கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் பெறாமல் குறுகிய கால தேவைகளுக்கு பணம் பெற வழிகள் என்னென்ன?
சென்னை: கிரெடிட் கார்டு அல்லது தனிநபர் கடன் பெறாமல் குறுகிய கால தேவைகளுக்கு பணம் பெறுவதற்கான சில வழிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எப்போதுமே அவசர காலங்களில் கையில் பணம் இருப்பு வைத்திருப்பது என்பது மிகவும் முக்கியமானது.
இதுகுறித்து வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் தனது சமூகவலைதளங்களில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கிரெடிட் கார்டு அல்லது தனிநபர் கடன் அல்லாது குறுகிய கால தேவைகளுக்கு பணம் பெறுவதற்கான வழிகளை பார்க்கலாம்.

எப்போதும் அவசர கால நிதி வைத்திருப்பது முக்கியம். அது இத்தகைய அவசர தேவைகளின் போது, பிறரைக் கையேந்தாமல், சமாளிக்க உதவும். குறைந்தபட்சம் 3 மாதம் முதல் 6 மாதம் அல்லது ஒரு வருடத் தேவைகளுக்கான அவசர கால நிதியினை வைத்திருப்பது நலம்.
குறுகிய கால தேவைகள்
குறுகிய கால தேவைகளுக்கு பணம் பெறும் வழிகள் பின்வருமாறு:
வீட்டிலுள்ள அத்தியாவசிய பொருட்களைத் தவிர மற்ற பொருட்களை விற்கப் பாருங்கள். உதாரணமாக, உங்களுடைய வீட்டிலுள்ள அந்த காலத்து வெண்கலப் பானை, இரும்பு பெட்டி போன்றவற்றை விற்று பணமாக்கலாம்.
அலுவலகத்தில் அடுத்த மாதத்திற்கான சம்பளத்தை இப்போதே பெற முயலுங்கள். பொதுவாக அலுவலகங்களில் முன்கூட்டியே சம்பளம்(Salary advance) திட்டங்கள் இருக்கும். அதன் மூலம் பணம் பெறப் பார்க்கலாம்.
முதலீடுகள்
முதலீடுகளை முன்கூட்டியே பணமாக மாற்றப் பாருங்கள். உதாரணமாக, உங்களது வைப்பு நிதியினை நடுவில் எடுக்கலாம். அதற்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம். கொஞ்சம் வட்டி இழக்கலாம். அது பரவாயில்லை. கடன் இல்லாதிருப்பதே முக்கியம். பங்குகள் இருந்தால் விற்கலாம். பரஸ்பர நிதி அலகுகள் இருந்தால் பணமாக மாற்றலாம். தங்கத்தினை விற்கலாம். நிலத்தினை விற்கலாம்.
நிதி திட்டமிடல்
வீட்டின் நிதி திட்டமிடலில் உடனடியாக மாற்றம் செய்யுங்கள். பணத்தை சேமிக்கப் பாருங்கள். உதாரணமாக, உங்களது நிதி திட்டமிடலில், தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்ற பல்வேறு உபரி பயன்பாடுகள் இருக்கும். அவற்றை தற்காலிகமாக நிறுத்தப் பாருங்கள். அதன் மூலம், அந்த மாதம் செலுத்த வேண்டிய தொகை மிச்சமாகும்.
உணவு, உடை
உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே அடிப்படைத் தேவை. அதைத் தவிர எல்லாவற்றிலும் பணத்தை மிச்சம் பிடித்து, பணம் சேமிக்கப் பாருங்கள். உங்களுக்கு ஏற்கனவே, ஏதாவது கடன் இருப்பின், அந்த கடனை கொஞ்சம் தாமதமாக செலுத்தக் கேட்டுப் பாருங்கள்(deferring payment).
வீட்டுக் கடன்
உதாரணமாக, உங்களுக்கு வீட்டுக் கடன் இருந்தால், வங்கியில் இரண்டு தவணைகள் கட்ட இயலாது. பின் கட்டுவதற்கு அனுமதி வாங்கலாம். கொரோனா காலத்தில், இவ்வாறு வங்கிகள் தவணைகளை பின்னர் கட்டுவதற்கு அனுமதி தந்தன.
தங்கம், தேசிய சேமிப்பு பத்திரம் போன்ற முதலீடுகளை அடமானமாக (pledge) வைத்து கடன் பெறப் பாருங்கள்.
கடன் கிடைக்கும்
இவை கடன் என்றாலும் கூட, இவற்றில் வட்டி விகிதம் குறைவு. இவை அடமானம் சார்ந்த கடனாகையால், வட்டி விகிதம் குறைவு. தங்கத்தின் மதிப்பில் 75 - 90% வரை கடன் கிடைக்கலாம்.
வாகனத்தை விற்று
வீட்டின் வாகனத்தை விற்று விட்டு, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.
வாடகை வீடு எனில், வீட்டு உரிமையாளரிடம் வாடகைப் பணத்தில் குறைவாக செலுத்த அனுமதி கேளுங்கள்.
முன்பணம்
அதை உங்களது முன்பணத்தில் (advance) கழித்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்.
உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருந்தால், அது சார்ந்த வேலையில் பகுதி நேரத்தில் ஈடுபடுங்கள். அந்த வேலை மூலமாக, அதிக பண வரவு வரும். உதாரணமாக, உங்களுக்கு இசைக் கருவி வாசிக்க தெரிந்து, அது சம்பந்தமான தொடர்புகள் இருந்தால், இசைக் குழுவில் பகுதி நேரமாக வேலை பார்த்து பணம் சம்பாதிக்கலாம்.
சேமநல நிதி
உங்களின் சேம நல நிதி, பொது சேம நல நிதி போன்ற ஓய்வு காலத் திட்டங்களில் பணத்தை முன்கூட்டியே, பகுதி பணத்தைப் (partial withdrawal) பெறப் பாருங்கள். இவை ஓய்வு காலத்திற்காக. இவற்றில் கைவைப்பது தவறு. ஆனாலும், கடனின்று இருப்பதென்பது முக்கியமானதாகையினால், இவற்றில் முன்கூட்டியே பகுதிப் பணம் பெறலாம்.
பணத்தை பெறலாம்
வீட்டில் வாடகை விடுவதற்கு இடமிருப்பின், வாடகைக்கு விட்டு, பணத்தைப் பெறலாம். போக்கியம் அல்லது ஒத்திக்கு விடுவதால், அதிகப் பணத்தினை உடனடியாகப் பெற முடியும். பெரிய வாடகை வீட்டில் குடியிருந்தால், மற்றொரு சிறிய வாடகை வீட்டிற்கு மாறிக் கொள்ளலாம். வாடகைப் பணம் மிச்சமாகும். குழந்தைகளின் பள்ளி தவிர எந்த ஒரு அதிகப்படியான பயிற்சி வகுப்புகளை தற்காலிகமாக நிறுத்தலாம். அதன் மூலம் பணம் சேமிக்கலாம்.
அதிக வருமானம்
திருமணமானவர் என்றால், மனைவியும் வேலைக்கு செல்லப் பார்க்கலாம். அதன் மூலம், அதிக வருமானம் கிடைக்கும்.
உங்களது தந்தை, சகோதரர் , நெருங்கிய நண்பர்கள் போன்றவர்களிடம் பணம் கேட்கலாம். அவர்களிடம் உங்களது நிலைமையை விளக்கி, சீக்கிரமாக திருப்பி தருவேன் என்ற உறுதி அளிக்கலாம். இதனை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நலம்.
கடன் இருக்கிறதா
ஏற்கனவே கடன் இருந்தால், அவற்றை ஒன்று படித்தி(debt consolidation), கடன் தவணைத் தொகையினை குறைக்கலாம். அதன் மூலம், பணம் மிச்சமாகும். முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். முதலீட்டுத் தொகையினை அவசரத் தேவைக்கு ஒதுக்கலாம்.
அலுவலகத்தில் பதவி உயர்வு கேட்கலாம். அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு.
தேவைப்பட்டால் வேலை மாறலாம். அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு.
இரு வழிகள்
எந்த ஒரு மாதாந்திர சந்தாக்களையும் நிறுத்தலாம். மாதாந்திர சந்தாக்களில் செலவாகும் பணம் மிச்சமாகும். வெளியில் உணவருந்துவதை தவிர்க்கலாம். பணம் மிச்சமாகும். அடிப்படை சேமிப்பு கணக்கிற்கு மாறலாம். பணத்தினை குறைத்து விடலாம். அதில் 0 ரூபாயினை கூட வைத்திருக்க முடியும். கடனின்றி இருப்பதே முக்கியம். உங்களுக்கு அதிக பணம் தேவை. அதற்கு இரண்டு வழிகள் உண்டு.
இரு வழிகள் என்னென்ன?
சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது = அன்றாட செலவுகளில் எவ்வாறெல்லாம் பணம் சேமிக்க முடியுமென்று பாருங்கள். பணம் அதிகமாக சம்பாதிப்பது = உங்களிடம் உள்ள பொருட்கள், திறன்கள், முதலீடுகள் வாயிலாக அதிகமாக பணத்தினை எவ்வாறு பெறுவது என்று பாருங்கள்.
மேலே குறிப்பிட்ட இரண்டின் மூலமாக, கடனினை தவிருங்கள். அவசர கால நிதியினை சீக்கிரமாக உருவாக்குங்கள். அதன் மூலம், நீங்கள் கடன் என்ற படுகுழியில் விழுவதை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications