நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அருமருந்து.. நில வேம்பு கசாயம்.. வீட்டில் தயாரிப்பது சுலபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அருமருந்தாக நில வேம்பு கசாயம் சொல்லப்படுகிறது. இந்த கசாயத்தை எப்படி தயார் செய்யலாம் என்பதை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.

Recommended Video

    நிலவேம்பு கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..கொரானாவை குணப்படுத்தாது

    கடந்த கோடை காலத்தில் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இந்த காய்ச்சலுக்கு சிறுகுழந்தைகளும் பலியாகினர். அப்போது இந்த காய்ச்சல் வராமல் தடுக்க நிலவேம்பு கசாயம் பயன்படுத்தப்பட்டது.

    அந்த கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் என்பதால் அதை குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் தற்போது கொரோனா காலத்திலும் அந்த மருந்தை குடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    நில வேம்பு கசாயம்

    நில வேம்பு கசாயம்

    அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறிகள், விட்டமின் சி உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளுமாறும் கூறுகிறார்கள்.இதனால் மக்கள் ஒரே நேரத்தில் இரு நோய்களை எதிர்கொள்ள நில வேம்பு கசாயத்தை தேடி ஓடுகிறார்கள். தற்போது இந்த கசாயத்தை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    9 மூலிகைகள்

    9 மூலிகைகள்

    இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறுகையில் நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பை மட்டும் காய்ச்சி பருகுவது அல்ல. நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பற்படாகம், பேய்ப்புடல் ஆகிய 9 அரு மூலிகைகள் கலக்கப்பட்டதுதான் நிலவேம்பு கசாயம். இது பொடியாகவும் சற்று கொரகொரப்பான பொருளாகவும் கிடைக்கிறது.

    குடிப்பது எப்படி

    குடிப்பது எப்படி

    இதை எப்படி தயார் செய்வதென்றால் 2 தேக்கரண்டி பொடியை எடுத்து 400 மில்லி தண்ணீரில் கலந்து 150 மில்லி அளவுக்கு சுண்ட காய்ச்சி வெறும் வயிற்றில் காலையும் மாலையும் குடிக்க வேண்டும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும், 5 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 30 முதல் 40 மில்லியும் வழங்க வேண்டும். தொடர்ந்து 3 நாட்களுக்கு குடிக்கலாம் என்றனர்.

    பழங்கால வைத்தியம்

    பழங்கால வைத்தியம்

    டெங்குவுக்கு நிலவேம்பு குடிநீரும், கொரோனாவுக்கு கபசுர குடிநீரும் குடிக்குமாறு மருத்துவர்கள் சொல்வதை பார்க்கும் போது பாரம்பரிய மருத்துவ முறைக்கு நாம் மாறி வருவதை காண முடிகிறது. எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத இந்த மூலிகைகளை நாம் அருந்தும்போது ஒரு நோய் மட்டுமல்ல பல நோய்கள் பறந்து ஓடிவிடும். ஆனால் எல்லாமே அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கேற்ப மருத்துவரின் ஆலோசனைபடி குடிக்க வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+