பிளம் கேக் செய்து போரடிக்கிறதா? இந்த கிறிஸ்துமஸுக்கு விவிகம் கேக் செய்யலாமா? இதோ ரெசிபி!
சென்னை: கிறிஸ்துமஸ் வந்தாச்சு, என்னங்க பிளம் கேக் செய்ய போறீங்களா! பசங்க சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிக்கிறது என்கிறார்களா, கவலையை விடுங்க. இதோ வந்தாச்சு விவிகம் கேக்!
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வரும் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை வார இறுதி நாட்களை ஒட்டி வருவதால் தொடர் விடுமுறை கிடைத்துவிட்டது.
இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கிறார்கள். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் கூட்டம் நிறைந்திருக்கிறது. இந்த முறை பயணங்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், கார்கள், பைக்குகளில் புறப்படுகிறார்கள்.

இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருக்கிறது. கடந்த மாதமே கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பெரும்பாலும் கேக்குளை வீடுகளிலேயே தயாரிப்பார்கள். சிலர் கடைகளில் வாங்கி கிறிஸ்துமஸை கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் வீடுகளில் பெரும்பாலும் பிளம் கேக்குகளைத்தான் தயாரிப்பார்கள். இந்த பிளம் கேக்குளை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறதா? கவலையை விடுங்கள்! அருமையான விவிகம் கேக் இருக்கிறதே. இது புதுச்சேரி கேக், பாண்டிசேரி கேக், விவிகம் கேக் என பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த கேக்கை தயாரிப்பதற்கு என்னென்ன தேவை என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
5 முட்டைகள்,
அரை கிலோ சர்க்கரை
அரை கிலோ சேமியா
1 டேபிள் ஸ்பூன் நெய்
150 கிராம் வெண்ணெய்
2 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
அரை கப் உலர் திராட்சை
அரை கப் முந்திரி கொட்டைகள்
கால் கப் கேன்டிட் பழங்கள் (காய்ந்த பதப்படுத்தப்பட்டவை)
பெரிய சீரகம் - 1 டீஸ்பூன்
அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் (சமையல் சோடா)
1 கப் தேங்காய் பால்
செய்முறை:
ஒரு வாணலியில் நெய் ஊற்றி சேமியாவை வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு அதை எடுத்து வேறு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். முட்டைகளை அடித்து அதனுடன் சர்க்கரை, வெண்ணெய்யை சேர்க்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சேமியா, முட்டை கலவை, தேங்காய் பால், முந்திரி பருப்புகள், பெரிய சீரகம், உலர் திராட்சை, வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை கலக்க வேண்டும்.
பிறகு பேக்கிங் பவுடரை சேர்த்து ஒரு நாள் முழுவதும் பிரிட்ஜில் வைத்திருக்க வேண்டும். பின்னர் சாதாரண பேக்கிங் பேனில் 45 நிமிடங்களுக்கு வேக விடவும், பிறகு ஆறியவுடன் துண்டுகளாக போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் விவிகம் கேக் தயார். சிலர் இந்த கேக்கில் ரம் கூட ஊற்றுவார்கள். அதை சேர்ப்பதும் சேர்க்காததும் நம் விருப்பம் ஆகும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications