தமிழகத்தில் விறுவிறுப்பாக 'SIR’.. உங்கள் விண்ணப்பம் அப்லோட் செய்யப்பட்டுள்ளதா? எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் தாங்கள் அளித்த விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைன் மூலமே சரிபார்த்துக் கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அதனை எப்படி பார்ப்பது என பார்க்கலாம்..
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR - Special Intensive Revision) நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான திருத்தப் பணியைவிட இது மிகவும் தீவிரமானது என்பதால், தேர்தல் ஆணையம் வீடு வீடாக கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வகையில் திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாக சென்று 'எஸ்ஐஆர்' படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
வாக்காளர்கள் தங்கள் குடும்ப விவரங்கள், முகவரி, ஆதார் இணைப்பு போன்ற தகவல்களை அந்த படிவத்தில் பூர்த்தி செய்து மீண்டும் BLO-களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கணக்கெடுப்பு படிவங்களை BLO-கள் சரிபார்த்து, அவர்களுக்கென வழங்கப்பட்ட மொபைல் செயலியில் அதை ஸ்கேன் செய்து பதிவேற்றினால்தான் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் அந்த வாக்காளரின் பெயர் சரியாக இடம்பெறும். வாக்காளர்கள், எஸ்ஐஆர் படிவத்தை நேரில் மட்டுமல்ல, ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
BLO பதிவேற்றம்
ஆதார் விவரங்களுடன் voters.eci.gov.in தளத்தில் உள்ள 'Fill Enumeration Form' என்ற பகுதியை பயன்படுத்தி ஆன்லைனில் படிவத்தைச் சமர்ப்பிக்கும் வசதி தற்போது செயல்படுகிறது. பலர் படிவத்தை BLO-க்கு அளித்துவிட்டதா, BLO அதைப் பதிவேற்றம் செய்துவிட்டாரா என்ற சந்தேகத்துடன் உள்ளனர். அதனை வாக்காளர்கள் தாங்களே மிகவும் எளிதாக சரிபார்த்துக் கொள்ளும் வசதியும் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
முதலில், voters.eci.gov.in என்ற இணையதளத்துக்கு செல்லவும். அங்கு 'SIR-2026' என்ற பகுதியில் உள்ள 'Fill Enumeration Form' லிங்கை கிளிக் செய்யவும்.
ஆன்லைன் சரிபார்ப்பு
இதன்பின் உங்கள் மொபைல் எண் கேட்கப்படும். அதில் OTP வருகையை உறுதிப்படுத்தி லாகின் செய்யலாம். அதே தளத்தில் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி நேரடியாக Sign Up செய்து கொண்டு பயன்படுத்தவும் முடியும். லாக்-இன் செய்ததும், உங்கள் மாநிலம் (State) மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் எண் (EPIC No.) கேட்கப்படும். இந்த விவரங்களை உள்ளிட்டவுடன், உங்கள் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதை உடனடியாக தளம் காட்டும்.
எஸ்ஐஆர் படிவம்
இங்கே இரண்டு தகவல் இருக்கும். "Your SIR form has already been submitted" என்று காட்டினால், நீங்கள் BLO-க்கு கொடுத்த படிவம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம். உங்கள் பெயர் வரைவுப்பட்டியலில் இடம்பெறுவதற்கான செயல் முடிந்துவிட்டது. ஆன்லைன் படிவத்தைச் சமர்ப்பிக்கும்படி காட்டினால், BLO இன்னும் பதிவேற்றம் செய்யவில்லை. அப்போது, நீங்கள் நேரடியாக உங்கள் BLO-வை தொடர்பு கொண்டு நிலைகுறித்து விளக்கம் கேட்கலாம்.
EPIC எண் சரிபார்ப்பு
ஒட்டுமொத்தமாக, இந்த எஸ்ஐஆர் பணி வாக்காளர் பட்டியலில் தவறுகள் இல்லாமல், ஒவ்வொரு வாக்காளரின் தற்போதைய முகவரி மற்றும் குடும்ப விவரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்படுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு கணக்கெடுப்பில் தொழில்நுட்பத்தை பெரிதும் பயன்படுத்தி வருவதால், வாக்காளர்கள் தங்களின் தகவல்களை நேரடியாக ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ளலாம் என என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications