ஏஐஎஸ் ஆப்.. வருமான வரி செலுத்துபவர்களுக்கு வரப்பிரசாதம்.. பயன்படுத்துவது எப்படி ?
சென்னை: வருமான வரித்துறை வரி செலுத்துபவர்களுக்காக 'ஏ.ஐ.எஸ். பார் வரி செலுத்துவோர்' ( ais app) என்ற புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படி டவுன்லோடு செய்து பயன்படுத்துவது என்பதை இப்போது பார்ப்போம்.
வருமான வரி செலுத்துபவர்களுக்கு, வரி தொடர்பான பல்வேறு சந்தேகங்கள், தகவல்கள் தேவைப்படும். இதைபற்றி வருமான வரித்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும். இந்நிலையில் மொபைல் போனிலேயே உங்களின் அனைத்து தகவல்களையும் இருந்த இடத்தில் இருந்தே அறிய முடியும் அதற்காக வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ள ஆப் தான் ஏஐஎஸ் ஆப்.
இந்த ஏஐஎஸ் ஆப் மூலம் வரி செலுத்துபவர்கள் தங்கள் தகவல் சுருக்கம், தகவல் அறிக்கைகளை ஆண்டுதோறும் இதில் பார்க்க முடியும். வருமான வரித்துறையால் இலவசமாகவே இந்த சேவையை பயன்படுத்த முடியும். ais ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.

எப்படி பெறலாம்
இந்த ஆப்பை பயன்படுத்தி வருமான வரி செலுத்துவோர் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் தொடர்பான தகவல்களை காணலாம். குறிப்பாக, வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல், வருமான வரி திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். வரி செலுத்துபவருக்கு தகவல் பற்றிய கருத்தை வழங்குவதற்கான விருப்பமும் வசதியும் உள்ளது.

வெளிநாட்டு பணம்
மேலும் GST தரவு, வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் போன்ற பிற தகவல்களையும் இந்த ஆப் மூலம் பார்க்கலாம். ஆப்பில் காட்டப்படும் தகவல் தொடர்பான கருத்துக்களையும் பயனர்கள் தெரிவிக்கலாம்.

ஒடிபி முக்கியம்
இந்த செல்போன் செயலியை பெறுவதற்கு வரி செலுத்துவோர் பயன்பாட்டில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக பான் எண்ணை வழங்குதல், செல்போன் எண்ணில் அனுப்பப்பட்ட ஓடிபி மூலம் அங்கீகரிக்க வேண்டும். மின்னஞ்சல், இ-பைலிங் போர்ட்டலில் பதிவு செய்த பின்னர் பயன்படுத்த முடியும்.

எளிதாக பயன்படுத்தலாம்
செல்போனில் இந்த ஆப்பை எப்படி பயன்படுத்துவது? ais app கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்ய வேண்டும். அதில் பான் எண் மற்றும் ஒடிபியை பயன்படுத்திய பின்னர், 4 இலக்க பின்னை அமைக்க வேண்டும் . இப்போது அனைத்து தகவல்களையும் எளிதாக பயன்படுத்த முடியும்.இந்த ஆப் மேம்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் சேவைகள் இணக்கத்தை எளிதாக்குகிறது என்று டெல்லி வருமானவரி கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications