பஸ் கட்டணத்தில் விமானத்தில் டிக்கெட் கிடைக்குமா.. இதை மட்டும் பண்ணுங்க.. ரொம்ப இஸியாக போகலாம்
சென்னை: பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக்கிங் செய்வது கடினம் ஆகும். 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் இருக்கிறது. ஆனால் ஆம்னி பேருந்துகள் கட்டணத்திலேயே விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து ஈஸியாக பயணிக்க முடியும். அது எப்படி என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு விமான பயணம் நடுத்தர வர்க்கத்தினருக்கே எட்டாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. காரணம் நினைத்துபார்க்கவே முடியாத அளவிற்கு விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்துவிட்டது. அதேநேரம் சில விஷயங்களை சரியாக திட்டமிடுவதன் விமானங்களில் ஆம்னி பேருந்து கட்டணத்திலேயே முன்பதிவு செய்ய முடியும். விமானங்களில் டிக்கெட் கட்டணம் என்பது தேவை அதிகரித்தால் அதிகமாகவும், தேவை குறைந்தால் கட்டணம் குறைவாகவும் இருக்கும்.

அந்த வகையில் 2 அல்லது 3 மாதம் முன்பே சரியான நாளை தேர்வு செய்து டிக்கெட் முன்பதிவு செய்வதால் டிக்கெட் கட்டணம் பொதுவாக குறைவாகவே இருக்கும். இதுதவிர கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் தள்ளுபடி, இந்த ஆப்பில் புக்கிங் செய்தால் தள்ளுபடி, இந்த கிழமைகளில் புக்கிங் செய்தால் கணிசமான தள்ளுபடி என்று விமான நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அந்த சலுகைகளை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் 2000 முதல் 4000 ரூபாயில் விமானத்தில் மதுரைக்கோ, கோவைக்கோ போக முடியும். எப்போதும் அதிகமான கட்டணம் உள்ள மதுரையில் இருந்து சென்னைக்கு கூட மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும்.
இதேபோல் விமான டிக்கெட் விற்காத நாட்களில் குறைந்த கட்டணமே வசூலிப்பார்கள். நாம் பயணிக்க விரும்பும் பாதையில் மட்டுமல்ல, இந்தியாவில் இருந்து நாட்டில் உள்ள எந்த நகரத்திற்கும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். அதற்கான நாட்கள் என்ன என்பதை கவனித்து, நாம் தான் சரியான முறையில் புக்கிங் செய்வது மட்டுமே நம்முடைய பணியாக இருக்க வேண்டும். இது இந்தியாவிற்குள் மட்டுமல்ல.. இந்தியாவில் இருந்து உலகின் எந்த நகரத்திற்கும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். ஆனால் அந்த நாளை தேர்ந்தெடுத்து பயணிப்பது நம் கையில் தான் உள்ளது.
குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வதற்கு skyscanner app என்ற ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யுங்கள்.அதில் போய் பிளைட் பகுதியில் நகரத்தின் கட்டத்தில் இந்தியா என்று டைப் செய்யுங்கள். கீழே everywhere (எங்கு வேண்டுமானாலும்) என டைப் செய்யுங்கள்.
நேரம், நாள் என எதையும் குறிப்பிட வேண்டாம். அப்படி செய்தால் இந்தியாவில் மிககுறைவான கட்டணத்தில் எந்தெந்த வழித்தடத்தில் விமானங்கள் உள்ளன என்பதை இந்தியா என்று காட்டும். இந்தியாவை கிளிக் செய்தால், அதில் எந்தெந்த நகரங்களுக்கு இடையே எந்த நாளில் குறைவான கட்டணம் என்பதை காட்டும். வெளிநாடு என்றால் வெளியிலேயே குறைவான கட்டணங்களை காட்டும். இந்தியாவிற்கு 500, 1000, 2000, 3000 என விரும்பிய நகரங்களுக்கு குறைந்த கட்டணம் காட்டும். இதை பார்த்துவிட்டு அப்படியே புக்கிங் செய்ய தேவையில்லை.. நேரடியாக எந்த விமான நிறுவனமோ அதன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று புக்கிங் செய்தால் கட்டணம் மிக குறைவாகவே இருக்கும்.
அதேபோல் மதுரை, சென்னை, கோவை, திருச்சி, கோவா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் எந்த நகரத்தையும் தேர்வு செய்து கட்டணம் குறைவாக உள்ள நாட்களை தேர்வு செய்து பயணிக்கலாம். உங்கள் வங்கி கார்டுகளுக்கான ஆபர்கள் இருந்தால் அதையும் பயன்படுத்தலாம். உதாரணமாக புதன்கிழமை ஆபர், வியாழக்கிழமை ஆபர் என அறிவிப்பார்கள். அதேபோல் மேக் மை ட்ரிப், ஐஆர்சிடிசி உள்ளிட்ட டிராவல் ஏனென்சிகள் வழியாகவும் ஆபரில் புக்கிங் செய்யலாம். அவர்களும் அவ்வப்போது ஆபர்களை வழங்குகிறார்கள். உங்களுக்கு வேண்டிய நாளில் எளிதாக புக்கிங் செய்யலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications