ஆதார் கார்டுல போட்டோ ரொம்பவே பழசா இருக்கா.. அப்டேட் செய்வது எப்படி? இதுதான் வழிமுறைகள்
சென்னை: ஆதார் கார்டில் இருக்கும் போட்டோ மிகவும் பழையதாகியதாக கருதினால் அந்த படத்தை எப்படி மாற்றுவது, எப்படி ஆதார் கார்டை அப்டேட் செய்வது என்பதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.
இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. 12 இலக்கங்கள் கொண்ட எண்கள் கொண்ட இந்த ஆதார் அடையாள அட்டை இந்தியாவில் ரொம்பவே முக்கியமான ஒன்றாக உள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தற்போது ஆதார் அட்டை அவசியம் கேட்கப்படுகிறது.

செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு துவங்குவது வரை பல சேவைகளை பெறுவதற்கும் ஆதார் எண்களே பிரதானமாக கேட்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஆதார் அட்டையை பெறுவதற்கு புகைப்படம் மட்டும் இன்றி கை விரல் ரேகைகள், கருவிழி படலம், உள்ளிட்ட தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது.
அதுபோக பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களும் பெறப்படும். குழந்தைகளுக்கு 5 வயது ஆன பிறகு விரல் ரேகை, கருவிழி பதிவு செய்யப்படுகிறது. பின்னர் 15 வயது ஆன பிறகு , பயோ-மெட்ரிக் தகவல்கள் புதுப்பிக்கப்படும். அதுபோக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்று பலருமே நினைப்பதுண்டு. இதற்கு பல ஆண்டுகளுக்கு பதிவெற்றம் செய்யப்பட்ட புகைப்படம் ஒரு காரணம் என்றால், ஆதார் கார்டில் இருப்பது நாம் தானா என்று அடையாளம் தெரியாத அளவிற்கு பலரது புகைப்படமும் மற்றொரு காரணமாக இருக்கிறது.
இதனால், அப்டேட் செய்யும் போதெல்லாம் புகைப்படத்தை மாற்றியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் பலரும் அதற்கான வழிமுறை தெரியாததால் விட்டு விட வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை அப்டேட் செய்வதற்கு என்ன விதிகள் உள்ளன.. யாரை அணுக வேண்டும் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை பார்ப்போம்..
ஆதார் கார்டில் புகைப்படத்தை அப்டேட் செய்வதற்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். அதேவேளையில் ஆதாரின் பிற அப்டேட்களை நாம் ஆன்லைனில் மூலமாக செய்து கொள்ளலாம். ஆனால், போட்டோவை இப்படி மாற்றம் செய்ய முடியாது. எனவே.. அழகாக எடுத்து வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆதாரில் வேற லெவல் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று எண்ணியிருந்தால் அதை கைவிட்டு விடுங்கள்...
ஆதார் கார்டில் போட்டோ அப்டே செய்ய வேண்டும் என்றால் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் தான் செல்ல வேண்டும். எனினும் இதற்கான படிவத்தை ஆன்லைனில் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து கொண்டு போகலாம். ஆதார் கார்டில் போட்டோ மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இங்கே காணலாம்.
* அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் சென்று அதற்கான படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும்.
ஆதார் மையத்தில் இருக்கும் ஊழியரிடம் பயோமெட்ரிக் தகவல்களை கொடுக்க வேண்டும்.
அதன்பிறகு மையத்தில் இருக்கும் கேமராவில் லைவ் போட்டோ எடுக்கப்படும்.
* இதற்கான கட்டணமாக ரூ. 100 பெறப்படும்.
* ஆதார் போட்டோ மாற்றம் செய்ய வைத்த கோரிக்கை ஏற்புக் கடிதம் உங்களுக்கு கொடுக்கப்படும்.
* உங்கள் ஆதார் கார்டில் புகைப்படம் மாறிவிட்டதா என்பதை நீங்களே URN எண் மூலமாக செக் செய்து கொள்ளலாம்.
* ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை. அப்டேட் ஆவதற்கான நடைமுறைகள் முடிவடையை 90 நாட்கள் வரை ஆகலாம்.
*ஆதாரில் புதிய போட்டோ அப்டேட் ஆன பிறகு புதிய ஆதார் கார்டை நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம்.
* UIDAI வெப்சைட்டில் 'டவுன்லொடு ஆதார்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
* ஆதார் எண் அல்லது பதிவு ஐடி (Enrolment ID) அல்லது மெய்நிகர் ஐடி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
* அங்கு கேட்கப்பட்டுள்ள கேப்ஷாவை பதிவிட்டு "ஓடிபி' என்ணை அனுப்பவும் என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.
* செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஆக வந்த ஓடிபி எண்ணை அதில் பதிவு செய்ய வேண்டும்.
* "Verify & Download" என்ற ஆப்ஷனில் கிளிக் செய்து அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்டை பிடிஎப் வடிவததில் டவுன்லோடு செய்யலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications