இபி பில் கட்ட வேண்டாம்.. தமிழக மின்சார வாரியமே உங்களுக்கு அள்ளித்தரும் ரூ.78,000.. எப்படி பெறுவது?
சென்னை: மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டு மின்சார வாரியம் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி மேற்கூரை சூரியசக்தி மின் மூலம் 10 கிலோ வாட் வரை அமைக்க அனுமதி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடு உள்ளிட்ட கட்டடங்களில் 10 கிலோ வாட் வரை அமைக்க ஒப்புல் பெற வேண்டியது இல்லை. தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் இல்லாமல் இதற்கான பணிகளை செய்ய முடியும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறி உள்ளது.

மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், உங்கள் வீட்டிற்கு சூரிய மேற்கூரை மூலம் சூரிய ஒளியின் பரிசை கொடுங்கள்!
1 கிவா ரூ30,000/-
2 கிவா ரூ 60,000/-
3 கிவா ரூ 78,000/- வரை மானியம். வழங்கப்படும்.
பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள். இணைய தளத்தில் முதலில் பதிவு செய்யவும். அடுத்து, விண்ணப்பியுங்கள்!
முக்கிய அறிவிப்பு: 1. உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும்.
2. பொதுவாக மேற்கூரையில் சோலார் அமைக்க சதுர அடி பொறுத்து 50 ஆயிரம் முதல் 2-3 லட்சம் வரை செலவு ஆகும்.
3. மேற்கூரையில் சோலார் அமைத்தால் வீட்டில் பெரும்பாலும் மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும். மழை காலம், பனி காலத்தில் 1-2 மணி நேர மின்சார நிலையத்தின் மின்சார சப்ளை தேவை மட்டும் இருக்கும்.
4. நீங்கள் மேற்கூரையில் சோலார் வைத்துள்ளதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.
5. அப்படி செய்திருக்கும் பட்சத்தில் அந்த குறைந்த பட்ச மின்சார தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம்தான் இது.
6. பொதுவாக மேற்கூரையில் சோலார் இருந்தால்.. மாதம் உங்களுக்கு மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் 100 யூனிட் கூட அவசியம் இருக்காது. இருந்தாலும் நீங்கள் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்த முடியும்.
7. மேற்கூரையில் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பயன்கள் என்னென்ன?: ரூ.15,000 முதல் ரூ. 18,000 ரூபாய் இலவச சோலார் மின்சாரத்தில் இருந்து ஆண்டுக்கு சேமிக்கலாம். உபரி மின்சாரத்தை மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்காக விநியோக நிறுவனங்களுக்கு கொடுக்கலாம்.
சோலார் பேனல்களை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் பல விற்பனையாளர்களுக்கு தொழில்முனைவு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சோலார் பேனல்களை நிறுவுதல், உற்பத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன் கொண்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு மின்சார செலவு குறைவு. இதற்கு விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு ஏற்ற கூரையுடன் தங்களுடைய சொந்த குடியிருப்பு இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சரியான மின் இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சோலார் பேனல்களுக்கு வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications