வேலைக்கே போகாமல் உட்கார்ந்த இடத்திலேயே 37 லட்சம்.. நேர்மையாக சம்பாதிப்பது எப்படி.. கிண்டல் வீடியோ
சென்னை: அரசியல்வாதியின் பவர் என்னவென்று மக்கள் பலருக்கும் தெரிவதுஇல்லை. அவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்கள். அதேநேரம் சிலர் அரசியல்வாதிகளின் பெயர்களை சொல்லி போலியான வாக்குறுதிகளை கூறி கோடிகளை சம்பாதிக்கிறார்கள். குறிப்பாக அரசு வேலையில் சேர விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து மோசடி செய்து சம்பாதிக்கிறார்கள். அப்படித்தான் வேலைக்கே போகாமல் உட்கார்ந்த இடத்திலேயே 37 லட்சம் சம்பாதிப்பது எப்படி கிண்டல் பாணியில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதை வியப்புடன் பலர் பார்க்கிறார்கள்.
இன்றைக்கு பலர் உடல் உழைப்பை சிந்தாமல் சம்பாதிக்க நினைக்கிறார்கள். அது கிட்டத்தட்ட மோசடி தான். ஏனெனில் வேலைக்கே போகாமல் உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்க வேண்டும் என்றால், உங்களிடம் ஏற்கனவே நிறைய பணம் இருக்க வேண்டும்.

கோடி ரூபாய் உங்களிடம் இருந்தால் பிக்செட் டெபாசிட்டில் போட்டு ஓராண்டிற்கு பிறகு மாதம் மாதம் வட்டி எடுத்து வாழலாம்.. அல்லது பாதுகாப்பான முதலீடுகள், மியூட்சுவல் பண்ட், தங்கம், பங்குச்சந்தை என உங்களின் ரிஸ்கை பொறுத்து வருமானமும் அதிகமாக வரும் அல்லது குறைவாக வரும் திட்டங்களில் முதலீடு செய்து சம்பாதித்து வரும் பணத்தில் ஜாலியாக இருக்க முடியும் .
கிண்டல் வீடியோ
ஆனால் எப்போதுமே வருமானம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்து சிலர் பணமே இல்லாமல் தந்திரமாக ஏமாற்று வேலைகளை செய்கிறார்கள். அதுவும் அரசு வேலைக்கு சேர ஆசைப்படுபவர்களை குறிவைத்து ஏமாற்றுகிறார்கள். அடாவடியாக ரியல் எஸ்டேட் செய்வது , கட்டப்பஞ்சாயத்து செய்வது, அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்வது என சிலர் அரசியல்வாதிகளின் பழக்கத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள். இவர்களை கிண்டல் செய்து ஒரு குடும்பம் வீடியோ வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ள தகவல்களை பார்ப்போம்.
அரசியல்வாதி
ஒரு பெண் தனது மகனுடன் இன்னொருவரிடம் வருகிறார். அப்போது அந்த பெண், தன் மகன், இருக்கும் பணத்தை எல்லாம் அரசியல் அரசியல் என்று கூறி காலி செய்துவிட்டதாக கூறுகிறார். அப்போது மகன் இருக்கும் வயலை விற்று அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறேன் என்பார்.. அப்போது அங்கு உட்கார்த்திருக்கும் அரசியல்வாதி போன்ற தோற்றத்தில் உள்ளவர் கண்ணத்திலேயே பளார் எனறு அறைந்துவிடுவார். பின்னர் அவர் கூறியது தான் ஹைலைட்.. அவர் வார்த்தைகள் அப்படியே.. "முட்டாள் அரசியலில் பணத்தை போடக்கூடாது.. எடுத்து தான் பழக வேண்டும்.
நேர்மையாக சம்பாதிக்கலாம்
முதலீடே போடாமல், நேர்மையாக உன்னை லட்சாதிபதியாக்குகிறேன் (அது எப்படி முடியும் என்று கேட்பார்).. இபபோது எலெக்சன் முடிந்த உடன் அரசாங்க வேலைக்கு அறிவிப்பு கொடுப்பார்கள்.. அந்த நேரம் பார்த்து வேலைக்கு ஆசைப்படுற 50 பேரை பிடிக்க வேண்டும். அந்த 50 பேரிடமும் அரசாங்க வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறிநம்ப வைக்க வேண்டும். நம்பாவிட்டால் அரசியல்வாதிகளுடன் எடுத்த புகைப்படங்களை காட்ட வேண்டும்.. அவரை தெரியும்.. இவரை தெரியும் என்று கூற வேண்டும்..
45 பேரிடம் 20 ஆயிரம் எடுக்கலாம்
இந்த ஒரு வருட கேப்பில் வேலை ரெடியாகிவிட்டது. வந்திடும், வந்திடும் என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டும்... அதன்பிறகு ஒரு வருடத்தில் ரிசல்ட் வரும் போது, எப்படியும் ஐந்து பேராவது மெரிட்டில் வேலைக்கு போய்விடுவார்கள்.. அவர்கள் ஐந்துபேர் பணம் 15 லட்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வேலைக்கிடைக்காதவர்களிடம் போக்குவரத்து செலவுக்கு 20 ஆயிரம் செலவாகிவிட்டது. மீதம் 2 லட்சத்து 80 ஆயிரம் வாங்கிகொள்ளுங்கள் என்று கூற வேண்டும். அதன்படியே 2.80லட்சத்தை 45 பேருக்கும் வழங்க வேண்டும்.. அந்த 20 ஆயிரத்தை குறைத்துக் கொடுத்தாலும் வாங்கிகொள்வார்கள்.. ஏனெனில் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு என்று வெளியில் தெரியாமல் வாங்கி கொள்வார்கள்..
இவரிடம் இருந்துதான் அரசியல் கத்துக்கணும்😃
— Dr Mouth Matters (@GanKanchi) February 18, 2026
Brilliant.......🤔🤔🙄🙄 pic.twitter.com/kKCuOo5cke
37 லட்சம் வருமானம்
இதன் மூலம் வங்கி வட்டி காசு 13 லட்சம், ஐந்து பேருக்கு வேலை கிடைத்ததால் அவர்களின் பணம் 15 லட்சம், 45 பேரிடம் 20 ஆயிரம் என அது ஒரு ஒன்பது லட்சம் என ஒட்டுமொத்தமாக 37 லட்சம் சம்பாதித்துவிடுவார்.." இவ்வாறு கூறுவார். இறுதியாக லட்சத்திற்கு 1000 என்று 37 ஆயிரத்தை கொடு என்று கேட்பார்..இப்படியாக கிண்டல் வீடியோ இருக்கும். இந்த கிண்டல் வீடியோவில் உண்மை இல்லாமல் இல்லை.. இப்படித்தான் ஊர் பக்கம்நிறைய பேர் சம்பாதித்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதுபோன்று உங்களை அணுகும் மோசடியாளர்களிடம் பணத்தை கொடுத்து அரசு வேலை கிடைக்கும் என்று ஏமாற வேண்டாம். அதற்காகவே அந்த வீடியோவை அவர்கள் உருவாக்கி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications