தீபாவளிக்கு ஊருக்கு பிளைட்ல போக ஆசையா? கம்மி ரேட்ல டிக்கெட் புக் பண்ணுவது எப்படி! இதை பாலோ பண்ணுங்க
சென்னை: அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இப்போது அனைவருமே சொந்த ஊர்களுக்குச் செல்ல டிக்கெட்களை புக் செய்யவே முயன்று வருகிறார்கள். தீபாவளிக்குக் குறைந்த செலவில் விமான டிக்கெட்களை புக் செய்வது எப்படி என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த வாரம் அதாவது அக். 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு மறுநாள் நவ. 1ம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 4 நாட்கள் லாங் வீக் எண்டாக வருகிறது.

தீபாவளி டிக்கெட்: பொதுவாகவே தீபாவளி என்றாலே நாம் குடும்பத்துடனேயே அதைக் கொண்டாட நினைப்போம். சொந்த ஊருக்கே செல்லாதவர்கள் கூட தீபாவளி வந்துவிட்டால் உடனே சொந்த ஊருக்குச் சென்றுவிடுவார்கள். அப்படி சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் முதல் சாய்ஸாக எப்போதும் இருப்பது ரயில்கள் தான். ஆனால், ரயில் டிக்கெட் பல வாரங்களுக்கு முன்பு விற்றுத் தீர்ந்துவிட்டது. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் கூட சில நிமிடங்களில் காலியாகிவிட்டது.
சரி பஸ்ஸில் போகலாம் எனப் பார்த்தால் டிக்கெட் விலையைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. மேலும், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். முந்தைய நாள் கிளம்பினால் தீபாவளிக்கு மதியம் தான் வீட்டுக்குச் சென்று சேர்வோம். அந்தளவுக்கு டிராபிக் இருக்கும்.
விமானம்: விமானத்தில் செல்லலாமா என்று யோசித்தாலே நமக்கு விமானத்தின் டிக்கெட் தான் கண் முன்னால் வரும். ஆனால், நாம் சொல்லும் சில டிப்ஸ்களை பின்பற்றி விமான டிக்கெட் புக் செய்தால் பஸ் டிக்கெட்டை விட கூட கம்மி விலைக்கு நம்மால் டிக்கெட்களை புக் செய்ய முடியும். நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இந்த டிப்ஸ்களை பின்பற்றினால் குறைந்த விலையில் டிக்கெட்களை புக் செய்யலாம்.
ஒரு சிலர் திங்கள் இரவு விமான டிக்கெட் புக் செய்தால் விலை குறைவாக இருக்கும் எனச் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், இப்போது அந்த நிலைமை எல்லாம் இல்லை. டிக்கெட் விலை என்பது மெஷின் லேர்னிங் மூலம் முடிவு செய்யப்படுவதால் திங்கள்கிழமை இரவு, செவ்வாய்க்கிழமை எல்லாம் டிக்கெட் விலை குறையாது.
எப்படி: சரி வேறு என்ன ஆப்ஷன் தான் இருக்கு என கேட்கிறீர்களா.. விமான டிக்கெட்டை பொறுத்தவரை அது பல்வேறு தளங்களில் புக் செய்யப்படும். எல்லா தளங்களிலும் ஒரே விலையில் இருக்காது. அதாவது ஒரே ரூட்டில் ஒரே நேரத்தில் இயக்கப்படும் விமானம் டிக்கெட் கூட ஒவ்வொரு தளத்தில் ஒவ்வொரு ரேட்டில் விற்கப்படும். எனவே இதுதான் முக்கியமானது.
ஆனால், நம்மால் எத்தனை சைட்டிற்கு தான் சென்று பார்க்க முடியும். இந்த இடத்தில் தான் கூகுள் பிளைட்ஸ் உள்ளிட்ட சில தளங்களில் வருகிறது. இந்த தளங்களில் நீங்கள் எங்கிருந்து எங்குச் செல்ல வேண்டும் என்பதைப் பதிவு செய்தால் போதும். குறிப்பிட்ட நாளில் எதில் விமான டிக்கெட் குறைவு என்பதைத் தெளிவாக எடுத்து வந்து காட்டிவிடும்.
கிட்டத்தட்ட பஸ் விலை: உதாரணத்திற்கு நீங்கள் வரும் அக். 29ம் தேதி சென்னையில் இருந்து பெங்களூர் வருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் பிரபல புக்கிங் நிறுவனத்தின் சைட்டில் சென்று சென்னை டூ பெங்களூர் எனத் தேடினால் அன்றைய தினம் 2004 ரூபாய்க்கு நமக்கு டிக்கெட் இருக்கிறது. அதேநேரம் ஸ்கைஸ்கேனர் என்ற தளத்தில் போய் பார்த்தால் ரூ.1674க்கே நமக்கு டிக்கெட் கிடைக்கிறது. கூகுள் பிளைட்டில் பார்த்தால் ரூ.1310க்கு கூட கிடைக்கிறது. சென்னை டூ பெங்களூர் இரவு நேரம் பயணிக்கும் ஏசி பஸ் ரூட்டை செக் செய்தால் கூட கிட்டத்தட்ட இதை ரேஞ்சில் இருக்கிறது. அதற்கு நீங்கள் விமானத்திலேயே போகலாம்.
அதேபோல சென்னை டூ கோவை வரும் அக். 28ம் தேதிக்கு பார்த்தால் அதே பிரபல புக்கிங் தளத்தில் குறைந்தபட்ச டிக்கெட் ரூ.3485ஆக உள்ளது. அதேநேரம் ஸ்கைஸ்கேனர் தளத்தில் ரூ.3165க்கு கிடைக்கிறது. கூகுள் பிளைட்ஸில் ரூ.2900க்கே கிடைக்கிறது. அதேநேரம் நாம் டிக்கெட் புக் செய்யும் தளம் பாதுகாப்பானது தானா என்பதையும் ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள். இந்த முறைகளில் புக் செய்தால் குறைந்த செலவில் குடும்பத்துடன் ஜாலியாக தீபாவளியை கொண்டாடலாம்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications