வீடு, மனை வாங்கியிருக்கீங்களா.. பத்திரப்பதிவுக்கு பின், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வது எப்படி?
சென்னை: வீடு அல்லது மனை வாங்கிய பின்பு அதற்கான ஆவணங்களை சரி பார்த்து பத்திரப்பதிவை முடித்தவர்கள், கையோடு சொத்துவரி பெயர் மாற்றம் செய்துவிட வேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
சொத்து வரி என்பது ஒரு நகரத்திற்கும் சரி, வீடு வாங்குவோருக்கும் சரி, மிக முக்கியமானது ஆகும். மாநகராட்சி அல்லது நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மைப் பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு சொத்து வரி மிக முக்கியம் ஆகும்.

இந்த சொத்து வரி என்பது நகராட்சி அலுவலகம் பராமரித்து வரும் சொத்து வரி (Pr-o-p-e-rty Tax) பதிவேடுகளில் இருக்கும். பொதுவாக சொத்தின் புதிய உரிமையாளரது பெயரை பதிந்து, மாற்றம் செய்யப்படாவிட்டால், ரசீதுகள் முந்தைய உரிமையாளர் பெயரில் வழங்கப்படும் நிலை ஏற்படும். எனவே புதிதாக சொத்து வாங்கியவர்களுக்கு வரி செலுத்தாத நிலையில் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.
பெயர் மற்றும் முகவரி மாற்றம் சம்பந்தமாக நம்மிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் எளிதாக சொத்து வரி பெயர் மாற்றம் செய்துவிட முடியும்.
சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்:
கடைசியாக கட்டிய வரிக்கான ரசீது
விற்பனை பரிவர்த்தனை பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல்
வீட்டு வசதி சங்கத்திடமிருந்து (Housing Society) வீடு வாங்கப்பட்டிருந்தால், அதனிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழ் ( NOC)
கையொப்பம் இட்ட பூர்த்தி செய்த விண்ணப்பம்
சொத்து வரி ஏன் அவசியம்: பரம்பரை சொத்து அல்லது புதியதாக வாங்கப்பட்ட சொத்து ஆகிய எதுவாக இருந்தாலும் சொத்து மீதான உரிமையை நிலைநாட்ட சொத்து வரிக்கான பெயர் மாற்றம் அவசியம்ஆகும். அதற்கு நீங்கள், நீதித்துறை முத்திரையோடு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். சொத்து பற்றிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை அந்த பகுதி தாசில்தாரிடம் அல்லது வருவாய் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, ஆட்சேபணை இல்லா சான்றிதழ் (NOC) கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். முந்தைய உரிமையாளர் காலமாகிவிட்டால் அவரது இறப்பு சான்றிதழ் கண்டிப்பாக விண்ணப்பதுடன் இணைக்கப்பட வேண்டும்.
சொத்துவரி பெயர் மாற்றியவர்கள் புதிய வீடுகள் அல்லது நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய், புன்செய் நில வரி அல்லது வீட்டு வரி) சரியாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
சொத்துவரி பெயர் மாற்ற கட்டணங்கள்: நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சொத்து வரி பெயர் மாற்ற, 500 முதல் 1,500 ரூபாய் வரை என்ற, நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கட்டணம் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாற்றப்பட்டது. சென்னை தவிர்த்து பிற மாநகராட்சிகளில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, சொத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை என்றால், 1,000 ரூபாய்; 10 லட்சம் ரூபாய் வரை என்றால், 3,000 ரூபாய் கட்டணம் ஆகும்.
20 லட்சம் ரூபாய் வரை என்றால், 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் சொத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் வரை என்றால், 10,000 ரூபாய் கட்டணம் ஆகும். ஒரு கோடி ரூபாய் என்றால், 20,000 ரூபாய் வரை கட்டணம் பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால், பெயர் மாற்ற ஒவ்வொரு ஒரு கோடிக்கும், 20,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என்று சொல்கிறார்கள்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications