Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா, தாத்தா பெயரில் உள்ள சொத்துக்கு உங்கள் பெயரில் பட்டா வாங்குவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் தந்தை அல்லது தாயார், தாத்தா அல்லது பாட்டி பெயரில் உள்ள சொத்துக்கு பட்டா வாங்குவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். உங்களுக்கு வாரிசு உரிமைப்படி வந்த சொத்தாக இருந்தால் அல்லது உயில் ஆவணத்தின்படி சொத்து வந்திருந்தால் அல்லது செட்டில்மெண்ட் பத்திரப்படியோ சொத்து வந்திருந்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு எளிதாக மாற்ற முடியும். அந்த பட்டாவை எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை ஒரு சொத்தை உங்கள் பெயரில் பதிவு செய்து தருகிறது என்றால், அந்த சொத்து உங்களுக்கு சொந்தம் ஆகும். அதேநேரம் அந்த சொத்து உங்கள் பெயரில் வந்தாலும், அரசின் வருவாய்துறை ஆவணங்களில் உங்கள் பெயரில் வந்தால் தான், முழுமையாக அந்த சொத்தின் உரிமையாளராக அரசால் அங்கீகரிக்கப்படுவீர்கள்.


வில்லங்க சான்றிதழ்

அதற்கு வருவாய்துறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஏன் இந்த நடைமுறை என்றால், சொத்தை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்வதை தடுக்கவும், சொத்தின் உண்மையான உரிமையாளரிடம் இருந்து, சொத்து இவருக்கு செல்கிறது என்பதை அரசே உறுதிப்படுத்தவும், சொத்தில் உள்ள நில அளவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வதும், சொத்து எந்த வில்லங்குமும் இல்லாதது என்பதை அறியவும் வருவாய்துறையில் தான் முடியும். அதாவது சொத்தின் உண்மையான உரிமையாளராக மாற்றுவது வருவாய்துறை தான்.

முன்பெல்லாம் பட்டா வாங்குவது கடினமான வேலையாக இருந்த்து. தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அலைந்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. உங்கள் சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்த பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்மந்தமாக நீங்கள் நேரில் போய் விண்ணப்பிக்க வேண்டும்.

தாசில்தார் ஆபீஸில் மாற்றுவது எப்படி

www.tn.gov.in/LA/forms என்ற இணையதளத்தில் பட்டா மாற்றம் செய்ய 3 பக்க விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பின்னர் அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்து தருவது தான் முன்பு இருந்த நடைமுறையாக இருந்தது,.

ஆனால் இப்போது யாரும் பட்டா வாங்க தாசில்தார் அலுவலகம் செல்ல தேவையில்லை.. ஆன்லைனிலேயே நீங்கள் உங்கள் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்லாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம், உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என இரண்டு விதமாக ஆன்லைனில் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

சொத்து எப்படி மாறும்

அப்பா பெயரில் உள்ள நிலத்திற்கு பட்டா வாங்க வேண்டும் என்றால், வாரிசு உரிமை சட்டப்படி உங்கள் பெயருக்கு சொத்து மாறியிருக்க வேண்டும். அல்லது சொத்தினை பாகப்பிரிவினை மூலம் பிரித்து பத்திரப்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படியும் இல்லை என்றால், உயில் மூலம் சொத்தினை உங்கள் பெயரில் மாற்றியிருக்க வேண்டும்.

ஆவணங்கள் என்னென்ன

தொடர்ந்து நிலத்தின் பட்டா சான்று, வாரிசு சான்று (சான்றிதழ் இருந்தால், நிலத்தின் உரிமை பெற்றவருடைய பெயர் இருந்தால்), உங்கள் ஆதார் அட்டை அல்லது வேறு புகைப்படம் கொண்ட அடையாளச் சான்று (ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது, மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை) அப்பா பெயரில் உள்ள நிலத்தின் பத்திரப் பதிவு சான்று, நிலத்தின் புலனாய்வு எண் (Survey number), உங்கள் தொலைபேசி எண் போன்றவை வேண்டும். இவற்றை வைத்து இ சேவை மையத்தில் போய் விண்ணப்பித்தால் 15 முதல் 30 நாளில் உங்கள் பெயரில் பட்டா மாறிவிடும்.

இல்லை உங்களுக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற விரும்புகிறீர்கள் என்றால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பட்டா பெறலாம்.

ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

பட்டா- பெயர் மாற்றம் அல்லது புதிய பட்டா வாங்குவதற்கு முதலில் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.

பின்னர் 'பட்டா மாறுதல் விண்ணப்பிக்க' அதில் (Apply Patta transfer) என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அது https://tamilnilam.tn.gov.in/citizen/ தளத்திற்கு போக வேண்டும்.

பின்னர் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு எஸ்எம்ஸ் மூலம் ஓடிபி வரும். அதை கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களை நீங்கள் தர வேண்டும்.

விவரங்கள்

அதை தொடர்ந்து உங்களுடைய நிலம் அல்லது வீடு எந்த மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி (சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாள்), ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை நில விவரங்களாக நீங்கள் வரிசையாக கொடுக்க வேண்டும்.

அப்பா பெயர் பட்டா

அதன் பின்னர் அப்பா அம்மாவிடம் வாங்கிய சொத்து என்றால் தானப்பத்திரம், விற்பனையில் வாங்கிய சொத்து என்றால் கிரையப் பத்திரம், உங்களுக்கு உறவினர்களிடம் இருந்து பாகமாக கிடைத்த சொத்து என்றால் பாகப்பிரிவினை பத்திரம் போன்ற ஏதாவது ஒரு சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ அந்த வீட்டில் வசிப்பதற்கான சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் தர வேண்டும் டாக்குமெண்ட் வடிவில் இதனை ஆன்லைனில் அப்லோட் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

பட்டா மாற கட்டணம்

தொடர்ந்து விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை இணையவழியில் நீங்கள் செலுத்த வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் போது, கூகுள்பே, போன்பே, பேடிஎம் உள்பட யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400 ரூபாயும், அதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டியதிருக்கும்.

பட்டா மாறுதல்

கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு, பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதியை குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தின் எண் உடன் சேர்த்து விண்ணப்பம் பெறப்பட்டது என்று தெரிவிக்கப்படும். அத்துடன் உங்களிடம் பெறப்பட்ட சேவைக் கட்டணம் குறித்த விவரம், பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று எஸ்எம்எஸ் வரும். தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இந்த எஸ்எம்எஸ் உங்கள் மொபைலுக்கு வரும்.

How to get a patta in your name for a property in your father s or grandfather s name

அதன் பின்னர் சில நாட்களுக்கு பின்னர் அப்பா பெயரில் இருந்து மாறி பட்டா உங்கள் பெயரில் கிடைக்கும். மேலும், விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு சென்று விண்ணப்ப எண்ணை கொடுத்து பயனர்கள் அறிந்து கொள்ளலாம். பட்டா 15 நாட்களிலேயே உங்களுக்கு ஆன்லைனில் வந்துவிடும். அதிகபட்சம் 30 நாளில் பட்டா ஆன்லைனில் வந்துவிடும். அதை டவுன்லோடு செய்யலாம். அதேநேரம் பட்டா வாங்கும் போது, பட்டா அளவும், பத்திரத்தில் உள்ள அளவும் சரியாக உள்ளதை அறிந்து கொள்ளுங்கள். தவறாக குறிப்பிடவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தால் திருத்தி தருமாறு வருவாய் துறையில் பதிவு செய்யுங்கள். பலர் சர்வே அளவை கவனிக்காமல் விட வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+