ரொம்ப ஈசி.. வெறும் 7 ஸ்டெப்தான்.. எளிதாக பாஸ்போர்ட் பெற முடியும்.. முதலில் இதை படிங்க!
சென்னை: இணையம் மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்காக அப்பாயிண்ட்மெண்ட் பெறுவது எப்படி என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பல்வேறு சேவைகள் இணைய ரீதியாக வழங்கபட்டு வருகிறது. ஆன்லைன் சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதிலும் ஆதார் வந்த பின் ஆன்லைன் சேவைகள் அதிகரித்துவிட்டன. ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. ஆதார் எப்படி ஆன்லைன் சேவைகளை அதிகப்படுத்தியது அதேபோல் தற்போது பாஸ்போர்ட் பெறுவதும் ஆன்லைன் மூலம் எளிதாகிவிட்டது.

இணையம் மூலம் பாஸ்போர்ட் பெறுவதற்காக அப்பாயிண்ட்மெண்ட் பெறுவது எப்படி என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
நீங்கள் இந்தியாவில் உள்ள இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் பின்வரும் வழிகளை பின்பற்றினாலே நாம் எளிதாக பாஸ்போர்ட்டை பெற முடியும்.
படி 1 பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்டலில் பதிவு செய்யவும். இதில் உங்களுக்கு என்று ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து கணக்கு தொடங்க வேண்டும். (https://passportindia.gov.in/ என்ற பக்கத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள "Register Now" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்).
படி 2 படி 1 இல் உருவாக்கப்பட்ட யூசர் ஐடி மூலம் பாஸ்போர்ட் மூலம் சேவா ஆன்லைன் போர்ட்டலில் உள்நுழைக.
படி 3 "Apply for Background Verification for GEP" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 4 பக்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ள படிவத்தில் தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
படி 5 சந்திப்பைத் திட்டமிட, " Pay and Schedule Appointment" திரையில் உள்ள "View Saved/Submitted Applications" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

இதன்பின்தான் உங்களுக்கான பாஸ்போர்ட் அலுவலக புக்கிங்கை மேற்கொள்ள முடியும்.
அனைத்து PSK/POPSK/PO களிலும் அப்பாயிண்ட்மெண்ட் பெற, முன்பதிவு செய்வதற்கு ஆன்லைன் கட்டணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்:
கிரெடிட்/டெபிட் கார்டு (மாஸ்டர்கார்டு மற்றும் விசா)
இன்டர்நெட் பேங்கிங் (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பிற வங்கிகள்)
UPI கட்டணம்
படி 6 அப்ளிக்கேஷன் எண் (ARN)/அப்பாயிண்ட்மென்ட் எண் அடங்கிய விண்ணப்ப ரசீதை பிரிண்ட் எடுக்க , "Print Application Receipt" இணைப்பைக் கிளிக் செய்யவும்.

ஆனால் இனிமேல் இந்த பிரிண்ட் காப்பியை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் இல்லை. வெறுமனே நமக்கு வந்திருக்கும் மெசேஜை காட்டினாலே போதும்.
படி 7 அப்பாயிண்ட்மெண்ட் உறுதியான பின் அசல் ஆவணங்களுடன் அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட் சேவா கேந்திரா (பிஎஸ்கே)/மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை (ஆர்பிஓ) பார்வையிடவும்.
அங்கே பணிகள் முடிந்த பின் போலீஸ் வெரிஃபிகேஷன் குறிப்பிட்ட நாளில் உங்கள் வீட்டிற்கு வரும். அதன்பின் உங்களுக்கு பாஸ்போர்ட் சில நாட்களில் வீட்டு விலாசத்திற்கு வந்து சேரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications