Tamil nadu assembly election 2021: உங்கள் தொகுதி வேட்பாளர்களை ஆன்லைனில் அறியலாம்.. எப்படி?
சென்னை: உங்கள் தொகுதி வேட்பாளர்களை ஆன்லைனில் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் முழு தகவல்களை அறியும் வசதி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் பக்கத்தில் எந்த மாநிலம், எந்த தொகுதி என்பதை கிளிக் செய்தால், வேட்பாளர்களின் விவரம் முழுமையாக வரும். வேட்பாள்ர்கள் தாக்கல் செய்த அபிடேவிட் அதாவது அவர்களின் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் உள்ளிட்ட சுயவிவரங்கள் அடங்கிய பட்டியலை பார்க்க முடியும்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமையான நேற்று முதல் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார்கள்.

வேட்பு மனுக்கள்
தங்களுடைய தொகுதியில் எந்தெந்த கட்சி எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்ற தகவலை எளிதாக பார்க்க முடியும். இதேபோல் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என யார் எந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாலும் அவர்களது வேட்பு மனுவையும், அவர்களின் சொத்து மதிப்பு மற்றும் அவர்கள் மீது உள்ள குற்றவழக்கு விவரங்கள் என எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

மாநிலம் தொகுதிகள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் https://affidavit.eci.gov.in/candidate-affidavit என்ற இணையதளப் பக்கத்தில், உங்கள் மாநிலம் மற்றும் தொகுதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் கீழே இருக்கும் 'Filter' என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

உங்கள் பார்வைக்கு
அதன் கீழே உங்கள் தொகுதியில் எந்தெந்தக் கட்சி சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் மற்றும் சுயேட்சையாகவும் யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்ற விபரம் இருக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேட்பாளரது ப்ரொபைலில் கிளிக் செய்தால், அவர்களைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் உங்கள் பார்வையில் தெரியும். வேட்பாளர்களின் வேட்புமனுவை டவுன்லோடு செய்யவும் முடியும். உதாரணமாக தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம் தொகுதியை தேர்வு செய்தால் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் வரும்.

குடும்ப சொத்துக்கள்
அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்து, அவர்களைப் பற்றிய சொத்து விபரங்கள், அவர்கள் மேல் குற்ற வழக்குகள் பதியப்பட்டிருந்தால் அதனைப் பற்றிய விபரங்கள், மற்றும் அவர்களது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் அறியலாம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications