நாளைக்கு தீபாவளி! இன்று ஒரே நாளில் செய்யக் கூடிய ஈஸி ஸ்னாக்ஸ் ரெசிபிஸ்! தட்டை முதல் மிக்ஸர் வரை!
சென்னை: நாளைக்கு தீபாவளி இன்னும் ஸ்வீட்ஸ், பலகாரங்கள் எல்லாம் செய்யலையே என கவலையில் இருக்கிறீர்களா. எளிதாக செய்யும் சில பலகாரங்கள், ஸ்வீட்களை பார்க்கலாம்.
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள்தான். முன்பெல்லாம் தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பிலிருந்து நம் அம்மாக்கள் தீபாவளி பலகாரங்களை செய்ய தயாராவர். இதனால் மாவு மில்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படும். சில மாவு மில்கள், அரைக்கத் தேவையான பொருட்களை கொடுத்துவிட்டு இரவு வந்து வாங்கிச் செல்ல சொல்வர்கள். அந்த அளவுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.

அதிலும் முறுக்குக்கு மாவு அரைக்கும் போது கேழ்வரகு அரைத்த மிஷினில் அரைத்தால் முறுக்கு கருப்பாக வரும் என்பார்கள். எனவே இதையெல்லாம் பார்த்து கேட்டு அரைக்க வேண்டும். அது போல் நம் பாட்டிமார்கள் எல்லாம் உலக்கையில் வைத்து அரிசி மாவை இடித்து பலகாரம் செய்வர்.
இந்த வழக்கமெல்லாம் கால போக்கில் மறைந்து தற்போது ரெடிமேட் மாவை வாங்கி முறுக்கு, அதிரசம் செய்யும் நிலை வந்துவிட்டது. வேலைக்கு செல்லும் சிலருக்கு பலகாரம் செய்ய நேரம் இருக்காது. என்னதான் கடைகளில் பலகாரம் வாங்கினாலும் நம் கையால் செய்து வைத்து நைவேத்யம் செய்தால் மன திருப்தி பெறும்.
நாளை தீபாவளி என்பதால் இன்று குறைந்த நேரத்தில் என்னென்ன பலகாரங்களை செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதலில் தட்டை மிகவும் எளிது.
தட்டை செய்ய தேவையான பொருட்கள்
அரிசி மாவு, கொழுக்கட்டை மாவு, இடியாப்ப மாவு - இவற்றில் எதையாவது எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மாவு ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு அதை கோலமாவு பதத்திற்கு நன்றாக வறுத்தக் கொள்ள வேண்டும்.
பிறகு அரிசி மாவு அளந்த கப்பிலேயே அரை கப் அளவுக்கு பொட்டு கடலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதை நைசாக அரைத்து ஜலித்து கொள்ளவும்.

பிறகு தேவையான அளவுக்கு காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பையும் எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும்
வேர்கடலையை வறுத்து தோல் உரித்து மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக உடைத்து கொள்ளவும்
கடைசியாக வெள்ளை எள் அல்லது கருப்பு எள் (தேவைப்பட்டால், கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் பலகாரம் என்றால் எள்ளை தவிர்த்துவிடுங்கள்) ஒரு ஸ்பூன் பொரிய விட்டு எடுத்துக் கொள்ளவும்.
அது போல் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகை ஒன்றும் பாதியுமாக இடித்துக் கொள்ளுங்கள்.
தற்போது பெரிய பாத்திரத்தில் அரிசி மாவை கொட்டி, அதில் வறுகடலை (பொட்டுக் கடலை) மாவு, மிளகு- சீரகம், தேவையான அளவு உப்பு, வேர்கடலை உடைச்சல், எள், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு ஊற வைத்த கடலை பருப்பை தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்துக் கொள்ளவும். ஊற வைத்த காய்ந்த மிளகாயுடன் பூண்டை தோலுடன் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இவற்றையும் நன்கு கலந்து வெண்ணெய் கட்டி அல்லது ஒரு குழி கரண்டி எண்ணெய்யை கொதிக்க வைத்து ஊற்ற வேண்டும்.
பிறகு அந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும், இதனிடையே உப்பு சரிபார்த்து தேவையெனில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தேய்த்து சிறிய உருண்டையாக பிடித்து அதை கைகளால் பிரஸ் செய்யலாம். இல்லாவிட்டால் மேஷர் இருந்தால் அதை வைத்து எளிதாக அழுத்தி அழுத்தி காய்ந்த எண்ணெயில் போட்டு எடுக்கலாம்.
காப்பி குடிக்கும் டம்ளரில் ஒரு கப் மாவு எடுத்தால் 15 முதல் 20 தட்டைகள் வரும். நன்கு சுவையுடன் இருக்கும்.
ரவா லட்டு
இதெல்லாம் ஸ்வீட்டில் கணக்கில்லை என்றாலும் குறுகிய நேரத்தில் செய்யக் கூடியவை.
ஒரு கப் ரவை
ஒன்று அல்லது முக்கால் கப் சர்க்கரை
ஏலக்காய் பொடி
முந்திரி, திராட்சை
நெய்
ஒரு கப் ரவையை ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதை ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பொடியாக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கொட்டி , அதில் நெய்யில் தாளித்த முந்திரி , திராட்சையை போட்டு கிளறிக் கொள்ளவும்.
பிறகு காய்ச்சிய நெய்யை ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பால் தெளித்தும் பிசைந்து சிறு உருண்டைகளாக்கலாம்.
பின்குறிப்பு: பாலை லேசாக தெளிக்க வேண்டும். நிறைய ஊற்றிவிட்டால் உருண்டை பிடிக்க வராது.
முறுக்கு
முறுக்கு செய்ய கடைகளில் முறுக்கு மாவு விற்கப்படுகிறது. அதை வாங்கி அதில் உப்பு சரி பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு வெண்ணெய் அல்லது காய்ந்த எண்ணெய்யை அந்த மாவில் ஊற்றி நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அதற்காக மிகவும் டைட்டாக பிசையவே கூடாது.
பிறகு முறுக்கு அச்சில் இந்த மாவை போட்டு முறுக்குகளாக பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
ஓமப்பொடி
ஒரு கப் கடலை மாவ
கால் கப் அரிசி மாவு
மஞ்சள் தூள், உப்பு
பெருங்காயத்தூள்
சிறிது அளவு ஓமம்
சூடான எண்ணெய்
கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள், ஓமம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதில் காய்ந்த எண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டு பிசைய வேண்டும். இதை சற்று இலகுவாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஓமப்பொடி அச்சில் மாவை போட்டு எண்ணெய்யில் போட்டு எடுக்க வேண்டும்.
காராப்பூந்தி
ஒரு கப் கடலை மாவு,
கால் கப் அரிசி மாவு
மிளகாய் பொடி
பெருங்காயத்தூள்
உப்பு
இவற்றை எல்லாம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி பூந்திகளாக பொரித்துக் கொள்ளவும்.
மிக்ஸர்
மேலே சொன்ன ஓமப்பொடியையும், பூந்தியையும் எடுத்துக் கொள்ளலாம்.
பொட்டு கடலை, வேர்க்கடலை, முந்திரி பருப்பு, அவுல், கறிவேப்பிலை, கொள்ளு ஆகியவற்றை எண்ணெய்யில் நன்றாக பொரிய விடவும். ஓமப்பொடியை உடைத்துக் கொள்ளவும், பிறகு ஒரு பாத்திரத்தில் பூந்தி, உடைத்த ஓமப்பொடி, எண்ணெய்யில் பொரித்தவை எல்லாவற்றையும் சேர்த்து கலந்து விட்டால் மிக்ஸர் தயார். இவற்றை நிச்சயம் இன்று ஒரே நாளில் செய்துவிடலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications