வேற லெவல்! தினசரி ரூ.87 போட்டால் போதும்! ரூ.11 லட்சம் அள்ளி தரும் சூப்பர் திட்டம்! இது நல்லா இருக்கே
சென்னை: இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்களுக்கு உதவும் வகையில் எல்ஐசி நிறுவனம் பல்வேறு பாலிசிகளை வழங்குகிறது. அதன்படி இதில் நாம் தினசரி வெறும் 87 ரூபாயை முதலீடு செய்தால் போதும் 11 லட்சம் வரை பெறலாம். இந்தத் திட்டம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது நாம் மாதாமாதம் சம்பளத்தை வைத்து வாழ்க்கையை நடத்துவதே பெரும் சிரமமாகிறது. இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக எதாவது பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்தினர் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே, இதுபோன்ற காலங்களில் இன்சூரன்ஸ் என்பது காட்டாயாமாகிவிடுகிறது. நமக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டாலும் கூட நமது குடும்பத்தினர் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்க இன்சூரன்ஸ் தேவைப்படுகிறது.
எல்ஐசி: இதற்கிடையே எல்ஐசி நிறுவனம் புதிதாக எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் என்ற ஒரு தனித்துவமான சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வரும் காலத்தில் குடும்பத்திற்குத் தேவையான செல்வத்தை நாம் சேமிக்கலாம். அதேபோல எதாவது எமெர்ஜென்சி என்றால் இது நமது குடும்பத்திற்குத் தேவையான நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது.
எல்ஐசி ஆதார் ஷீலா என்பது சேமிப்பையும் வாழ்க்கைக்கான பாதுகாப்பையும் ஒரு சேர வழங்கும் ஒரு அற்புதமான திட்டமாகும். பாலிசி காலத்தில் பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், குடும்பத்திற்குத் தேவையான நிதிப் பாதுகாப்பை இது வழங்கும். அந்த குடும்பம் இக்கட்டான சூழலில் நிற்கத் தேவையில்லை. அவர்களுக்குக் காப்பீட்டுத் தொகை எளிமையாகக் கிடைக்கும்.
வசதிகள்: அதேபோல பாலிசிதாரர் பாலிசி காலத்தை முழுமையாக முடித்தால், அவருக்கு முதிர்வு தொகையும் வழங்கப்படும். கூடுதலாக, இது பாலிசி லோன் வசதியையும் வழங்குகிறது. அதாவது பாலிசியை வைத்து நாம் 90% வரை கடனாகவும் பெற முடியும். மேலும், இதில் இருந்து வரி பலன்களையும் நாம் பெறலாம்.
இது கடன் வசதியையும் நமக்கு அளிக்கிறது. மேலும், தேவைப்பட்டால் இந்த பாலிசிதாரர்கள் மோட்டார் இன்சூரன்ஸையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டம் குறிப்பாகப் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
ரூ. 87 செலுத்தினால் போதும்: உதாரணமாக, நீங்கள் 15 வயதிலிருந்து 25 வயது வரை ஒரு நாளைக்கு ரூ.87 டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் 31,755 ரூபாயை சேர்க்க ஓராண்டு ஆகும். அதன்படி இந்தத் திட்டத்தில் நீங்கள் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் நிலையான முதலீடு செய்து வந்தால் 3,17,550 ரூபாயை நீங்கள் டெபாசிட் செய்வீர்கள்.. இந்தத் திட்டம் 70 வயதாகும் போது முதிர்ச்சி அடையும் அப்போது அதிகபட்சமாக ரூ.11 லட்சம் வரை பாலிசிதாரர் பெறுவார் என்பதே இத்திட்டத்தின் சிறப்பாகும்.
இந்த பாலிசியை எடுத்தவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்குக் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இந்த எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் பெண்கள் மட்டுமே இணைய முடியும். 8 வயது முதல் 55 வயது வரை இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். இந்த பாலிசியின் கீழ் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு நாம் தொகையைச் செலுத்தலாம். பெண்கள் 70 வயதாகும் போது இந்த பாலிசி முதிர்வு பெறும்.
ஆவணங்கள்: இந்த பாலிசியை வாங்க அடையாளச் சான்று - ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட்.. அட்ரஸ் ப்ரூப் - ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சாரக் கட்டணம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும்/அல்லது பாஸ்போர்ட்.. வருமானச் சான்று - வருமான வரி அறிக்கை அல்லது சேலரி சிலிப் ஆகியவை தேவை.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications