கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற 29-ந்தேதி முதல் விண்ணப்பிப்பது எப்படி? பெண்கள் அறிய வேண்டியவை
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்தும் தகுதியிருந்தும் கிடைக்கப் பெறாதவர்கள் வரும் மே 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தமுறை விண்ணப்பங்களை ரேஷன் கடையில் சமர்பிக்க இயலாது. அரசு மாற்று திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதுபற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. இந்த திட்டத்தை கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து, கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்கிலேயே ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 3வது வார தொடக்கத்தில் 1000 ரூபாய் மகளிருக்கு வழங்கப்படுகிறது. முதல்முறையாக திட்டம் அறிவிக்கப்பட்ட போது, 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். இவர்களில் வருமானவரி கட்டுவோர், வீட்டில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர், அரசு ஊழியர்கள் மற்றும் அரசின் பிற உதவி தொகை பெறுவோர் மற்றும் அதிக வருமானம் உள்ளவர்கள் நிராகரிக்கப்பட்டனர். மீதமுள்ள 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
அதன்பின்னர், பலருக்கும் உதவி தொகை கிடைக்கவில்லை என்ற புகார்கள் வந்தன. இதையடுத்து விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் விடுபட்ட 7 லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே மீண்டும் ஒரு முறை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 11 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டார்கள். இப்படியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பொறுத்தவரை தற்போது 1 கோடியே 14 லட்சம் பெண்கள் பெற்று வருகிறார்கள். இன்னும் 1 கோடியே 12 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை.. இந்நிலையில் தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படியே வருகிற மே 29-ந்தேதி முதல் இந்த உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.
கடந்த முறை மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாம். எனவே அதற்கான முகாம் தமிழகம் முழுவதும் 29-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத்திற்குள் அவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications