இதை மிஸ் பண்ணிடாதீங்க.. மோடி தரும் சூப்பர் சான்ஸ்.. ரூ.1.1 லட்சம் உங்க வங்கி கணக்கை தேடி வரும்!
சென்னை: மத்திய அரசு வழங்கும் முக்கியமான ஒரு திட்டம் மூலம் நீங்கள் எளிதாக 1.1 லட்சம் ரூபாய் பெற முடியும்.
தபால் நிலையத்தில் வழங்கப்படும் POMIS மூலம் ஆண்டுக்கு ரூ.1.1 லட்சத்தை சம்பாதிக்க முடியும். இந்த திட்டம் மூலம் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
செலவுகள் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் நிதிகளை நிர்வகிப்பது சவாலானதாக இருக்கலாம், குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இன்னும் கஷ்டம். சம்பளம் உயர்ந்தாலும்.. பணவீக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக வளர்வது கஷ்டமாக இருக்கும்.
2025 இல் பாதுகாப்பான மற்றும் நிலையான மாத வருமானத் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தை (POMIS) பயன்படுத்திக்கொள்ளலாம். POMIS மூலம் ஆண்டுக்கு ரூ.1.1 லட்சத்தை எப்படி சம்பாதிக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
POMIS திட்டம்
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் அல்லது POMIS என்பது ஒரு மொத்த வைப்புத்தொகையிலிருந்து மாத வருமானத்தை வழங்கும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். நீங்கள் தபால் அலுவலகத்தில் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்திற்கு பெறப்பட்ட வட்டி மாதந்தோறும் உங்கள் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.

5 ஆண்டுகளுக்கு மட்டுமே நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்து வைத்திருக்க முடியும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அசல் தொகையைத் திரும்பப் பெறலாம் அல்லது புதிய கணக்கைத் திறப்பதன் மூலம் திட்டத்தைத் தொடரலாம்.
இரண்டு அல்லது மூன்று கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இடமளிக்கும் வகையில் தனிநபர் மற்றும் கூட்டுக் கணக்குகளையும் POMIS அனுமதிக்கிறது. தனிநபர் கணக்கில், 9 லட்சம் ரூபாய் வரையிலும், கூட்டுக் கணக்கில், 15 லட்சம் ரூபாய் வரையிலும் டெபாசிட் செய்யலாம். இதற்கான வட்டி மாதம் மாதம் உங்களுக்கு வழங்கப்படும்.
எப்படி கணக்கைத் திறப்பது: தகுதி - மேயர் வயது கொண்ட எல்லோரும் கணக்கு தொடங்க முடியும். மைனர்கள் (பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களுடன்) உட்பட எந்தவொரு இந்திய குடிமகனும் POMIS கணக்கைத் திறக்கலாம்.
தேவைகள்: அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும், ஆதார் அட்டை மற்றும் அடையாளச் சான்றுக்கு பான் கார்டு ஆகியவை கட்டாயம்.
கணக்கு வகைகள்
தனிநபர் மற்றும் கூட்டு கணக்குகள் உள்ளன. தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம்.
ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் பெறுவது எப்படி: தற்போதைய வட்டி விகிதம் 7.4 சதவீதம்.இதன் மூலம் ஆண்டுக்கு 1லட்சம் பெற முடியும்.
கூட்டுக் கணக்கு உதாரணம்: நீங்கள் ரூ.15 லட்சத்தை கூட்டாக டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 சம்பாதிப்பீர்கள், இதன் விளைவாக ஆண்டுக்கு ரூ.1,11,000 உத்தரவாத வருமானம் கிடைக்கும்.
தனிநபர் கணக்கு உதாரணம்: ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்வதன் மூலம் மாதத்திற்கு ரூ.5,550, ஆண்டு வட்டியாக மொத்தம் ரூ.66,600 கிடைக்கும்.
முன்கூட்டியே மூடல்: ஓராண்டு நிறைவுக்கு முன் பணம் எடுப்பது அனுமதிக்கப்படாது.
விலக்குகள்: ஒரு வருடம் கழித்து ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டால், 2% விலக்கு பொருந்தும்; மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டால், 1% விலக்கு அளிக்கப்படும்.
மூடும் செயல்முறை: முன்கூட்டியே மூடுவதற்கு சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் பாஸ்புக்குடன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
தபால் நிலையம் சேமிப்பு மூலம் மாதம் நிலையான வருமானத்தை இலக்காகக் கொண்டவர்களுக்கு POMIS பாதுகாப்பான விருப்பமாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications