ரொம்பவே ஈஸி.. சிலிண்டர் புக் செய்யும் போது 1000 ரூபாய் சலுகை பெறலாம்.. எப்படி தெரியுமா
சென்னை: இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் ரூ. 1,105.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1000 வரை சலுகை கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா... இந்த சலுகையை எப்படிப் பெறலாம் என்று பார்க்கலாம்..!
இந்தியாவில் இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 1,105.00.. நாம் முழு தொகையைச் செலுத்தியே இப்போது சிலிண்டர்களை பெறுகிறோம். மானியங்கள் நேரடியாக நமது வங்கிக் கணக்கில் வந்துவிடுகிறது.
14.2 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டர், மானியம் பெறுபவர்கள் மானியம் பெறாதவர்கள் என இரு தரப்பிற்கும் ரூ. 1,105.00க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1000 ரூபாய் வரை சலுகை கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?

கேஸ் சிலிண்டர்
தொடக்கக் காலத்தில் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டர் காலியாகிவிட்டால், ஒவ்வொரு முறையும் நேரடியாக ஏஜென்சிக்கு சென்றே புக் செய்து வாங்கி வர வேண்டும். போன்கள் வந்த பிறகு இந்த நிலை மாறியது. வீட்டில் இருந்தபடியே போன் செய்து புக்கிங் செய்யலாம் என்ற முறை அமலுக்கு வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த முறையில் தான் கேஸ் சிலிண்டர்களை பெரும்பாலானோர் புக் செய்து வருகின்றனர். இப்போது நாம் இதையும் தாண்டி ஒருபடி மேலே சென்றுவிட்டோம்.

புக்கிங்
இப்போது பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும் நம்மால் சிலிண்டர்கள் புக் செய்ய முடிகிறது. இதற்கு மொபைலில் பேலன்ஸ் கூட தேவையில்லை. இணைய வசதி அல்லது வை-பை வசதி இருந்தாலே போதும். இதற்காக இருக்கும் பல்வேறு சைட்களில் நம்மால் கேஸ் சிலிண்டர்களை புக் செய்ய முடியும். அதிகாரப்பூர்வ இணையதளம், செயலிகளிலும் நாம் புக் செய்யலாம்.. அதேபோல அமேசான், பேடிஎம் உள்ளிட்ட தனியார் செயலிகள் மூலமாகவும் கூட நாம் கேஸ் சிலிண்டர்களை புக் செய்யலாம்.

ரூ 1000 வரை கேஷ்பேக்
அப்படித்தான் பேடிஎம் செயலி கேஸ் புங்கிங் செய்யும் போது கேஷ்பேக்கை அள்ளி தருகிறது. அதாவது ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது நமக்கு ரூ. 1000 வரை கேஷ்பேக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மிகவும் எளிதாக நாம் இந்த கேஷ்பேக்குகளை பெறலாம். முதலில் GAS1000 என்ற ப்ரமோ கோடை பயன்படுத்தி, 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நம்மால் கேஷ்பேக் பெற முடியும். அடுத்து FREEGAS ப்ரோமோ கோட் மூலம் ஒவ்வொரு 500ஆவது வாடிக்கையாளருக்கு ரூ.1000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

சலுகை
இது தவிர கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்தால் தனியாக கேஷ்பேக் கிடைக்கிறது. அதேபோல குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் கூட நம்மால் கேஷ்பேக்குகளை பெற முடியும். இதற்கான ப்ரமோகோட்களும் கூட அந்த செயலியிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ப்ரமோ கோட்களை பயன்படுத்தி நாம் மிக எளிதாக 1000 ரூபாய் வரை நம்மால் கேஷ்பேக் பெற முடியும்.

எப்படிப் பெற வேண்டும்
பேடிஎம் செயலியில் கீழே ஸ்க்ரால் செய்து, புக் கேஸ் சிலிண்டரை கிளிக் செய்யவும்.. அங்கு பாரத், ஹெச்.பி., இண்டேன் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். நாம் நமக்கான நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின் ஐடி அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை அதில் பதிவிட்டு, பிரோசீட் (Proceed) பட்டனை அழுத்தவும். அடுத்த பக்கத்தில் கீழே அப்ளை ப்ரமோகோட் என்ற இடத்தில் தேவையான ப்ரமோகோடை பயன்படுத்தி சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். புக் செய்யும் முழு தொகையை நாம் செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு சில மணி நேரங்களில் கேஷ்பேக் வந்துவிடும்.

இளைஞர்கள் ஆர்வம்
இன்னுமே கூட போன் மூலம் புக் செய்பவர்களுக்கு இது ஒரு பக்காவான மாற்றாக இருக்கும். ஏனென்றால், இதுபோன்ற செயலிகள் மூலம் புக் செய்ய இணைய வசதி மட்டும் இருந்தால் போதும்.. பேலன்ஸ் கூட தேவையில்லை. மேலும் கூடுதல் கட்டணங்களும் எதுவும் இல்லை. கூடவே கேஷ்பேக்கும் கிடைப்பதால் இளைஞர்கள் பலரும் இதில் இருந்தே புக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications