பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ. 3000.. டோக்கன் வரவில்லை என்றால் என்ன செய்வது? இதை பண்ணுங்க போதும்!
சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் பொங்கல் பரிசு மற்றும் ரூ. 3000 ரொக்கம் வழங்கப்படுகிறது. இதை எளிதாக ரேஷன் கடைகளில் பெற முடியும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு சிறப்புப் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தொகுப்பில் ₹3,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி மற்றும் சேலைகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கலுக்கு முன்பாக விநியோகிக்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும்.
பொங்கல் பரிசு வாங்குவது எப்படி?
எப்படி பொங்கல் பரிசு வாங்குவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இது மிகவும் எளிமையானதே. உங்களுக்கு ஒரு டோக்கன் ரேஷன் கார்டு அடிப்படையில் முதலில் வழங்கப்படும். அதாவது அரிசி ரேஷன் கடைதாரர்களுக்கு பொங்கல் டோக்கன் வழங்கப்படும். இது நேரடியாக உங்கள் வீடுகளில் வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் வீடுகளில் இல்லையென்றால்.. பொங்கல் பரிசு டோக்கன் மீண்டும் ரேஷன் கடைக்கே எடுத்து செல்லப்பட்டுவிடும்.
இதனால் பொங்கல் பரிசு வழங்கப்படும் நேரங்களில் ரேஷன் கடைகளில் நேராக விசாரித்தால் உங்கள் டோக்கன் பெற முடியும். டோக்கனில் எந்த நேரத்தில் வரவேண்டும் என்ற தகவல் இருக்கும். அந்த நேரத்தில்.. பொருட்கள் வாங்கலாம். டோக்கன் கிடைத்தவர்கள் அதை காட்டி ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை வாங்கிக்கொள்ளலாம்..
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக டோக்கன் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த டோக்கனில் முக்கியமான விவரங்கள் இடம்பெற்று உள்ளன. தமிழ்நாட்டில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்டவை பரிசுத் தொகுப்பில் இடம்பெறுகிறது.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு - 2026 டோக்கனில்,
கடையின் பெயர் :
கு.அட்டைதாரர் :
பெயர் :
கு.அட்டை எண் :
கிராமம் / தெரு :
டோக்கன் எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில், ஜனவரி 9ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அரசு பொங்கல் பண்டிகைக்கான கரும்பு கொள்முதலை ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திற்குப் பிறகு மட்டுமே தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகை
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பத்தில் ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனினும், மாநிலத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இம்முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. ரூ.5,000 வழங்கினால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, ரூ.3,000 வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இதனால் பெரிய நிதிச் சுமை இருக்காது என முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், விவசாயத்திற்கும் மனித குலத்திற்கும் நன்றி செலுத்தும் முக்கிய பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட உதவும் வகையில், ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை பரிசு
தமிழகத்தின் அதிகரித்துவரும் நிதி பற்றாக்குறை, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பல நலத்திட்டங்கள், மானியங்கள், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள், மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் போன்ற காரணங்களால் நிதி சவால்கள் அதிகரித்தன. இதன் விளைவாக, ரூ.5,000-க்கு பதிலாக ரூ.3,000 வழங்க அதிகாரிகள் பரிந்துரைக்க, முதல்வர் ஸ்டாலின் அதனை ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications