ஆன்லைனில் ஆதார்.. உங்க ஆதார் அட்டையில் எத்தனை போன் நம்பர் இருக்கு தெரியுமா? ரொம்ப ரொம்ப ஈஸி
சென்னை: ஆதார் கார்டு நமக்கு மிக மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடியது.. அப்படிப்பட்ட ஆதார் கார்டில் வேறு யாருடைய செல்போன் நம்பர்கள் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அடிக்கடி நாம் கண்காணிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆதாரமான, அடையாள ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள போட்டோ பெரும்பாலும் அவரவருக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கும்.

போட்டோக்கள்: காரணம், அந்த நேரத்தில் அவசர அவசரமாக போட்டோக்களை பலர் எடுக்க வேண்டி வந்தது.. எனவே அவர்களின் போட்டோக்கள் அவர்களுக்கே அடையாளம் தெரியாத வகையில் தெளிவில்லாமல் இருக்கும்.. சிலருக்கு சிறு வயதில் எடுத்த போட்டோ என்பதால் அடையாளமே தெரியாத அளவில் இருக்கும். இதனால் நிறையப் பேர் தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய போட்டோவை அப்டேட் செய்யலாம் என்று நினைக்கக்கூடும்.. அது எளிதான காரியம்தான்...
பொதுவாகவே, ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்துவிடலாம். ஆனால், கைரேகை, புகைப்படம் போன்றவற்றை ஆதார் சேவை மையத்தில்தான் அப்டேட் செய்ய முடியும். ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமானால், அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
வழிமுறைகள்:
- UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (uidai.gov.in) பார்வையிடவும் அல்லது இந்த இணைப்பை (https://uidai.gov.in/) கிளிக் செய்யவும்.
- இப்போது 'Aadhaar Update' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.
- அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
- அங்கு இருக்கும், ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சரிபார்ப்பார்.
- உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தை பணியாளர் உங்களை படம் எடுத்துக்கொள்வார்.
- இந்த சேவைக்காக 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
- ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN - Update Request Number) வழங்குவார். இதற்கு பிறகு, உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.
போன்நம்பர் உறுதி: அதேபோல, ஆதார் கார்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் நாம் அடிக்கடி உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். காரணம், ஒருவருடைய ஆதார் கார்டை இன்னொருவர் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆதார் கார்டை வைத்து கடன் கூட பெற்றுக்கொள்ள முடியும். எனவே, ஆதாரில் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பர் உங்களிடம் இருப்பது அவசியம்.
- இதற்கு முதலில் tafcop.dgtelecom.gov.in என்ற வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும.
- இப்போது, உங்களுடைய 10 இலக்க மொபைல் நம்பரை பதிவிட்டதுமே, ஓடிபி நம்பர் அனுப்பப்படும்.
- அதைப் பதிவிட்டு, sign in செய்து உள்ளே செல்ல வேண்டும்.. இப்போது, உங்களுடைய ஆதார் கார்டில் எத்தனை மொபைல் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை நீங்கள் ஸ்கிரீனில் அங்கே பார்க்கலாம்.
ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாத மொபைல் நம்பரோ அல்லது உங்களுக்கு தெரியாத மொபைல் நம்பரோ அங்கே இருந்தால் அதை நீங்கள் டெலீட் செய்துவிடலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications