உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் வென்று உங்கள் தொகுதி எம்பியாக போகிறவர்களின் முகவரி, படிப்பு, சொத்துக்கள், கடன்கள் மற்றும் அவர்கள் மீத குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் 1,403 பேர் 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் குறைந்தபட்சமாக நாகையில் 26 மனுக்களும், அதிகபட்சமாக கரூரில் 73 மனுக்களும் தாக்கல் ஆகின.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களும், அவர்களது பிரதிநிதிகளும் பங்கேற்றனர். வேட்பு மனு பரிசீலனையின்போது சென்னையில் வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மற்றும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வேட்பு மனுக்கள் சர்ச்சையாகின. இதேபோல் கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவும் சர்ச்சையானது , சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி, தேனியில் டிடிவி தினகரன், நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ ராசா வேட்பு மனு சர்ச்சை எழுந்தது. இந்த வேட்பு மனுக்கள் நீண்ட நேர சர்ச்சைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற சனிக்கிழமையான நாளை கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதிப்பட்டியல் வெளியாகும். தற்போதைய நிலையில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக, அமமுக, மதிமுக, விசிக, தேமுதிக, நாம் தமிழர் என உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார், அவர் எப்படிப்பட்டவர்கள், அவரது சொத்துக்கள் என்ன, அவர் கையில் எவ்வளவு பணம் உள்ளது. அவரது பெயரில் எங்கு எல்லாம் இடம் உள்ளது. எங்கு எல்லாம் வீடு உள்ளது. எவ்வளவு சொத்துக்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கினார். என்பதை அறிய முடியும். அதேபோல் வேட்பாளர்களின் கடன் விவரங்களையும், அவர்கள் மீது எந்தெந்த பிரிவில் எல்லாம் வழக்குகள் உள்ளது என்பதையும் பொதுமக்கள் தாராளமாக அறிய முடியும்.
இந்த ஆவணங்களை வைத்து, அடுத்த ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர் தாக்கல் செய்யும் வேட்புமனுவை ஒப்பிட்டு எவ்வளவு வருமானம் அவர் சம்பாதித்துள்ளார் என்பதையும் அறிய முடியும். உங்கள் தொகுதி வேட்பாளர்களை பற்றிய முழு விவரங்களை அறிய வேண்டும் என்றால் https://electionapps.tn.gov.in/Nominations2024/pu_nom/public_report.aspx?eid=PY22024 என்ற முகவரிக்கு செல்லுங்கள். இந்த முகவரி எதில் இருக்கும் என்றால் தமிழக தேர்தல் ஆணையத்தில் இருக்கும். அங்கு போய் 2024 லோக்சபா தேர்தல் குறித்த லிங்கை கிளிக் செய்தால் நாமினேசன் லிஸ்ட்டை அறிய முடியும்.
அதில் எந்த தொகுதி என்பதை கிளிக் செய்யுங்கள்.. உதாரணமாக கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பற்றி அறிய விரும்பினால், அதில் கோயம்புத்தூர் என்ற தொகுதியை கிளிக் செய்து, பாஜக வேட்பாளர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்,. அதன்பின்னர் அண்ணாமலை பெயர் தோன்றும். அதில் நாமினேசன் செய்த பிரமாண பத்திரம் இருக்கும். பிடிஎப் வடிவில் இருக்கும், அதை டவுன்லோடு செய்து அவரை பற்றி முழுமையாக தகவல்களை அறிய முடியும். இதேபோல் உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யாரை பற்றி வேண்டுமானாலும் முகவரி, படிப்பு, சொத்துக்கள், கடன்கள், வழக்குகள் என அவரை பற்றி முழுமையாக அறியலாம்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications