வீட்டு கடன் வாங்கியோர் கூடுதலாக வரி விலக்கு பெறுவது எப்படி? இதை மட்டும் செய்யுங்க போதும்.. ரொம்ப ஈஸி
சென்னை: நமது நாட்டில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது கிட்டதட்ட அனைவரது கனவாகவே இருக்கிறது. இதனால் பலரும் கடனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். இருப்பினும், கடன் வாங்கி வீடு கட்டினாலும் வீட்டிற்குத் தனியாக வரி என்பது பலருக்கும் கடுப்பாகவே இருக்கும். இதற்கிடையே நீங்கள் வீடு வாங்கும் போது அதற்கு அதிகபட்ச வருமான வரி விலக்கை எப்படிப் பெறலாம் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் விளக்கியுள்ளார்.
மற்ற நாடுகளில் சொந்த வீடு என்பதற்குப் பெரியளவில் எமோஷ்னல் கனெக்ட் இருக்காது. ஆனால், நமது நாட்டில் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களின் ஆசை எப்படியாவது வீடு வாங்கிவிட வேண்டும் என்பது தான்.

சொந்த வீடு: வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாலே வீடு வாங்கியாச்சா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. வீடு என்பது குடும்பத்துடன் தங்க மட்டும் இல்லை. அதை ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் இங்குப் பலர் பார்க்கிறார்கள். இன்று புறநகராகக் கூட இருந்தாலும் பரவாயில்லை வீட்டை வாங்கி போட்டால் அதன் மதிப்பு சில ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என்பதே இங்குப் பலரது நம்பிக்கையாக இருக்கிறது. அந்தளவுக்கு வீட்டின் மதிப்பு உயர்கிறதா என்பது தனிக்கதை.
அதேநேரம் இதன் காரணமாகவே மக்கள் வீடு வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எப்படியாவது கடனை வாங்கியாவது வீடு வாங்கும் போக்கு அதிகரிக்கவும் இது போன்ற மனநிலையே காரணம். இப்படி கடன் வாங்கி வீடு வாங்கும் போது அதற்கு 20, 30 ஆண்டுகள் கடன் கட்ட வேண்டி இருக்கிறது. இப்படி கடன் ஒரு பக்கம் என்றால் வீடு வாங்கியதற்கான வருமான வரி மறுபுறம் கையை கடிக்கும்.
வீட்டுக் கடன்: இதற்கிடையே வீட்டுக் கடன் இருக்கும் போது வருமான வரி விலக்கு பெறுவது எப்படி என்பது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் சில முக்கிய கருத்துகளை விளக்கியுள்ளார். அதாவது ஐடிஆர் 2ஐ தேர்வு செய்தால் கணிசமான வரியைச் சேமிக்க முடியும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
என்ன செய்யலாம்: இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "வீட்டுக் கடன்- வருமானவரி விலக்கு.. புதிதாக வீட்டுக்கடன் வாங்கியோர் கவனத்திற்கு.. உங்களது வீட்டுக்கடனுக்கு, நீங்கள் கட்டும் வரியானது, முதல் ஐந்து வருடங்களுக்கு ₹2,00,000 க்கு மேல் கண்டிப்பாக இருக்கும். இருந்தாலும், வீட்டுக்கடனுக்கான வருமான வரி விலக்கு, Section 24 ன் கீழ், வெறும் ₹2,00,000 மட்டுமே கிடைக்கும். பாக்கி, நீங்கள் கட்டிய வரிக்கு விலக்கு கோரலாம்.
இதை செய்யுங்கள்: எப்படி? நீங்கள் வருமானம் வரிப் படிவத்தை தேர்வு செய்கையில், ITR2 ஐ தேர்வு செய்து, "Income from House Property" யின் கீழ், உங்களது முழு வட்டியையும் குறிப்பிட்டு, இரண்டு லட்சத்திற்கு மேலுள்ள அனைத்தையும், நஷ்டமாக காண்பித்து, அடுத்த வருடத்திற்கு carry over செய்யலாம்.
அடுத்த வருடத்தில் இருந்து, இந்த நஷ்டத்தையும் சேர்த்து, உங்களுக்கு அதிக வரிவிலக்கு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த முறையை பயன்படுத்தி, அதிக வரியை, வருடா வருடம் சேமியுங்கள். சேமித்த வரியினை முதலீடு செய்து பயனடையுங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications