Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? வெறும் 750 ரூபாயில் கெஜட்டிலேயே மாற்றலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வெறும் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெயரை மாற்றிக்கொள்ள முடியும். அரசு கெஜட்டில் உங்கள் பெயர் மாறிவிடும். இதை ஆவணமாக எங்குவேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம்.

பிறப்பு சான்றிதழ்களில் தவறுகளை எளிதாக சரி செய்ய முடியும். பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால், அந்த பிழையை உடனடியாக திருத்திவிடுவது நல்லது.. இதற்கு பிறப்பு பதிவாளரை அல்லது, சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரையாவது அணுக வேண்டும்.

How to change name on birth certificate Tamilnadu Govt Super Scheme

நீங்கள் உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பிழையை திருத்த வேண்டும் என்று ஒரு மனுவை விஏஓ அல்லது சுகாதார ஆய்வாளரிடம் தரவேண்டும். பிறகு, குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து தந்தால் போதும். அவைகளை சரிபார்த்து, உங்கள் மனுவையும் ஏற்று, பிழையையும் திருத்தி தருவார்கள். இதை உடனே செய்வது நல்லது.

ஒரு வேளை பெயரை திருத்தாமல் விட்டுவிட்டீர்கள். பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது முழு பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் அதற்கும் வழிகள் உள்ளது. உங்கள் பெயரை அரசாங்க கெஜட்டில் முழுமையாக மாற்றிக்கொள்ள முடியும். www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முழு தகவல்கள் இருக்கிறது. அதனை இப்போது பார்ப்போம்..

பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால் (குழந்தை என்றால்) தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின் கீழ் உறவின் முறையை (Capital Letter-ல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மனுதாரர் ஆவணங்களில் சுய சான்றொப்பம் இடவேண்டும். பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும். 5. பெயர் மாற்றக் கட்டணம்: ரூ.750/ மட்டும். இணையதள செலுத்துச்சீட்டு மூலமாக மட்டுமே பிரசுரக் கட்டணம் ஏற்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தில் Creation / Payment என்ற Tab-யினை தேர்வு செய்து அவற்றில் நட்சத்திரக் குறியிடப்பட்டுள்ள கலங்களில் கோரியுள்ள தகவல்களை மட்டும் பூர்த்தி செய்து பிரசுரக் கட்டணத்தை வங்கியில் Online / Offline மூலம் செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச்சீட்டினை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் மூலம் விண்ணப்பிப்பவர்களிடமிருந்து பிரசுரக் கட்டணம் வங்கி கேட்பு வரைவோலையாகவோ/காசோலையாகவோ/அஞ்சல்
ஆணையாகவோ/பணவிடைத்தாளாகவோ ஏற்கப்படமாட்டாது. 01-07-2023 முதல் இணையதள செலுத்துச்சீட்டு மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவே விண்ணப்பதாரர்கள் www.karuvoolam.tn.gov.in என்ற வலைதளத்தில் Challan Creation | Payment என்ற Tab-யினை தேர்வு செய்து அவற்றில் நட்சத்திரக் குறியிடப்பட்டுள்ள கலங்களில் கோரியுள்ள தகவல்களை மட்டும் பூர்த்தி செய்து பிரசுரக் கட்டணத்தை உரிய வங்கியில் செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான செலுத்துச்சீட்டினை தபாலில் பெயர்மாற்ற விண்ணப்ப படிவத்துடன் இணைத்தனுப்புதல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி இணையதள செலுத்துச்சீட்டு இத்துறையின் வலைதளத்தில் (www.stationeryprinting.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் பழைய பெயரில் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவு பெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி இணையதள செலுத்துச்சீட்டு இத்துறையின் வலைதளத்தில் (www.stationeryprinting.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்மாதிரி இணையதள செலுத்துச்சீட்டின்படி சரியாகப் பூர்த்தி செய்து பிரசுரக் கட்டணம் செலுத்தியவர்களின் செலுத்துச்சீட்டு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
அரசு கிளை அச்சகங்களுக்கான DDO Code கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் அரசு கிளை அச்சகங்களுக்குரிய DDO Code-னை இணையதள செலுத்துச்சீட்டில் சரியாகப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
சென்னை (PAO Chennai East) - 43011165
மதுரை (PAO Madurai) - 45010118
சேலம் - 15080031
திருச்சிராப்பள்ளி- 14010018
புதுக்கோட்டை-11010024
விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 02040057

". கட்டணம் செலுத்தும் நேரம்:
முற்பகல்: 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பிற்பகல்: 2.00 மணி முதல் 3.00 மணி வரை (அரசு விடுமுறை தினங்கள் நீங்கலாக).
. பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்படமாட்டாது.
. இத்துறையால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவம் (ம) பதிவிறக்கம் செய்யப்படும் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். புகைப்பட நகல் படிவம் ஏற்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர் தவிர வேறு யாருடனும் எந்தவித தொடர்பும் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர் முகவரியில் சரியான கதவு இலக்கம் மற்றும் பின்கோடு எண் தவறாமல் குறிக்க வேண்டும்.
. பிறந்த மாவட்டத்தின் பெயர் மட்டுமே குறிப்பிட வேண்டும். . முதலெழுத்துக்கும் பெயருக்கும் இடையே அமைய வேண்டிய புள்ளிகள் சரியாக குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் (வெ), சென்னை-2 இல் 2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413, 28544414 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். புதிய பெயரில், "என்கிற" (Alias) என்று பிரசுரிக்க இயலாது. பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதத்திற்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்வித கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டாது.

பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, மனுதாரர் சுய சான்றொப்பம் இடவேண்டும்.

அரசிதழை நேரில்பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச்செல்லலாம்.

சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

இணைப்பு:
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலேயே வசிப்பவர்கள் பெயர் மாற்றம் செய்ய ஆதாரமாக பழைய பெயருக்கு உண்டான பிறப்பு சான்றிதழ் நகல்/கல்வி சான்றிதழ் நகல்/சாதி சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். வீட்டு விலாசத்திற்கு ஆதாரமாக உணவு பங்கீட்டு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,ஆதார் அட்டை நகல், கடவுச்சீட்டு நகல் ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகல் இணைக்க வேண்டும்.
II. பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக பிறப்பு சான்றிதழ் நகல், உணவுப் பங்கீட்டு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல்/வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்று நகல் சுய சான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும்.
III. சுவீகாரம் எடுத்துக் கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க
வேண்டும்.
1. சுவீகார தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவுசெய்யப்பட்ட சுவீகார பத்திர நகலில் மனுதாரர் சுய சான்றொப்பம் இட வேண்டும், பிறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட்வேண்டும்.
2. சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகார தந்தை/தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதனை அரசு வெளியீட்டில் "பொது அறிவிக்கையாக" மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் (ம) பதிவு செய்யப்பட்ட சுவீகார பத்திர நகலில் மனுதாரர் சுய சான்றொப்பம் இட வேண்டும், பிறப்பு சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
IV. விவாகரத்து செய்து அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்ற தீர்ப்பின் நகலில் மனுதாரர் சுய சான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும்.
பெயர்மாற்றம் வெளியிடப்பட்ட அரசிதழ் பெறும் முறை :
விண்ணப்பதாரருக்கு அவரது பெயர்மாற்றம் வெளியிடப்பட்ட அரசிதழின் 5 நகல்கள் பதிவுத் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும். கூடுதல் நகல்கள் தேவைப்படின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககத்தின் பண்டகப் பிரிவு அல்லது கிளை அலுவலகங்களின் விற்பனை பிரிவினை அணுகி இணையதள செலுத்துச்சீட்டு வாயிலாக உரிய தொகையினை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
பெயர்/மதமாற்றப் படிவத்தை இத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள முகவரி: http:/ www.stationeryprinting.tn.gov.in

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+