உஜ்வாலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை 300 வரை குறைவு ..பெண்கள் எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் சிலிண்டர் விலை வழக்கமானவர்களுக்கு விட 300 ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. இந்த சிலிண்டருக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்போது பார்ப்போம்
ஏழை எளிய மக்கள் இலவசமாக சமையல் சிலிண்டர் கேஸ் இணைப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் 'பிரதமர் உஜ்வாலா' திட்டம். இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ம் ஆண்டு மே 1ம் தேதி அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டப்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பட்டியல் இனத்தவர்கள், எஸ்டி பிரிவினருக்கு இலவசமாக சமையல் கேஸ் இணைப்பு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

பிரதமர் உஜ்வாலா' திட்டம் என்பது முழுக்க முழுக்க பெண்களுக்காக வழங்கப்படுகிறது. பெண்களின் பெயர்களில் தான் கேஸ் இணைப்பு வழங்கப்படும். மத்திய அரசு இதுவரை, நாடு முழுவதும் 9.60 கோடி குடும்பங்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் சமையல் காஸ் இணைப்பு வழங்கி உள்ளது.
இந்த பிரதமர் உஜ்வாலா' திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுதவிர கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத்து தரப்புக்குமே மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது. இதனால் பிரதமர் உஜ்வாலா' திட்டத்தில் உள்ள பெண்களுக்கு 400 ரூபாய் குறைவாகவே சிலிண்டர் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உஜ்வாலா பயனாளிகளுக்கு, சிலிண்டருக்கு மேலும் 100 ரூபாய் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் உஜ்வாலா' திட்டப்பயனாளிகளுககு 200க்கு பதில் 300 ரூபாய் மானியம் கிடைக்க போகிறது.
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், உஜ்வாலா பயனாளிகளுக்கான சிலிண்டர் மானியத்தை மேலும் 100 ரூபாய் உயர்த்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்களுக்கான மானியம், 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்கிறது. பொதுவாக சிலிண்டர் கேஸ் விலை 918 ரூபாயாக உள்ளது. உஜ்வாலா பயனாளிகளுக்கு, 618 ரூபாய்க்கே இனி சிலிண்டர் கிடைக்கும்.
இதனிடையே உஜ்வாலா திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் இணைப்புகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த புதிய இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.இந்த புதிய இணைப்பை பெண்கள் எப்படி பெறலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் ஆர்வமுள்ள தகுதியான பெண்கள் அருகிலுள்ள LPG விற்பனை நிலையம் சென்று கேளுங்கள் அங்கு இதற்கென உள்ள விண்ணப்பப் படிவத்தைக் கேட்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண், தொடர்பு விவரங்கள், சேமிப்பு கணக்கு எண், தொடர்பு விவரங்கள் மற்றும் கடைசிப் பக்கத்தில் உள்ள அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் 5KG அல்லது 14.2 KG சிலிண்டரை தேர்வு செய்யலாம்.
என்ன ஆவணங்கள் தேவை: ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை
சேமிப்பு கணக்கு பாஸ்புக் அல்லது வங்கி கணக்கு அறிக்கை
இருப்பிட சான்று (தொலைபேசி/ மின்சாரம்/ தண்ணீர் அல்லது தொலைபேசி கட்டணம்/வீடு பதிவு ஆவணம்)
பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) ரேஷன் கார்டு பஞ்சாயத்து பிரதானால் அங்கீகரிக்கப்பட்ட பிபிஎல் சான்றிதழ்
சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
விண்ணப்பதாரர்: இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அந்த பகுதியிலுள்ள எல்பிஜி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்... அதற்கு பிறகு, LPG கள அதிகாரிகள் விண்ணப்பதாரரின் விவரங்களைச் சரிபார்த்து, தகுதியை உறுதிப்படுத்த, SECC (சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதிக் கணக்கெடுப்பு) தரவுகளை பார்ப்பார்கள். விண்ணப்பதாரர் தகுதியானவர் என கண்டறியப்பட்டவுடன் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். விண்ணப்பதாரர் அடுப்பு செலவு மற்றும் முதல் நிரப்புதலின் விலையை ஈடுகட்ட EMI விருப்பத்தையும் தேர்வு செய்ய முடியும்.
சிலிண்டருக்கான மானியங்கள் பெண்களின் சேமிப்புக் கணக்குகளில் நேரடியாக வழங்கப்படும். தகுதியான பெண்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications