12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.. விமான பைலட் ஆவது எப்படி? எங்கு படிக்கலாம்? முழு விவரம்!
சென்னை: 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்கள் அடுத்ததாக எந்த பாதையில் பயணிக்கலாம் என்று முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கடந்து ஏராளமான படிப்புகளும், துறைகளும் இருக்கின்றன. அப்படியொரு துறை விமான பைலட். பள்ளி மாணவர்கள் பலருக்கும் விமான பைலட்டாவது தனது இலட்சியங்களில் ஒன்றாக இருக்கும்.
ஆனால் பொறியியல், மருத்துவம் போல் விமான பைலட்டாவதற்கு ஏராளமான கல்லூரிகள் இல்லை. விமான பைலட் ஆவதற்கு 12ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் படித்திருக்க வேண்டும். அதேபோல் இந்தியாவில் பல்வேறு வகையான விமானிகள் இருக்கின்றனர். விமான போக்குவரத்து விமானிகள், தனியார் விமானிகள், விளையாட்டு விமானிகள், விமான பயிற்றுவிப்பாளர்கள், விமானப் படை விமானிகள் இருக்கின்றனர்.

விமானியாவது எப்படி?
இதில் விளையாட்டு விமானிகள் 10 ஆயிரம் அடிக்கு கீழ் பறக்க வேண்டும். அவர்களுக்கு குறிப்பிட்ட எல்லை இருக்கிறது. அதேபோல் விமானத்தை இயக்குவதற்கு 3 வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பைலட் உரிமம் பயிற்சி, தனியார் பைலட் உரிமம் பயிற்சி மற்றும் வணிக பைலட் உரிமம் பயிற்சியாகும். இதில் முதல் படியாக மாணவர் பைலட் உரிமம் பயிற்சி.
தகுதி என்ன?
இதற்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்து 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 வயதான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தனியார் பைலட் உரிமம் பெறுவது என்பது 2ஆம் கட்டமாகும். இந்த லைசன்ஸை பெறுவதற்கு விண்ணப்பதாரர் 60 மணி நேரம் விமானத்தில் பறந்திருக்க வேண்டும்.
பைலட் உரிமம்
வணிக பைலட் உரிமம் என்பது வணிக ரீதியான விமானங்களை இயக்க இந்த லைசன்ஸ் அவசியமானது. இந்த லைசன்ஸ் பெறுவதற்கு 3 ஆண்டுகள் விமானம் ஓட்டிய அனுபவமும், ஏவியேஷன் துறை சார்ந்த இளங்கலை படிப்பினை படித்திருப்பது அவசியம். இந்த பயிற்சி வகுப்புகள் தகுதி அடிப்படையில் 6 முதல் 18 மாதங்களுக்குள் மாறுபடும்.
சர்வதேச கல்லூரிகள்
பைலட் உரிமம் பெறுவதற்கான படிப்புகளை படிப்பதற்கு சுமார் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும். பைலட் படிப்புகளுக்கு சேர்க்கை பயிற்சி நடத்தும் அந்தந்த தனியார் பிளையிங் கிளப் அல்லது டிஜிசிஏ பிரதிநிதிகளால் நடத்தப்படும். சர்வதேச அளவில் பர்டூ பல்கலைக்கழகம், சான் ஜோஸ் மாநில பல்கலைக்கழகம், ரியோ சலோடோ கல்லூரி, ஏரோயிசம் ஃபிளைட் அகாடமி, விமான பாதுகாப்பு அகாடமி, சிங்கப்பூர் ஃபிளையின் அகாடமி சிறந்தவையாகும்.
இந்திய கல்லூரிகள்
இந்தியாவில் பாம்பே ஃபிளையிங் கிளப், தேசிய பறக்கும் பயிற்சி நிறுவனம், இண்டிகோ கேடட் பயிற்சி திட்டம், புதுச்சேரி தாக்கூர் விமானப் போக்குவரத்து கல்லூரி ஆகியவை சிறந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அகமதாபாத் ஏவியேஷன், ஓரியண்ட் பறக்கும் ஸ்கூல் ஆகியவையும் சிறந்ததாகும். இந்தியாவில் விமான பைலட்களுக்கு மாதம் ரூ.1.5 லட்சம் முதல் ஊதியம் கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications