இதை கவனிங்க ப்ளீஸ்! சிஎம் செல்லுக்கு போன புகார்! உடனே களமிறங்கிய 3 துறைகள்! முதல்வரின் அதிரடி ஆக்சன்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக முதல்வரின் தனிப்பட்ட பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பின், முதல்வரின் தனிப்பட்ட செல் வேகமாக உதவிகளை செய்து வருவதாக செய்திகள் வெளியாக தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் சி.எம் செல்லில் கொடுக்கப்பட்ட புகார் ஒன்றிற்கு வேகமாக தீர்வு காணப்பட்டது குறித்து திமுக நிர்வாகி ட்விட் செய்துள்ளார்.
https://cmhelpline.tnega.org/portal/ta/home என்ற இணைய முகவரியை பயன்படுத்தி முதல்வரிடம் மக்கள் புகார்கள் அளிக்க முடியும். அல்லது TN CM Helpline Citizen என்ற செயலியை போனில் டவுன் லோட் செய்தும் பயன்படுத்த முடியும்.
இது உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த,மற்றும் எளிமையான பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையம் ஆகும். இதில் மக்கள். அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்து அவைகளை கண்காணிக்கலாம். எதை பற்றி வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.

சி. எம் செல்
உங்கள் குறைகளை helpline, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல், கீச்சகம் போன்ற சமூக ஊடகம் மூலமாகவும், அல்லது தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம். உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பலாம் மற்றும், கருத்துக்களை பதிவு செய்யலாம் மற்றும் முதல்வரின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். இதில் கொடுக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதாக மக்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். திமுக ஆர்.எஸ் பாரதியின் மகன் மருத்துவர் சாய் லட்சுமிகாந்த் பாரதி இது தொடர்பாக போஸ்ட் ஒன்றை செய்துள்ளார்.

புகார் எப்படி?
சிஎம் செல்லில் கொடுத்த புகார் பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அதில், ஒரு மாசத்துக்கு முன்னாடி CM செல்லில் ஒரு புகார் கொடுத்து இருந்தேன். கொஞ்சம் சிக்கலான புகார். இதை எப்படி பார்க்கப்போறாங்க என்ன பண்ணுவாங்கன்னு ஒரு கேள்வியும் இருந்தது. இப்போ அந்த புகார் என்னனு சொல்றேன். சுண்ணாம்பு கொளத்துர் சிக்னலில் கடக்கும் பிரச்னை தான் அது. அந்த சிக்னல் ல உள்ள சாலையை மழைநீர் வடிகாலுக்காக பராமரிச்சு கொண்டு இருக்காங்க.

ஆர். எஸ் பாரதி
அதனால நேரா போக முடியாம சுத்திட்டு போகணும். இந்த சிக்னலோட மிக பெரிய பிரச்சனை, எவனும் இந்த சிக்னலில் வண்டியை நிறுத்தமாட்டான். சிகப்பு எரிஞ்சாலும் சின்ன சிக்னல் தானன்னு நிறுத்தாம வேகமா போவாங்க. காலையில பையன ஸ்கூலில் விட போறப்ப இது பெரிய பிரச்னை. கிரீன் சிக்னல் போட்டு க்ராஸ் பண்ண போனாலும் சில மாநகர பேருந்துகள் நம்மல மறிச்சு புகுந்து போகும். இதை அப்படியே ஒரு புகாரில தேதி வாரியா நேரம் வாரியா கொடுத்து இருந்தேன்.

என்ன புகார்
கடந்த 2 வாரமா எனக்கு 3 அழைப்புகள் வந்தது. அழைப்பு 1: போக்குவரத்து கழகத்து அறிவிப்பு. நேரடியாக இதை டெபுடி கமிஷனருக்கு அனுப்பி, அந்த சிக்னலில் ஒரு போக்குவரத்து காவலாளரை போடுறோம்னு வாக்குறுதி கொடுத்தாங்க. அழைப்பு 2: நெடுஞ்சாலை துறை. அந்த பால வேலைகள் இந்த செப்டம்பர் மாதத்திற்குள் முடிஞ்சு திறக்கப்படும் ன்னு சொல்லி இருந்தாங்க. இன்று அக்டோபர் 8, அந்த பாலத்தின் வழியாக சென்று வந்தேன்.

அழைப்பு
அழைப்பு 3: மாநகர போக்குவரத்து கழகத்திடம் இருந்து வந்தது. சிக்னலில் நிற்காமல் போன தடம் எண் 91 பேருந்துகள் மேல் நடவடிக்கை எடுப்போம், அந்த சிக்னலில் 91 தட எண் பேருந்துகள் நின்று போகும்ன்னு சொல்லி வைத்தார்கள். இது அங்க வந்த லட்சத்துல ஒரு பிரச்சனையாக இருக்கலாம். ஆனா காலையில ஸ்கூலுக்கு போற எத்தனையோ பெற்றோர் கொஞ்சம் நிம்மதியா அந்த சிக்னல க்ராஸ் பண்ணுவாங்க.

வேகம்
பி.கு: ஒரு மாசத்துக்கு முன்ன, ஒரு பெட்ரோல் பங்க் ல பெட்ரோல் விற்பதுல சில முறைகேடுன்னு Public Grievance புகார் ஒன்னு எழுப்பி இருந்தேன். அதுவும் அந்த பகுதி கீழ்கட்டளை காவல் நிலையம் வழியா சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறையில் இருந்து அழைப்பு வந்தது. உங்கள் தொகுதியில் முதல்வர் செயலியை தரவிறக்கம் செய்யுங்கள். சில பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கருவியாக பயன்படுத்துங்கள்., என்று இந்த செயலியை பயன்படுத்திய அனுபவத்தை அவர் குறிப்பிட்டு உள்ளார்.

எப்படி புகார் கொடுப்பது?
இந்த செயலியில் உங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிடவும். உள்நுழைய OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். அதன்பின் உங்கள் குறைகளை உள்ளிடவும். தயவுசெய்து 'மனுவைச் சமர்ப்பிக்கவும்' பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் குறைகளை படிவத்தில் உள்ளிடவும். அதன்பின் படிவத்தை சமர்ப்பிக்கவும். தயவுசெய்து படிவத்தை சமர்ப்பிக்கவும், அது அந்தந்த துறையை அடையும் என்பதையும் கவனித்துக்கொள்வதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சமர்ப்பித்த குறைகளின் நிலை உங்களுக்குத் தெரிவிக்கப்படும். 'என் மனுக்கள்' தாவலின் கீழ் முதல்வர் உதவி மையத்திலிருந்து உங்கள் குறைகளை கண்காணிக்கலாம்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications