முகாமுக்கு போக முடியலையா.. வாக்காளர் அட்டையை வீட்டிலேயே விண்ணப்பிக்கலாம்! ஸ்மார்ட் போன் போதும்
சென்னை: வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலமாக ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய வாக்காளர்களை இணைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வார்டு வாரியாக முகாம் அமைக்கப்பட்டு வாக்காளர் அடையாளர் அட்டை விண்ணப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தர்ப்ப சூழல் காரணமாக அங்கு செல்ல முடியாதவர்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிப்பதற்கான வசதி இருக்கிறது.

அதன்படி, "தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி கொண்ட இளம் வாக்காளர்கள், ஸ்மார்ட் போன் அல்லது கணினியில் உள்ள பிரவுசரில் voters.eci.gov.in இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்கு செல்லவும். அல்லது Voter Helpline Mobile என்ற மொபைல் செயலியை டவுன்லோட் செய்யவும். அதில் உங்கள் தொலைபேசி எண் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து Sign Up செய்துகொள்ளுங்கள். அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான Form-6 ஐ கிளிக் செய்யவும். அதை தொடர்ந்து NSVP எனப்படும் தேசிய வாக்காளர் சேவை போர்டலில் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்வதற்கான ஆப்சனை கிளி செய்யவும்ம்.
உங்களின் மாநில மற்றும் நீங்கள் வசிக்கும் சட்டமன்றத் தொகுதி அல்லது நாடாளுமன்ற தொகுதியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் ஒரு படிவம் வரும். அதில் உங்கள் பெயர், முகவரி, வயது, மொபைல் எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் கேட்கப்படும். குறிப்பாக புகைப்படத்தையும், அடையாளச் சான்றையும் மைக்ரோசாப்ட் லென்ஸ் போன்ற செயலியில் ஸ்கேன் செய்து அதில் பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பத்தில் விபரங்களை பூர்த்தி செய்யும் இடத்தில் சிவப்பு நிற ஸ்டார் குறியீடு இருந்தால் அதை கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும். ஸ்டார் குறியீடு இல்லை என்றால் அதை பூர்த்தி செய்வதும் செய்யாததும் நமது விருப்பம். அனைத்து விவரங்களையும் கொடுத்த பின்னர், Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும். உடனே நீங்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு ரெபரன்ஸ் எண் வரும். அந்த எண்ணை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சில நாட்கள் கழித்து உங்கள் விண்ணப்பங்களின் நிலை அறிந்திட அதே இணையதளத்திற்கு சென்று இந்த ரெபரன்ஸ் எண்ணை கொடுத்தால் காட்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு ஆகிய அடையாள சான்றிதழ்கள், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் அல்லது டிஎல் அல்லது பயன்பாட்டு பில் ஆகிய முகவரிச் சான்றிதழ்கள் அவசியம். ஆதார் அட்டையும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே இந்த விண்ணப்பத்துக்கான சான்றுக்காக ஆதார் எண் அல்லது அட்டை கேட்கப்பட்டாலும் நீங்கள் அது இல்லாமலேயே விண்ணப்பிக்கலாம்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications