ஒரே கையெழுத்துதான்.. வங்கி கணக்கை தேடி வரும் ரூ.11 லட்சம்.. அசர வைக்கும் திட்டம்! எப்படி சேருவது?
சென்னை: மத்திய அரசு தொடங்கி வைத்த ஒரு சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வாய்ப்பு உள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
எப்படி சேமிப்பது?: 10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
திட்டத்தின் வேறு அம்சங்கள்: இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை செலுத்தி கணக்கை தொடங்க முடியும். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை மாதம் வைப்பு தொகையாக செலுத்த முடியும்.
ஆண் குழந்தைகள் திட்டம்: இதற்கு இணையான ஒரு திட்டம் ஆண் குழந்தைகளுக்காக உள்ளது. அது National Savings Certificate (NSC) திட்டம். அதாவது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம். தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மூலம் 2 லட்சம் ரூபாய் வருவாய் எப்படி ஈட்டலாம் என்று பார்க்கலாம்.
இது அரசாங்கத்தால் வழங்கப்படும் குறைந்த ஆபத்துள்ள நிலையான வருமான திட்டமாகும், மேலும் இது இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கிறது. ஆண் குழந்தைகளுக்கான இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டம் உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் சிறந்த அம்சங்கள் மற்றும் பலன்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது சிறந்த வருவாயை உருவாக்க நிலையான வருமானம் மற்றும் உத்தரவாதமான வருமானத் திட்டத்தை எளிதாக்குகிறது. இந்த திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications