ எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், வீட்டிலிருந்தே SIR விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பது எப்படி? என்பது குறித்து பார்க்கலாம்..

2026 சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பணியின் ஒரு பகுதியாக, SIR (Special Intensive Revision) எனப்படும் கணக்கீட்டு படிவங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

election commission voter id tamil Nadu

எஸ்ஐஆர் ஆன்லைன்

இந்த விண்ணப்பத்தைஆன்லைன் மூலமும் சமர்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் படிவத்தை எப்படி நிரப்புவது? எந்த ஆவணங்கள் தேவை என்பதில்தான் குழப்பம் உருவாகிறது. அதை சரிசெய்வது எப்படி என பார்க்கலாம். முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை போர்டல் voters.eci.gov.in-க்கு சென்று SIR - 2026 தொடர்பான பகுதியைத் திறக்க வேண்டும். அதில், EPIC (வாக்காளர் அட்டை) எண், மின்னஞ்சல்/கைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையலாம். புதியவர் என்றால் "Sign Up" செய்து மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் கணக்கை உருவாக்கி பின்பு உள்நுழையவும்.

EPIC புதுப்பிப்பு

உள்நுழைந்தவுடன், முகப்புப் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் "Special Intensive Revision - 2026" என்ற பகுதி தெரியும். அதில் உள்ள "Fill Enumeration Form" என்பதை கிளிக் செய்தால் விண்ணப்பம் ஓபனாகும். முதலில், நீங்க எந்த மாநிலத்தில் இருக்கிறீர்களோ அதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு உங்க வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC No.) உள்ளிட வேண்டும். அப்போது, உங்க பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அந்த OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கும் போது, உங்களுடைய அடிப்படை விவரங்கள் பாதி வரை தானாகவே படிவத்தில் நிரம்பியிருக்கும்.

குடும்ப இணைப்பு

இதில்தான் பலருக்கும் மிக முக்கியமான Family Linkage (குடும்ப இணைப்பு) பகுதி வருகிறது. இது கடந்த 20 ஆண்டுகளாக சரியாகப் புதுப்பிக்கப்படாத ஒரு முக்கிய பிரிவு என்பதால், தேர்தல் ஆணையம் இதை இப்போது கட்டாயமாக நிரப்புமாறு கூறியுள்ளது. முன்பே வாக்காளர் பட்டியலில் இருந்த குடும்பப் பெயர்கள் நினைவில் இருந்தால் அதற்கான தேர்வைச் செய்யலாம். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இவர்களில் யாராவது EPIC எண் அல்லது பெயர் நினைவில் இருந்தால், அதை தேடிக் கண்டுபிடித்து இணைக்கலாம்.

வாக்காளர் பதிவு ஆன்லைன்

யாருடைய பெயரும் நினைவில் இல்லாவிட்டால், அதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். அதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டும். மேலும், ஆதாரில் உள்ள பெயரும், வாக்காளர் அட்டையில் இருக்கும் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். உறவினரை இணைக்கும்போது, அவர்களின் EPIC எண், பெயர், தொகுதி அல்லது குறைந்தபட்சம் பாக எண் - வரிசை எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று தேவை. இணையதளத்தில் உள்ள தேடல் கருவியைப் பயன்படுத்தி எளிதாக அவர்களின் தகவல்களை கண்டறியலாம்.

பிஎல்ஒ கணக்கெடுப்பு

Form-ஐ Submit செய்தவுடன், உங்களுக்கு ஒரு Acknowledgement Number கிடைக்கும். இது மிக முக்கியம். பின்னர் உங்க விண்ணப்ப நிலையை பார்க்க இதை பயன்படுத்த வேண்டும். உங்கள் BLO (Booth Level Officer) உங்களைப் தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்க்கலாம். சில நேரம் அவர்கள் உங்க வீடு வரவும் வாய்ப்பு உள்ளது. அப்போது EPIC, ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது அவசியம். விண்ணப்பத்தில் சிக்கல் இருந்தால், தளத்தில் இருக்கும் "Book a call with BLO" வசதி மூலம் நேரடியாக உதவி பெறலாம். அல்லது 1950 என்ற எண்ணில் அழைத்தும் தீர்வு பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+