வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி, இதை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
இதுகுறித்து டாப் இன்ஃபார்மர் எனும் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்க மாட்டேங்கிது பார்த்தால் அரசாங்கம் வேலை இல்லாதவங்களுக்கு கொடுக்கும் உதவித்தொகையும் கிடைப்பதில்லை. 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை வேலை இல்லாதவர்களுக்கு அரசாங்கம் மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வருகிறது.

விதிமுறைகள்: அந்த உதவித்தொகையை நீங்கள் பெறுவதற்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை விரிவாக பார்க்கலாம். முதல் தகுதி- பள்ளி படிப்பையோ அல்லது கல்லூரி படிப்பையோ தமிழகத்தில் படித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர் தமிழகத்தில் 15 ஆண்டு வசித்திருக்க வேண்டும்.
பள்ளிக்கோ கல்லூரிக்கோ நீங்கள் ரெகுலராக போய் படித்தவர்களாக இருக்கக் கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் தொலைதூர கல்வியில் படித்தால் உதவித் தொகையை பெற தகுதி இருக்கிறது. நீங்கள் படித்து முடித்த வருஷம் முதல் 5 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
ஆவணங்கள்: இந்த உதவித்தொகையை பெற நீங்கள் அரசு துறையிலோ தனியார் துறையிலோ வேலை பார்க்கக் கூடாது. சுய வேலை வாய்ப்புகளையும் செய்யக் கூடாது. அரசிடம் இருந்து வேறு எந்த உதவித்தொகையையும் பெறுபவர்களாக நீங்கள் இருக்கவே கூடாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். இதற்கான வருமான சான்று இணைக்கப்பட வேண்டும்.
என்னென்ன தேவை?: இதை விண்ணப்பிக்க பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 3, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புத்தகம், வருமான வரிச் சான்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்த அட்டை ஆகிய சான்றுகள் தேவைப்படுகின்றன. நீங்கள் இருக்கும் இருப்பிடத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் என ஒரு துறை இருக்கும்.
அங்கு போய் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை உங்களுக்கு சிரமமாக இருந்தால் டாப் இன்ஃபார்மர் பேஜிக்கு ஒரு மெசேஜ் போட்டால் நாங்களே விண்ணப்பத்தை அனுப்பி வைக்கிறோம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மேற்கூறிய எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும்.
எவ்வளவு ரூபாய் உதவித்தொகை: 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவராக இருந்தால் மாதம் ரூ 200 கிடைக்கும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ 300 கிடைக்கும். 12 ஆம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் மாதம் ரூ 400 கிடைக்கும். இளநிலையோ முதுநிலையோ முடித்திருந்தால் ரூ 600 கிடைக்கும். இந்த பணம் மாதாமாதம் உங்கள் அக்கவுன்ட்டுக்கு வராது. 3 மாதங்களுக்கு ஒரு முறை வரும்.
பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற் படிப்புகளை படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தால் ரூ 600 கிடைக்காது. மற்ற எந்த டிகிரி படித்திருந்தாலும் உங்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். இந்த உதவித் தொகையை பெற வயது வரம்பு 40 ஆக இருத்தல் வேண்டும். ஆதி திராவிடர், அல்லது பழங்குடியினருக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications