பான் கார்டு + ஆதார் கார்டு இணைப்பு முடிஞ்சதா? உங்களுக்கு மெசேஜ் மூலம் "செக்"பண்ண தெரியுமா? ஈஸியோ ஈஸி
சென்னை: ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு நிலையை எஸ்எம்எஸ் மூலம் எப்படி சரிபார்க்கலாம் தெரியுமா.. ஜஸ்ட் 5 நிமிடத்தில் முடித்துவிடலாம்.
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன..
காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும். வரி செலுத்துவோர் தங்களது ஆதாரை பான் கார்டுகளுடன் இணைக்கவில்லை என்றால், ஜூலை 1, 2023 முதல் பான் கார்டுகள் செயலிழந்துவிடும்.
ஆனால், ஆதார்-பான் கார்டு இணைப்பு நிலையை சரிபார்க்கும் செயல்முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ 2 நிமிடத்தில் நாம் சரிபார்த்துவிடலாம்.
* வருமான வரி மின்-தாக்கல் போர்ட்டலை பார்வையிடவும் .
* 'விரைவு இணைப்புகள்' தலைப்பின் கீழ், 'இணைப்பு ஆதார் நிலை' என்பதைக் கிளிக் செய்யவும்.
* 'பான் எண்' மற்றும் 'ஆதார் எண்' ஆகியவற்றை உள்ளிட்டு, 'இணைப்பு ஆதார் நிலையைக் காண்க' ஆப்ஷனை கிளிக் செய்யவும்

இப்போது, உங்கள் இணைப்பு ஆதார் நிலை குறித்த செய்தி அங்கு காட்டப்படும்... "உங்கள் பான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது" என்று திரையில் வரும்.. ஒருவேளை, உங்கள் ஆதார் உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால், பின்வரும் செய்தி திரையில் தோன்றும் - "பான் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. உங்கள் ஆதாரை பான் உடன் இணைக்க, 'இணைப்பு ஆதார்' என்பதைக் கிளிக் செய்யவும்"
நேரடி இணைப்பு: அதேபோல, ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு நிலையை சரிபார்க்க இந்த நேரடி இணைப்பு லிங்கை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.. ஆதார் பான் கார்டு இணைப்பு நிலையை சரிபார்க்க நேரடி இணைப்பு இதோ - https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status
இந்த லிங்கிற்குள் நுழைந்து, உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட்டு, 'இணைப்பு ஆதார் நிலையைக் காண்க' என்பதைக் கிளிக் செய்யவும்... அப்போது பான்-ஆதார் இணைக்கும் நிலை, திரையில் காட்டப்படும்.
எஸ்எம்எஸ் மூலம் ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு நிலையை எப்படி சரிபார்க்கலாம் தெரியுமா?
* பின்வரும் SMS-ஐ எழுதவும் - UIDPAN .
* '567678' அல்லது '56161' க்கு SMS அனுப்பவும்.
* அரசாங்க சேவையின் பதிலுக்காக காத்திருங்கள்.
ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டால், "ஆதார் ஏற்கனவே ITD தரவுத்தளத்தில் பான் (எண்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தியதற்கு நன்றி" என்று திரையில் வரும்.
ஒருவேளை நீங்கள், ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்படாதபோது, "ஐடிடி தரவுத்தளத்தில் பான் (எண்) உடன் ஆதார் இணைக்கப்படவில்லை. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தியதற்கு நன்றி." என்று திரையில் மெசேஜ் வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications