‘நீட்’ தேர்வு ஹால் டிக்கெட் ஏப்ரல் 26ல் வெளியீடு.. டவுன்லோட் செய்வது எப்படி? முழு விவரம்
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‛நீட்' தேர்வு மே மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணிநேரம் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான ஹால்டிக்கெட் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவ-மாணவிகள் நீட் தேர்வு ஹால்டிக்கெட்டை டவுன்லோட் செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டில் மருத்துவ படிப்புகளை படிக்க ‛நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நம் நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பிற இளநிலை மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான நீட் தேர்வு தேதி கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
மே 3ம் தேதி நீட் தேர்வு
அதன்படி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடக்கும். நடக்கும். 13 மொழிகளில் தேர்வு இந்த தேர்வுகள் தமிழ் உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற உள்ளது. அதன்படி அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 26ல் ஹால்டிக்கெட் வெளியீடு
அதுமட்டுமின்றி இந்த தேர்வுக்கு மாணவ-மாணவிகள் மார்ச் 8 ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மாணவ-மாணவிகள் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்தனர். இந்நிலையில் தான் விண்ணப்பம் செய்தவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளது. மாணவ-மாணவிகள் அன்றைய தினம் முதல் ஹால்டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம். https://neet.nta.nic.in என்ற இணையதளம் சென்று மாணவ-மாணவிகள் நீட் தேர்வு ஹால்டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
720 மதிப்பெண்ணுக்கு தேர்வு
நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடக்கும். இதில் இயற்பியல் பாடப்பிரிவில் 45 கேள்விகளுக்கு 180 மதிப்பெண்கள், வேதியியல் பாடப்பிரிவின் 45 கேள்விகளுக்கு 180 மதிப்பெண்கள், பயாலஜி பாடப்பிரிவில் 90 கேள்விகளுக்கு 360 மதிப்பெண்கள் என்று மாணவ-மாணவிகள் 180 கேள்விகளுக்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டி இருக்கும்.
'மல்டிபிள் சாய்ஸ்' கேள்விகள்
இந்த கேள்விகள் அனைத்தும் 'மல்டிபிள் சாய்ஸ்' கேள்வியாக இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்கள் இருக்கும். அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தறவான பதில்களுக்கு ஒரு மதிப்பெண் மைனஸ் செய்யப்படும். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு 0 மதிப்பெண்ணாகும். இதனால், மாணவ-மாணவிகள் கவனமாக பதிலளிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications