சொத்து பத்திரத்தில் இனிஷியல் தவறு? பத்திரப்பதிவு செய்த பட்டா ஆவணத்தில் எழுத்து பிழை? திருத்துவது ஈஸி
சென்னை: பத்திரப்பதிவு செய்துவிட்டு, ஆவணங்களை பதிவு செய்த பிறகு, அதில் பிழை இருந்தால், சரி செய்ய முடியுமா? பத்திரப்பதிவுக்கு பின்னரும் பிழைகளை திருத்தம் செய்வது எப்படி? பத்திரத்தில் இனிஷியல் தவறாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பிழை திருத்தல் விண்ணப்பம் எழுதும்போது கவனிக்க வேண்டியவை என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை படித்துவிட்டுதான் எப்போதுமே பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.. எனினும், சிறு பிழைகூட இல்லாமல், தட்டச்சு செய்ய முடியாது. நாம் கவனிக்காமல் விட்டுள்ள சின்ன பிழைகள் என்றாலும், பின்னாளில் அது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும்..
விலையின் தொகை: குறிப்பாக, உரிமையாளர் பெயர், தந்தை பெயர், விலாசம், மனையின் விவரங்கள், விலையின் தொகை போன்றவைகளில் ஏதாவது தவறு இருந்தால், சம்பந்தப்பட்ட சொத்துக்களை விற்க முடியாது.. அல்லது பெயர் மாற்றம் செய்யவேண்டி வந்தால், அப்போதும் சிக்கலாகிடும். இந்த சிறு எழுத்து பிழையை காட்டி, நிராகரித்துவிடக்கூடும். எனவே, தவறு என்று தெரிந்தால், உடனடியாக அந்த ஆவணத்தில் உள்ள பிழையை திருத்தி கொள்ள வேண்டும்.

பெயரில் திருத்தம் செய்ய வேண்டுமானால், சார் பதிவாளர் அலுவலகத்தில்தான் செய்ய முடியும்.. விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி தரும் அதே நபராலேயே, இந்த பிழை திருத்தமும் செய்யப்படும். இப்படி பிழையும் திருத்தப்பட்டு, நம்மிடம் ஒப்படைக்கும் ஆவணத்தின் பெயர்தான், "பிழை திருத்தல் பத்திரம்" (Rectification Deed) என்பார்கள். இதற்கு திருத்தப் பத்திரம், உறுதிப்பத்திரம், துணைப்பத்திரம் அல்லது திருத்தும் பத்திரம் என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு.
பத்திரப்பதிவு: திருத்தப்பட்ட சொத்து ஆவணத்தில், பிழை என்ன என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.. பத்திரம் பதிவு செய்யும் முன்பு, தெரு பெயர், விற்பவரின் தந்தை பெயர், முகவரியை மீண்டும் ஒருமுறை படித்து பார்க்க வேண்டும். பரப்பளவு, பெயர் உள்ளிட்டவற்றில் வேறுபாடு இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இந்த ஆவணம் மூலமே பிழைகளை சரி செய்ய முடியும். அப்படி பிழைகளைத் திருத்தும் ஆவணத்தையும் பதிவு செய்ய வேண்டும். பெயர், முகவரி போன்றவற்றில் கவனக்குறைவால் ஏற்படும் பிழைகள் என்றால் அவற்றை திருத்தி பதிவு செய்யும்போது, அதற்கென கட்டணங்கள் எதுவும் வசூலிக்கமாட்டார்கள். அதாவது சொத்து விவரமும், நீங்கள் வாங்கும் பட்டாவும் ஒரே மாதிரி இருக்காது...
ஆனால், சிலர் தாய் பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணை தவறாக குறிப்பிட்டுவிடுவார்கள். மனையின் நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் போன்ற தகவல்கள் தாய்ப் பத்திரத்தில் இருப்பதுபோலவே இருந்தால், பிழை திருத்தம் செய்வதற்கு ரூ. 300 வரை செலவாகக்கூடும்.
இனிஷியல்: இனிஷியலையும் பத்திரத்தில் சரியாக குறிப்பிட வேண்டும்.. ஆதார் கார்டு, பான் கார்டு, மார்க் ஷீட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில், உங்கள் சரியான இனிஷியல் உள்ள அனைத்தையும் சார்பதிவாளர் காட்டி, இதில் எதை வேண்டுமானாலும் ஆவணத்தோடு இணைத்துக்கொள்ள சொல்லிவிடலாம். உடனே அவரும், நீங்கள் எழுதும் இனிஷியலுடன், சொத்து ஆவணத்தை பதிவு செய்து தருவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications