சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் வெறும் 340 ரூபாய்.. எப்படி பெறுவது? சூப்பர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் கணிசமாக உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் வெறும் 340 ரூபாய் என்கிற அளவில் தான் இருக்கிறது.. எனவே சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.
கால மாற்றத்திற்கு ஏற்பவும், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், இந்தியா முழுவதும் நான்கு வழிச்சாலை,ஆறு வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் போடப்பட்டு வருகிறது. இப்படி நாடு போடப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுங்கச்சாவடி விதிகள்: இந்நிலையில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும்.. அதேபோல் 15 ஆண்டுகளை கடந்து காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்பதும் மத்திய அரசின் விதியாகும். இதன்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை கண்டிப்பாக மூடியிருக்க வேண்டும். ஆனால் மாறாக புதிய சுங்கச்சாவடிகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டு வருவது தான் வேதனையின் உச்சம்.
சேலம் சுங்கச்சாவடி: சரி விஷயத்திற்கு வருவோம். புதிய தரமான சாலைகள் அமைக்கப்படும் அதேநேரம் அங்கே எல்லாம் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளுடன் தான் வாழ்க்கை என்பது, சேலம், திருச்சி, மதுரை போன்ற நகரங்களின் விதியாக உள்ளது. சேலம் மாவட்ட மக்கள் எல்லாம் உண்மையில் பாவம்.. திரும்பிய பக்கம் எல்லாம் சுங்கச்சாவடி தான்..

மாதாந்திர பாஸ் யாருக்கு கிடைக்கும்: அதேநேரம் முக்கியமான ஒரு விஷயத்தை அறிய வேண்டும்.. ஒரு மாவட்டடத்தில் சுங்கச்சாவடி அமைக்கிறார்கள். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பதிவெண் கொண்ட வாகனங்கள் உள்ளூர் வாகனங்களாக கருதப்படும். அந்த வாகனங்களுக்கு மற்ற வாகனங்களை விட கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படும். உதாரணமாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் சுங்கச்சாவடியில் கார் ஜீப் வேன் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் 70 ரூபாய் என்றால், உள்ளூர் பதிவு பெற்ற வாகனங்களுக்கு வெறும் 35 ரூபாய் தான் கட்டணம். அதேபோல் பேருந்துகளுக்கு 240 என்றால், உள்ளூர் பேருந்துகளுக்கு 120 தான் கட்டணம் ஆகும். அதாவது வழக்கமான கட்டணத்தை விட பாதி கட்டணம் தான் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாதாந்திர பாஸ் எப்படி: அதேநேரம் டோல்பிளாசா அமைந்துள்ள மாவட்டத்தின் பதிவு எண் கொண்ட வாகனங்கள் வெறும் 340 ரூபாய்க்கு மாதாந்திர பாஸ் பெற்று பயணிக்க முடியும். இந்த சலுகை பெற விரும்புபவர்கள் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், இந்த வாகனம் உங்களுக்கானது என்பதற்கான சான்றிதழ், டோல்பிளாசா அமைந்துள்ள மாவட்டத்திற்கு ரிஜிஸ்டர் செய்யப்பட்ட வாகனம் என்பதற்கான ஆர்சி புக் நகல், உள்ளிட்டவற்றுடன், எல்ஆர்பி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் ஊர் அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் அளிக்க வேண்டும்.
மாதாந்திர பாஸ் கட்டணம்: அதன்பிறகு நீங்கள் எத்தனை முறை வேண்டும் என்றாலும் பயணிக்கும் வகையில் மாதாந்திர பாஸ் கிடைக்கும். இந்த மாதாந்திர பாஸ் வெறும் 340 ரூபாய் தான். இந்த 340 ரூபாய் மாதாந்திர பாஸ் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் உள்ளது. அதை பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையமே இன்றைய விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ள படத்தை பார்த்தால் எந்த அளவிற்கு உங்களால் கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதை அறிய முடியும்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications