சென்னை பஸ் ஆப்பை பயன்படுத்தி எம்டிசி பேருந்துகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்வது எப்படி ?
சென்னை பஸ் ஆப்பை பயன்படுத்தி எம்டிசி பேருந்துகளின் இருப்பிடத்தை எப்படி அறிந்து கொள்வது என்பதை இப்போது பார்ப்போம்.
சென்னை: சென்னையில பொது போக்குவரத்தை நம்பி இருக்கிறவங்க இனிமே நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. ஏனெனில் தமிழக மக்கள் சென்னை பஸ் அப்படீன்ற ஆப்பை பயன்படுத்தி எம்டிசி பேருந்துகள் மற்றும் விரைவு பேருந்துகள் எங்கு வருகின்றன என்பதை எளிதாக அறிய முடியும்.
சென்னை மாநகரில் பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம், வந்து சேரும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய மொபைல் ஆப் தமிழக அரசால் கடந்த ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட தாமதத்திற்குப் பிறகு, பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) எம்டிசி பேருந்துகளின் இருப்பிடத்தை நிகழ்நேர அடிப்படையில் வழங்கும் 'சென்னை பஸ்- மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி இருந்தது.

602 வழித்தடங்கள்
3,233 எம்டிசி பேருந்துகளின் இயக்கத்தை, லொக்கேஷன் டிராக்கிங் டிவைசஸ் மூலம் கண்காணிக்க முடியும். 602 வழித்தடங்கள் வழியாக இயக்கப்படும் எம்டிசி பேருந்துகள், 6,026 நிறுத்தங்களில் நிறுத்தப்படுகின்றன இவற்றை மொபைல் மூலமாக எளிதாக அறியலாம்.

காத்திருக்க தேவையில்லை
பேருந்து எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் பேருந்து நிலையத்திற்கு வரலாம். தேவையின்றி பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படாது.

பேருந்து நிறுத்தங்கள்
சென்னையில் தினமும் 25 லட்சம் பேர் எம்டிசி பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். சென்னை மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள சென்னை பஸ் ஆப் மூலம், பயணிகள் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள அனைத்து எம்டிசி பேருந்துகளின் நேரலை இருப்பிடம், மதிப்பிடப்பட்ட வருகை நேரம் மற்றும் அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும்.

திரையில் தெரியும்
இதன் மூலம் சென்னை மக்கள்' ரயில் நிலையங்கள் மற்றும் நகரத்தில் உள்ள பிற முக்கிய இடங்களை எந்த தொந்தரவும் இல்லாமல் அடைய முடியும். இதற்கு சென்னை பஸ் ஆப்பை மக்கள் டவுன்லோடு செய்ய வேண்டும். அதில் பயனாளர்கள் 'பஸ் ரூட்' விருப்பத்தை கிளிக் செய்து, வழித்தட எண்ணை உள்ளிடும்போது, அனைத்து இயக்கப்படும் பேருந்துகளும் திரையில் தெரியும்.

அவசரநிலை
இரண்டு நிறுத்தங்களுக்கு இடையே ஓடும் பேருந்துகளின் இருப்பிடத்தைப் பார்க்க, யூசர் 'ரூட் ஆப்ஷனை' கிளிக் செய்யலாம், இதன் மூலம், அவை வரும் நேரத்தை அறிய முடியும். மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், பயணிகள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கு' பஸ் ஆப் மூலம் பேரிடர் சமிக்ஞைகளை அனுப்பலாம். பயணிகள் எளிதாக அணுகுவதற்கு வசதியாக, SOS பட்டன்' ஆப் திரையின் மேல் வலது மூலையில் வைக்கப்பட்டிருககிறது. இந்த செயலியின் ஹோம் ஸ்கிரீன்' 1 கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களின் பெயர்களையும் பரிந்துரைக்கிறது.

இரண்டு மொழி
'டிரிப் பிளானர்' அம்சத்தைப் பயன்படுத்தி, யூசர்ஸ் ஒரு பேருந்தின் வழித்தட எண்களை அறிந்து கொள்ளலாம். 'Contact Us' ஆப்ஷனில்' புகார் எண்கள் (Whatsapp/Telegram) மற்றும் 31 பஸ் டிப்போ கிளை மேலாளர்களின் தொடர்புகள் உள்ளன. Favorite ஆப்ஷனை பயன்படுத்தி பயணிகள் தங்களுக்குப் பிடித்த வழிகள் மற்றும் இடங்களைச் சேமித்து கொள்ள முடியும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழி விருப்பங்களைக் கொண்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications