ரூ.1000 உரிமைத் தொகை.. இதுவும் முக்கியம்! மின்வாரியத்தில் பெயர் மாற்றுவது எப்படி - பீஸ் என்ன?
சென்னை: ரூ.1,000 கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மின் பயன்பாட்டாளர் எண்ணையும் தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிலையில், மின் பயன்பாட்டாளர் பெயரை மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு அரசு மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முகாம்கள் இன்று தொடங்குகின்றன. இதில் மின் பயன்பாட்டின் அடிப்படையில் தகுதியான பயனாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதால் மின் பயன்பாட்டு எண்ணும் கேட்கப்படுகிறது.
இந்த நிலையில் மின் பயன்பாட்டாளர்கள் பெயர்களை மாற்றுவது குறித்து தமிழ்நாடு மின்வாரியம் பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது.

முன்னோர் இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது உரிமை ஆவணத்தின் நகல்.
- நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் நகல்.
- செட்டில்மென்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.
குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி ID) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1. நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவு சான்றிதழ் (அல்லது) வளாகம் /அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம்.
2. பில்டர்கள் / டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள் / குடியிருப்பு வளாகங்கள் / குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பின் வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது விற்பனைப் பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை அல்லது நீதிமன்ற உத்தரவு. BCCF F F BBB
- நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் பரிசு பத்திரம் / செட்டில்மென்ட் பத்திரம் போன்றவை அல்லது நீதிமன்ற உத்தரவு.












Click it and Unblock the Notifications