Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெறுவதில் புதிய மாற்றம்.. தொலைந்து போனால் புதிய அட்டை பெறுவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய ரேஷன் அட்டை பெறுவதில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டு தொலைந்து விட்டது அல்லது உடைந்து விட்டது என்றால் புதிய அட்டையை உடனடியாக பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.

பலருக்கும் குடும்ப அட்டை தொலைந்துவிட்டால் நகல் குடும்ப அட்டையை எப்படி பெறுவது, அதற்கு எவ்வளவு பணம் ஆகும். அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி குழப்பம் இருக்கும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்,.

How to get duplicate ration card in Tamil Nadu by online and offline?

உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு தொலைந்து போனால் பதற்றப்பட வேண்டாம். நகல் குடும்ப அட்டையை சில வழிமுறைகள் மூலம் அளிதாக பெற முடியும். ரேஷன் கார்டு இருந்தால் தான் அரிசி உள்ளிட்ட பொருட்களையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெற முடியும் என்பதால் தொலைந்துவிட்டால் உடனே வாங்குவதற்கு விண்ணப்பித்து விடுங்கள்.

தொலைந்து போனால் புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கு சில ஆவணங்கள கண்டிப்பாக தேவைப்படும். அப்படிப்பட்ட ஆவணங்கள் எவை என்பதை பார்ப்போம். உங்களின் குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் கூடிய பழைய குடும்ப அட்டை நகல்,

நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் தான் வசிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கான சான்றிதழ் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை (வசிக்கும் முகவரி இருக்க வேண்டும்)

பாஸ்போர்ட்,

சொந்த வீடு உள்ளவர்கள் சொத்து வரி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது மின் கட்டண ரசிது அல்லது கேஸ் சிலிண்டர் பில் ரசிசு

லீசுக்கு குடியிருக்கிறீர்கள் என்றால் வாடகை ஒப்பந்தம் அதாவது லீசு ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை, தொலைப்பேசி பில், வங்கி கணக்கு பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் என ஏதாவது ஒரு சான்றிதழ் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆதார் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆதாருடன் இருப்பிட சான்றிதழை நிரூபிக்க தேவையான ஏதாவது ஒரு ஆவணம் இருந்தால் ஒரு மாதத்திற்குள் நீங்கள் புதிய ரேஷன் கார்டை பெற்றுவிட முடியும். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேராக சென்று, உங்கள் குடும்ப அட்டை எப்போது தொலைந்தது என்பது குறித்து கடிதம் எழுதி கொடுக்க வேண்டும். அத்துடன் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை குடும்ப அட்டை அதாவது ஸ்மார்ட் கார்டு உடைந்துவிட்டது என்றாலும் அதையும் சமர்ப்பித்து புதிய அட்டையை பெறலாம். ஒருவேளை குடும்ப அட்டை நகல் இல்லை என்றால், இணையத்தின் மூலம் குடும்ப அட்டையை நகல் எடுத்து அதை சமர்ப்பியுங்கள். அவர்கள் தற்காலிகமாக 10 இலக்க எண்களை உங்களுக்கு வழங்குவார்கள். அதன் மூலம் நீங்கள் புதிய ரேஷன் கார்டு வரும் வரை பொருட்களை வாங்கி கொள்ளலாம். அதன்பிறகு புதிய குடும்ப அட்டை உங்கள் முகவரிக்கு வந்துவிடும்.

ஒருவேளை ஆன்லைனிலேயே தொலைந்த குடும்ப அட்டை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், அதற்கும் வழி உள்ளது.. இதன்படி, உங்கள் ரேஷன் அட்டை தொலைந்து போயிருந்தாலோ அல்லது ஊர் மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேஷன் கார்டுகளை கேட்டு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 45 ரூபாயை இணையவழியில் கியூ.ஆர். கோடு அல்லது நெட் பாங்கிங் வழியாக செலுத்தினால் புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

https://www.tnpds.gov.in/என்ற இணைய முகவரியை உங்கள் மொபைல் அல்லது கணிணியில் சொடுக்குங்கள். உள்ளே சென்றால், வலது புறத்தில் நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணபிக்க என்று இருக்கும்.அதை கிளிக் செய்யுங்கள்.அதில் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை கொடுங்கள். அதில் கேப்ட்சா குறியீடு இருக்கும் அதை கொடுத்து உள்ளே செல்லுங்கள்.உள்ளே சென்று விண்ணப்பித்து குடும்ப அட்டை நகலை பெறலாம். அதற்கு கட்டணம் செலுத்த கேட்கும். அதற்கான தொகையை ஆன்லைனிலேயே யுபிஐ அல்லது வங்கி கணக்கு மூலம் செலுத்தினால், உங்கள் வீட்டிற்கே நகல் குடும்ப அட்டை வந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+