இனி மின்சார பில் பற்றி கவலையே வேண்டாம்! மத்திய அரசு தரும் 40% மானியம்! எப்படி பெற வேண்டும் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் சமீபத்தில் தான் அதிகரிக்கப்பட்டது. ஆனால், மின்சார பில் குறித்து நாம் கவலைப்படாமல் இருக்க மத்திய அரசின் திட்டம் ஒன்று இருக்கிறது. இதில் அவர்கள் 40% மானியத்தையும் தருகிறார்கள்
ஒவ்வொரு ஆண்டும் மின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் வரும் காலத்தில் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்க உள்ள நிலையில், மின் தேவை இப்போது இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.
இப்போது நமக்குக் கிடைக்கும் மின்சாரம் பெரும்பாலும் அனல் மின் நிலையங்களில் இருந்து தான் கிடைக்கிறது. அதாவது நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரமே இப்போது பெரும்பாலும் நமது மின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.

மின்சாரம்
இருப்பினும், இந்த அனல் மின் நிலையங்களால் மோசமான காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், புவி வெய்ய மயமாதலுக்கும் இது முக்கிய காரணமாக உள்ளது. ஏற்கனவே, பருவநிலை மாற்றம் காரணமாக அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால், குறைவான மாசை ஏற்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி உலக நாடுகள் திரும்பிக் கொண்டிருக்கின்றன. இதில் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சோலர் மின்சாரம் முக்கியமானதாக மாறியுள்ளது.

சோலார் மின்சாரம்
இந்தியாவில் ஒரு சில மாதங்களைத் தவிர பெரும்பாலான நாட்கள் நமக்கு வெயில் அடிக்கவே செய்யும். இதனால் இந்தியாவும் சோலர் மின்சாரத்தை நோக்கித் திரும்பி வருகிறது. மத்திய அரசு இது தொடர்பாக மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இருப்பினும், தமிழ்நாட்டில் இப்போது சோலர் பேனல்களை நிறுவும் பணிகள் மந்தமாகவே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த வேகத்தில் சென்றால் ஜீரோ கார்பன் இலக்கை அடைவதில் சிரமம் ஏற்படும். இதனால் சோலார் பேனல்களை நிறுவுவதை வேகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சோலார் பேனல்கள்
வரும் 2030க்குள் அனல் மின் நிலையங்கள் உட்பட புதை படிவ எரிபொருள் இல்லாமல் 500GW மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சோலார் பேனல்கள் நிறுவுவதை வேகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மாநில கொள்கைபடி 2022க்குள் 3,500MW மின்சாரத்தை சோலார் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், இப்போது வெறும் 354.7MW மின்சாரம் மட்டுமே சோலாரில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது முன்பு நாம் நிர்ணயித்த இலக்கை விட ரொம்பவே குறைவாகும்.

அறிவுறுத்தல்
அதேநேரம் சோலார் பேனல்கள் வேண்டி விண்ணப்பங்களும் 1500க்கும் மேல் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலை தான். இதனால் மத்திய அரசு சூரிய ஆற்றல் திட்டத்தை மார்ச் 31, 2026 வரை நீட்டித்துள்ளது. மேலும், சோலார் பேனல்கள் கோரும் நுகர்வோருக்கு வேகமாக அதற்கான ஒப்புதல்களைத் தரவும் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த விதிகள் ஏற்கனவே அமலில் இருந்தாலும் கூட, அனுமதி கிடைக்கத் தொடரவே செய்கிறது.

மத்திய அரசு மானியம்
தமிழ்நாட்டில் மாநிலம் முழுக்க மாநில அரசின் Tangedco மூலமே மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. சோலார் பேனல்களை நிரூவுவது, தங்கள் வருவாயை வரும் காலத்தில் குறைத்துவிடும் என்று அவர்கள் கருதுவதாலேயே சூரிய சக்தி திட்டத்தைத் தமிழகம் ஊக்குவிக்கத் தயங்குவதாகவும் சிலர் கூறுகின்றனர். மேலும், மத்திய அரசு இப்போது சோலார் பேனல் நிறுவ 40% மானியம் வழங்குகிறது. இது தொடர்பாகத் தமிழக அரசு விளம்பரப்படுத்துவதே இல்லை.

தமிழக அரசு
இதற்கிடையே மற்றுமொரு மின்வாரிய அதிகாரி கூறுகையில், "வீடுகளில் சோலார் பேனல் நிறுவுதல் விகிதம் தான் குறைவாக உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 4,000 மெகாவாட் திறனில் சூரியப் பூங்காக்களை அமைத்து, அதில் இருந்து வீடுகளுக்கு கனெஷ்கன்களை கொடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சில மாவட்டங்களில் இதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்

கோரிக்கை
பசுமை எரிசக்தியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, மத்திய அரசின் மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சோலார் பேனல்களை பெற https://solarrooftop.gov.in/ என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்து மானியத்தை பெறலாம். இதற்கிடையே கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 4,141 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.. இதற்கு முன்பு நவம்பர் 21ஆம் தேதி இது 3,992 மெகாவாட் இருந்ததே அதிகபட்சமாகும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications