ஒரே நாளில் மாறும்.. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் பள்ளம் இருந்தால் புகார் அளிப்பது எப்படி
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்கள் அல்லது சாலைப் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து புகார் அளிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு வசதிகளை அறிவித்திருக்கிறது. ஒரே ஒரு மொபைல் போன் இருந்தால் உங்கள் புகாரை ஏற்று உடனே பள்ளத்தை சரிசெய்து விடுவார்கள். மாநில நெடுஞ்சாலைக்கு மொபைல் போன் போதும். இரண்டு ஆப்கள் உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்.
நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் செல்லும் போது, பள்ளங்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. அப்படி திடீனெ பள்ளம் வந்தால், அவர்களால் சமாளிக்க முடியாது. பின்னால் வரும் வாகனஙகள் மோதும் வாய்ப்பு உள்ளது. பள்ளத்தில் நிலைதடுமாறி விழுகவும் வாய்ப்பு உள்ளது. இப்படியான நிலையில் எங்கு புகார் அளிப்பது, புகார் உடனுக்குடன் சரி செய்யப்படுமா என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். அவர்களுக்காகவே மத்திய அரசு 'Rajmargyatra' மொபைல் ஆப் வைத்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை துறையின் அதிகாரப்பூர்வ ஆப் ஆகும். இதில் புகாரைப் பதிவு செய்வது மிகவும் எளிது.

'Rajmargyatra' ஆப்பில் புகார் அளிக்கலாம்
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் இருந்து Rajmargyatra ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் இருப்பிடத்தின் (GPS) உதவியுடன் சாலையின் பள்ளத்தை புகைப்படம் எடுத்து நேரடியாகப் பதிவேற்றலாம். பின்னர் உங்கள் புகாரின் தற்போதைய நிலை (Status) என்ன என்பதையும் இதில் கண்காணிக்க முடியும்.
அவசர உதவி எண் (1033) மூலம் புகார் அளிக்கலாம்
பள்ளம் மோசமாக உள்ளதாக உணர்ந்தால், மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறைக்கென பிரத்யேகமாக 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி உள்ளது. இந்த எண்ணிற்கு அழைத்து, நீங்கள் பயணிக்கும் சாலையின் பெயர் மற்றும் பள்ளம் உள்ள இடத்தை விவரித்து புகார் அளிக்க முடியும். இது 24 மணிநேரமும் செயல்படும் சேவையாகும்.
சமூக வலைதளங்கள் (Twitter/X) மூலம் புகார் அளிக்கலாம்
சமூக வலைதளங்கள் மூலமாகவும் புகாரை விரைவாக மத்திய அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். உங்கள் புகாரை பள்ளம் உள்ள இடத்தின் புகைப்படத்துடன் பதிவிட்டு, அதில் @NHAI_Official மற்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தை (@MORTHIndia) டேக் (Tag) செய்ய வேண்டும். குறிப்பிட்ட அந்தச் சாலையின் மண்டல அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்.
இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (nhai.gov.in) உள்ள 'Contact Us' அல்லது 'Public Grievances' பகுதிக்குச் சென்று உங்கள் புகாரைப் பதிவு செய்ய முடியும். புகார் அளிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள். சாலையின் பெயர் (எ.கா: NH-45, NH-4). சரியான இடம் (அருகிலுள்ள ஊர் அல்லது மைல்கல் எண்). அந்தப் பள்ளத்தின் தெளிவான புகைப்படம். இவை தெளிவாக இருக்க வேண்டும்.
மாநில நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை போல் மாநில நெடுஞ்சாலையில் பள்ளங்கள் இருந்தாலும் புகார் அளிக்க முடியும். மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட முக்கிய சாலைகளை நெடுஞ்சாலைதுறை தான் பராமரிக்கிறது. தமிழக நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலை என, 66,382 கி.மீ. தூர சாலைகளை பராமரித்து வருகின்றது.
நம்ம சாலை ஆப்
மாநில அரசின் சாலைகள் சேதம் அடையும் போது, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, 'நம்ம சாலை' என்ற பெயரில் மொபைல் போன் ஆப் இருக்கிறது. இந்த ஆப்பில் சாலை சேதம் குறித்து செல்போனில் போட்டோ எடுத்து, எந்த ஊர், எந்த பகுதி (ஜிபிஆர்எஸ் ல என்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலைகளில் பழுது என்றால், 24 மணி நேரத்திலும், மாவட்ட சாலைகளில், 72 மணி நேரத்திலும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். புகாரின் நிலையை என்ன என்று கண்காணிக்கும் வசதியும் நம்ம சாலை ஆப்பில் இருக்கிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications