Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Whatsapp-க்கு ‛குட்பை'.. Arattai டவுன்லோட் அதிகரிப்பு! ஜோஹோ செயலியில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அமெரிக்கா உள்பட பிற நாடுகளின் தயாரிப்புகளை புறக்கணிக்க மக்கள் தொடங்கி உள்ளனர். அந்த வகையில் வாட்ஸ்அப்புக்கு மாற்றமாக பல்வேறு வசதிகளை கொண்ட ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலியை பலரும் டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த செயலியை டவுன்லோட் செய்து எப்படி பயன்படுத்துவது? என்னென்ன வசதிகள்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அதேபோல் நம் நாட்டின் அமெரிக்கா சென்று பணியாற்றுவதை தடுக்கும் வகையில் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். இதனால் பலரும் அமெரிக்காவின் ஐடி நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளன.

how-to-download-arattai-app-and-use-instead-of-rival-whatsapp

குறிப்பாக பிரதமர் மோடி உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று மேடைக்கு மேடை கூறி வருகிறார். அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பலரும் அரட்டை (Arattai) செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். வாட்ஸ்அப் என்பது அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

அதேவேளையில் அரட்டை என்பது தமிழ்நாட்டைதலைமையிடாக கொண்டு செயல்படும் ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த செயலியும் வாட்ஸ்அப் போன்றது தான். தனிப்பட்ட முறையிலும், குரூப் தொடங்கியும் மெசேஜ் அனுப்பி கொள்ளலாம். வீடியோ மற்றும் ஆடியோ கால் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். இந்த செயலியின் சிம்பள் ‛அ' என்ற தமிழ் எழுத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது அரட்டை செயலி டவுன்லோட் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் 3 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த அரட்டை செயலியை தற்போது 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தக்கத்துறை அமைச்சர்கள் இந்த செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் தற்போது பலரும் இந்த செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த அரட்டை செயலியை ஒவ்வொருவரும் ஆண்ட்ராய்டு, ஐபோன், டெஸ்க்டாப் மற்றும் டிவிகளில் பயன்படுத்த முடியும். இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

இந்த செயலியில் வாட்ஸ்அப் போல் வாய்ஸ்கால், வீடியோ கால் செய்யும் வசதி உள்ளது. அதேபோல் போட்டோ, வீடியோக்களை பகிர முடியும். ஒரு நபரிடம் தனியாகவும், பல்வேறு நபர்களை ஒருங்கிணைத்து குழுக்களை உருவாக்கியும் ‛சாட்' செய்ய முடியும். ஆன்லைன் மீட்டிங்கையும் நடத்திலாம். நெட்வொர்க் குறைவான பகுதிகளிலும் இந்த செயலியை பயன்படுத்த முடியும். Calls are end-to-end encrypted செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாட்ஸ்அப்பை போல் சேனலையும் உருவாக்க முடியும். ஒன்இந்திய தமிழ் சார்பிலும் அரட்டை செயலியில் புதிதாக சேனல் தொடங்கப்பட்டுள்ளது. https://web.arattai.in/@oneindiatamil என்பதை கிளிக் செய்து ஒன்இந்தியா தமிழ் சேனலில் இணைந்து கொண்டு நொடிக்கு நொடி பிரேக் செய்திகளை பெற்று கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டை பொறுத்தவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியை டவுன்லோட் செய்யலாம். இல்லாவிட்டால் அரட்டையின் அதிகாரப்பூர்வ இணையம் சென்று டவுன்லோட் செய்யலாம். APK பைல்ஸ் முறையில் டவுன்லோட் செய்ய வேண்டாம். ஐபோன் என்றால் ஆப்ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கும். டவுன்லோட் செய்யும்போது அது ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி தானா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இப்படி செயலிகளை இன்ஸ்டால் செய்த பிறகு நாட்டின் பெயர், செல்போன் எண் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். அதன்பிறகு ஓடிபி வரும். அதனை பதிவிட்டால் கான்டக்டர், மைக்ரோபோன், கேமரா உள்ளிட்டவை சார்ந்த பெர்மிஷன் கேட்கும். அதனை தேர்வு செய்த பிறகு நோட்டிபிகேஷன் வர தொடங்கும். ப்ரோபைல் பெயர், போட்டோவை விருப்பப்படி மாற்றி கொள்ளலாம். அதன்பிறகு இந்த செயலியை நம் நண்பர், குடும்பத்தினர் யார் பயன்படுத்துகின்றனர் என்ற லிஸ்ட் வந்துவிடும். மற்றவர்களை நாம் இன்வைட் செய்து அழைக்கலாம். இப்படி இன்வைட் செய்வது அவர்களுக்கு மெசேஜ் செல்லும்.

அதன்பிறகு 1:1 சாட் அல்லது குழு உரையாடலை நாம் தொடங்கலாம். இதற்கு சாட் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு எழுதியும், வாட்ஸ்நோட் அல்லது போட்டோ, வீடியோ, டாக்குமென்டுகளை அனுப்ப முடியும். வாய்ஸ் காலும் செய்யலாம். அதேபோல் வீடியோ காலும் பேசலாம். அதேபோல் அரட்டை குறிப்பிட்ட விஷயங்களை டிஸ்கஷன் செய்யவும், பிராட்காஸ்டிங் அப்டேட்டுகளுக்கான சேனல்களுக்கும் சப்போர்ட் செய்கிறது. ஒன்இந்தியா தமிழ் சார்பிலும் அரட்டை செயலியில் https://web.arattai.in/@oneindiatamil சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

மீட்டிங்கையும் அரட்டை செயலி மூலமாக நடத்தலாம். அதற்கான நேரம், டைட்டில், மீட்டிங்கை தலைமையேற்று நடத்துபவர்களின் விவரங்களை முன்கூட்டியே நாம் தேர்வு செய்து வைத்து கொள்ளலாம். அதேபோல் இந்த செயலியை டெஸ்க்டாப் மற்றும் வெப் அக்சஸ் முறையிலும் பயன்படுத்த முடியும். விண்டோஸ், macOS, and Linux வகைகளில் இதனை பயன்படுத்தலாம். டிவி என்றால் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+