இந்த 4 ரோட்டில் ஒன்றை சூஸ் பண்ணுங்க.. ஒரு நிமிடத்தில் உங்கள் கேரக்டரை சொல்லிவிட முடியும்! ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போதெல்லாம் கண்களை மயக்கும்.. பலமுறை யோசிக்க வைக்கும் optical illusion புகைப்படங்கள் நிறைய இணையத்தில் வைரலாக தொடங்கிவிட்டன. ஒரு படத்திற்கு உள்ளே இன்னொரு படம்.. அதற்கு உள்ளே வேறு ஒரு படம் என்று பார்ப்பவர்களை குழப்பி எடுக்கும் படங்கள் நிறைய வைரலாகி வருகின்றன.

ஒரு படத்தில் உங்களுக்கு என்ன உருவம் முதலில் தெரிகிறது என்பதை வைத்தே.. உங்களின் கேரக்டரை சொல்ல கூடிய கேம்களும் கூட நிறைய வந்துவிட்டன. இந்த நிலையில்தான் இணையத்தில் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

4 சாலைகள் இருக்கும் புகைப்படம் ஆகும் இது. இதில் உங்களுக்கு பிடித்த சாலையை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 4 சாலைகள்

4 சாலைகள்

நீங்கள் தேர்வு செய்யும் சாலையை வைத்து உங்களின் கேரக்டரை சொல்லிவிட முடியும். முதல் பாதை நீல மலர்கள் நிரம்பிய பாதை ஆகும். இரண்டாவது பாதை படிக்கட்டுகள் கொண்ட காட்டு பாதையாகும். மூன்றாவது பாதை காட்டுக்குள் இருக்கும் ஒத்தையடி பாதையாகும். நான்காவது பாதை இரண்டு பக்கமும் மரங்கள் கொண்ட சாலை ஆகும். இதில் நீங்கள் எந்த பாதையை தேர்வு செய்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களின் கேரக்டரை சொல்லிவிட முடியும்.

 சாலை 1

சாலை 1

முதல் நீல நிற பூக்கள் நிரம்பிய சாலைகள் நீங்கள் தேர்வு செய்து இருந்தால்.. உங்களுக்கு மெல்ல, அமைதியான குணம் உள்ளது என்று அர்த்தம். நீங்கள் அழகை விரும்புவீர்கள். ஆன்மீக ஈடுபாடு இருக்கலாம். நீங்கள் பெரும்பாலும் சந்தோசமாக டென்ஸன் இல்லாமல் இருக்கும் ஜாலி டைப் ஆளாக இருக்க வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் கடந்த காலத்தை பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். அதே சமயம் நீங்கள் புதிய விஷயங்களை மாற்றங்களை விரும்புவீர்கள் . அதை ஏற்றுக்கொள்ள கூடியவர். நீங்கள் இந்த இமேஜை தேர்வு செய்து இருந்தால் மாற்றம் உங்களை நோக்கி வருகிறது என்று அர்த்தம் மக்களே!

சாலை 2

சாலை 2

இரண்டாவதாக இருக்கும் படிக்கட்டுகள் கொண்ட பாதையை நீங்கள் தேர்வு செய்து இருந்தால்.. நீங்கள் ரிஸ்க் எடுக்க கூடிய குணம் கொண்டவர் என்று அர்த்தம். அதாவது ரிஸ்க் எடுப்பது, சாகசங்களை செய்வது, புதிய சோதனை முயற்சிகளை செய்வதை நீங்கள் விரும்புவீர்கள். நீங்கள் நல்ல போல்ட் குணம் கொண்டுவராகவும் இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். இந்த இமேஜை நீங்கள் தேர்வு செய்து இருந்தால்.. சவால்களை விரும்ப கூடியவராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் நாட்களில் சில முக்கியமான சாகசங்களை நீங்கள் செய்ய போகிறீர்கள் என்று அர்த்தம்.

சாலை 3

சாலை 3

மூன்றாவதாக இருக்கும் காட்டுக்குள் இருக்கும் ஒத்தையடி பாதையை நீங்கள் தேர்வு செய்து இருந்தால்.. நீங்கள் உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை, தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் விரும்பும் குணம் கொண்டவர்கள். அதாவது தனிமையை விரும்புவீர்கள். ஒவ்வொரு விஷயங்களை பலமுறை தீவிரமாக யோசிப்பீர்கள். எப்போதும் எல்லா விஷயத்தையும் கேள்வி எழுப்பி அதற்கு விடையும் காண்பீர். நீங்கள் சில விஷயங்களில் தோல்வி அடைந்தாலும் அதை பற்றி கவலையின்றி தொடர்ந்து செயலாற்றுவார்கள். உங்களுக்கு அமைதி என்றால் பிடிக்கும். நீங்கள் இந்த பாதையை தேர்வு செய்து இருந்தால் உங்களுக்கு அமைதியான.. பெரிய தொந்தரவு இல்லாத நாட்கள் வரப்போகிறது என்று அர்த்தமாம்!

சாலை 4

சாலை 4

இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும் இந்த சாலையை நீங்கள் தேர்வு செய்தீர்கள் என்றால்.. நீங்கள் ஜாலி டைப் ஆள். உங்களை எளிதில் கணிக்க முடியாது. நீங்கள் வழக்கமான நபர் கிடையாது. அதே சமயம் எதிலும் பெரிதாக சீரியஸாக இருக்க மாட்டீர்கள். எளிதாக காமெடி செய்து எல்லோரையும் சிரிக்க வைக்கும் குணம் கொண்டவர் நீங்கள். உங்கள் வாழ்க்கை வண்ணமயமானது. இந்த சாலையை நீங்கள் சூஸ் செய்து இருந்தால் வரும் நாட்களில் உங்கள் வாழ்க்கை கலர்புல்லாக இருக்கும் மக்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+